MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிறைச்சாலை பதிவேடுகள் கணினிமயமாக்க அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிறைச்சாலை பதிவேடுகள் கணினிமயமாக்க அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - சிறைச்சாலை பதிவேடுகள் கணினிமயமாக்க அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு

அரசியல்

சிறைச்சாலை பதிவேடுகள் கணினிமயமாக்க அமைச்சர் நிர்மல் குமார் உத்தரவு

Admin
Last updated: மே 24, 2026 7:26 மணி
Admin
Share
SHARE

புழல் மத்திய சிறைச்சாலையில் இன்று ஆய்வு மேற்கொண்ட எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், சிறைச்சாலை பதிவேடுகளை முழுவதுமாக கணினிமயமாக்க உத்தரவிட்டுள்ளார். முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொறுப்பேற்ற பிறகு, அனைத்து துறைகளின் செயல்பாடுகள் குறித்தும் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, அமைச்சர் நிர்மல் குமார் சிறைத் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

சிறைக்குள் போதைப்பொருள் புழக்கத்தை அறவே ஒழிக்கும் வகையில், அவை ஊடுருவும் வழிகளைத் தடுப்பது குறித்தும், சிறைக்கைதிகளுக்கு கொண்டுவரப்படும் பழங்கள் போன்ற பொருட்களை சிறைக்குள்ளேயே வாங்கி வழங்கும் உள் சந்தைகளை அமைக்கவும் சிறைத்துறை அலுவலர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். மேலும், சிறைச்சாலைகளில் உள்ள சமையல் கூடம், மருத்துவ வசதிகள், மருத்துவ உபகரணங்கள், குடிநீர் வசதி ஆகியவை குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

சிறைச்சாலையில் பார்வையாளர்களுக்கான வசதிகளை மேம்படுத்துதல், கால அளவைத் தாண்டி சிறையில் உள்ள விசாரணை கைதிகளுக்கு சட்ட ஆலோசனைகள் வழங்குதல், சிறை கைதிகளின் மருத்துவ அறிக்கைகளை நவீனமயமாக்குதல், கண்காணிப்பு கேமராக்களை அதிகரித்தல், ஜெனரேட்டர் வசதியை மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகள் குறித்தும் அமைச்சர் ஆய்வு செய்தார். எதிர்வரும் நிதிநிலை அறிக்கையில் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களுக்குத் தேவையான நிதிகளைப் பெற முதல்வரின் ஒப்புதல் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆய்வின் போது, காவல் துறை தலைமை இயக்குநர் (சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள்) கே.சங்கர், காவல் துறை தலைவர் (சிறைகள் தலைமையிடம்) ஆர்.கனகராஜ் உட்பட சிறைத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர். தமிழ்நாட்டில் மொத்தம் 13 சிறைச்சாலைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Prison ReformsTamil Naduஅமைச்சர் நிர்மல் குமார்கணினிமயமாக்கல்சிறைச்சாலைதமிழ்நாடு சிறைத்துறை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article விஜய் முதல்வரானதில் மகிழ்ச்சி: ஆர்.ஜே.பாலாஜி பேட்டி
Next Article வேலை வாய்ப்பு கோரி மதுரையில் ‘காக்ரோச்’ இளைஞர்கள் பேரணி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி

மும்பை பயங்கரவாத தாக்குதல்: 18 ஆண்டுகள் கடந்தும் ஆறாத வடுக்கள்

மும்பை பயங்கரவாத தாக்குதலில் 166 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். 300-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.…

நவம்பர் 26, 2026

பெற்றோரை கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 ஆண்டு சிறை: கேரளா சட்டம்

கேரளாவில் பெற்றோரைப் பராமரிக்காத பிள்ளைகளுக்கு 3 ஆண்டுகள்…

நவம்பர் 26, 2026

அரசியலமைப்பை வலுப்படுத்தும் உறுதிப்பாடு: ஒரு பார்வை

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் முக்கியத்துவத்தை நினைவுகூரும் வகையில்,…

நவம்பர் 26, 2026

முதல் தனியார் பிஎஸ்எல்வி ராக்கெட் அடுத்த ஆண்டு ஏவுதல்: இஸ்ரோ தலைவர் தகவல்

தனியார் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் பிஎஸ்எல்வி…

நவம்பர் 26, 2026

கேரளாவில் மார்க்சிஸ்ட் நிர்வாகி கொலை: பாஜக – ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

நவம்பர் 26, 2026

You Might Also Like

அரசியல்

அதிமுகவில் பிளவு: வேலுமணி, சி.வி.சண்முகம் நீக்க வலியுறுத்தல்!

சேலம் அதிமுகவில் பரபரப்பு! முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோரை 'துரோகிகள்' என குற்றம் சாட்டி, அவர்களை கட்சியிலிருந்து நீக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 Min Read
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை
தமிழ்நாடு

தமிழகத்தில் 9 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை

தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட 9 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தொடர்புடைய வீடுகளில் இந்த…

2 Min Read
அரசியல்

5 எம்எல்ஏக்கள் பழனிசாமிக்கு ஆதரவு – சி.வி.சண்முகம் தரப்பு அதிர்ச்சி

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு, சி.வி.சண்முகம் அணியில் இருந்த 5 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் சி.வி.சண்முகம் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

மின் கட்டண உயர்வு திட்டத்தை கைவிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்கான மின்சாரக் கட்டணத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் திட்டத்தை கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது மக்கள்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?