MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அமைச்சர் மரியாதையில்லாமல் பேசுகிறார் – சீமான் கண்டனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அமைச்சர் மரியாதையில்லாமல் பேசுகிறார் – சீமான் கண்டனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அமைச்சர் மரியாதையில்லாமல் பேசுகிறார் – சீமான் கண்டனம்

தமிழ்நாடு

அமைச்சர் மரியாதையில்லாமல் பேசுகிறார் – சீமான் கண்டனம்

Fernandez
Last updated: ஆகஸ்ட் 12, 2026 3:24 மணி
Fernandez
Share
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்
SHARE

சட்டமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும்போது அமைச்சர் மரியாதையில்லாமல் தமிழ் மொழியை அவமதித்ததாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக சட்டமன்றத்தில் மாண்புமிகு நிதியமைச்சர் மரியாதையில்லாமல் நிதிநிலை அறிக்கையை வாசிக்கும்போது தமிழைத் தெளிவாக உச்சரிக்க தடுமாறியதையும், பார்த்து படிக்கும்போதே எண்களைப் பிழையாகக் கூறியதையும் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார். அதற்கு அமைச்சர் மரியாதையில்லாமல் அளித்த பதிலும், உடல்மொழியும் ஆணவத்தின் உச்சம். தன்னிடம் உள்ள பிழையை ஏற்றுக்கொண்டு, அதனைத் திருத்திக் கொள்ள முனைவதே அரசியல் முதிர்ச்சியாகும். அப்பண்பு துளியுமற்று, தன்னை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள முடியாதென அமைச்சர் அதிகாரத்திமிரில் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. தமிழ்ச்சான்றோர்கள் பலர் செந்தமிழால் சொற்போர் நடத்திய சட்டப்பேரவையில், இன்றைக்கு ஓர் அமைச்சர் பார்த்து வாசிக்கும்போதே திணறுவது அப்பேரவைக்கு இழுக்காகாதா? உலகெங்கும் வாழும் தமிழ் மக்களும், பிற மாநிலத்தவரும் நேரலையில் உற்று நோக்கும் ஓர் அவையில், உங்களை வாக்களித்துத் தேர்ந்தெடுத்த மக்களுக்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்தத் தமிழ் இனத்திற்கே இது மாபெரும் அவமதிப்பல்லவா? அப்பிழையை ஒருவர் சுட்டிக் காட்டும்போது, நீங்கள் கோபம்கொள்வது ஏன்? சங்கம் வைத்து தமிழ் வளர்த்த திருநாட்டில், தமிழைப் பிழையற உச்சரிக்கவே ஒரு அமைச்சர் தடுமாறுவதா? என, நியாயமாக மக்கள்தான் உங்கள் மீது கோபம்கொள்ள வேண்டும்! நாங்கள் குற்றம் சொல்வதில் ஓர் அறம் உள்ளது. நீங்கள் கோபப்படுவதில் என்ன அர்த்தம் உள்ளது? 'சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’. தமிழைப் பிழையின்றிப் பேச நீங்கள் பயிற்சியும், முயற்சியும் எடுத்தால், அது எளிதில் வசப்படும். அதைவிடுத்து நான் பிறப்பால் கிறித்தவன்; அதுவே எனக்கு அன்பைப் போதித்தது. எவ்வளவு தமிழ் படித்தாலும் அன்பைப் போதிக்காது' என்பது என்ன மாதிரியான அணுகுமுறை? நீங்கள் கிறித்துவராக பிறந்திருக்கலாம்; பைபிள் உங்களுக்கு அன்பை போதித்திருக்கலாம். அதைச் சொல்வது உங்கள் உரிமை; உங்கள் உணர்வு; அதை நாங்கள் மதிக்கிறோம். நீங்கள் சார்ந்துள்ள மதம் அன்பைப் போதிக்கிறது என்று சொல்ல உங்களுக்கு முழு உரிமை உண்டு. ஆனால், எங்கள் அன்னை தமிழ்மொழி அன்பைப் போதிக்காது, பெறமுடியாது என்று சொல்ல நீங்கள் யார்? உடன்பிறந்த தம்பி குடும்பத்தை, உருட்டுக்கட்டையால் தாக்கிய உங்கள் அன்பையும், இரக்கத்தையும்தான் உலகமே கண்டதே அமைச்சர் அவர்களே! உலகிற்கு அன்பை முதன்முதலில் போதித்த ஒரே மொழி, தமிழ் மொழிதான் என்பது உங்களுக்கு தெரியாதா? 'அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்' என்றும், 'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு' என்றும் அன்பின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொன்ன தமிழ்க்குறள்களை அமைச்சர் படித்ததில்லையா? உங்கள் கட்சியின் முகப்பில் உள்ள 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று உயிர்களின் சமத்துவத்தைப் போதித்தது எங்கள் தமிழ் இல்லையா? 'பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்' என்று பகிர்ந்துண்ணும் உயரிய பண்பினை கற்பித்தது எங்கள் தமிழ் இல்லையா? 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்றும், ஆதிபகவன் முதற்றே உலகு என்றும், உலகம் யாவையும் தாமுளவாக்கலும் என்றும், 'பாரடா உன் மானுடப் பரப்பை; மானுட சமுத்திரம் நானென்று கூவு!' என்றும், 'புதியதோர் உலகம் செய்வோம்; கெட்டப்போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!' என்றும், 'உலகு, உலகு' என்று உலக மாந்தர் அனைவரையும் உறவாகக் கருதி நேசித்தது, எங்கள் தமிழ் இல்லையா? காக்கைக்குருவி எங்கள் சாதி; நீள் கடலும் வானும் எங்கள் கூட்டம்! என்று பேரன்பு கொண்டு பாடியது எங்கள் தமிழ் இல்லையா? தன் தவறுக்கு மதத்தை உள்ளிழுத்து தப்பிக்க முயலும் மலிவான அரசியல் செய்யும் மரியாதையில்லாமல் அவர்களே! எல்லா சமயங்களும், எல்லா வேதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன! என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. இறைமகன் இயேசு 'அண்டை அயலானிடமும் அன்பு காட்டு' என்றார்; நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'பக்கத்து வீட்டுக்காரன் பசியோடு இருக்கும் பொழுது நீ உணவருந்தாதே' என்றார்; தமிழ்ச்சைவ திருமுறையோ 'அன்பே சிவம்' என்கிறது. பெரும்பாவலர் பாட்டன் பாரதியோ 'பகைவனுக்கும் அருள்வாய் நன்னஞ்சே' என்று பாடினார். 'வாடியப்பயிரை கண்டு வாடிய' வள்ளலாரும், 'அன்புவழி' என்றே சமயநெறி வகுத்த வைகுந்தரும் வாழ்ந்து, வளர்த்த தமிழ் மொழியில் அன்பே இல்லை என்று கூறி, இழிவுபடுத்துவதை எப்படி ஏற்க முடியும்? உலகுக்கு மானுடத்தையும், கருணையையும் போதித்த பேரன்பின் தாய் எங்கள் தமிழ்! 'தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே; தமிழைப் பழித்தவனைத் தாயே தடுத்தாலும் விடாதே!' என்றார் பாவேந்தர் தாத்தா பாரதிதாசன். அதே அவையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 'தமிழ் நம் உயிருக்கு நேர்; தமிழ் நம் தாய்' என்று பேசும்போது, தாங்களோ 'என் சமயம் மட்டுமே அன்பைப் போதித்தது, தமிழ் போதிக்கவில்லை' என்று பேசுவது ஏற்புடையதன்று. தமிழின் பேரன்பை நீங்கள் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். உங்கள் பிழைக்கு வருந்தித் திருந்துவதை விடுத்து கோபப்படக் கூடாது. கிறித்துவ சமயப்போதகராக தமிழ்நாட்டுக்கு வந்த ஜி.யு.போப், தமிழ்த்தொண்டராகி, தனது கல்லறையில் தமிழ் மாணவனெனப் பொறிக்கச் சொன்ன வரலாறு தெரியுமா அமைச்சர் மரியாதையில்லாமல் அவர்களுக்கு? இத்தாலியிலிருந்து வந்து தமிழ் இலக்கியங்களை இலத்தீனில் மொழிபெயர்த்து, ஜோசப் பெஸ்கி என்ற தனது பெயரை வீரமாமுனிவராக மாற்றிக் கொண்ட மகத்தான மாமனிதர் குறித்து தெரியுமா அமைச்சர் மரியாதையில்லாமல் அவர்களுக்கு? கிறித்துவ மதத்தைப் பரப்ப வந்த மதப்போதகர்களே இங்கு தமிழுக்குத் தொண்டாற்றித்தான் மறைந்தார்கள். நீங்கள் பிறந்த மதம் கிறித்தவம் என்கிறீர்கள்! அது சரிதான். ஆனால் எத்தனை தலைமுறையாக நீங்கள் கிறித்தவர்கள்? அதற்கு முன்பு? ஆனால், ஐம்பதனாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நாம் தமிழர்கள். கிறித்துவம் என்பது நீங்கள் ஏற்றுக்கொண்டுள்ள சமயம். ஆனால், உங்களின் மொழி என்ன? உங்களின் இனம் என்ன? உங்கள் இனத்திற்கான அடையாளம் என்ன? உங்கள் தாய்மொழி தமிழா? இல்லையா? என்பதை அதே அவையில் நீங்கள் விளக்க வேண்டும். கல்வி நிறுவனம் வைத்து நடத்துகிறேன் என்கிறீர்கள். அந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களை நினைத்து நாங்கள் கவலைப்படுகிறோம். ஐரோப்பா முழுவதும் கிறித்துவர்கள்தான். பிறகு ஏன் இத்தனை நாடுகள்? ஏனென்றால், மொழி வழியேதான் தேசிய இனங்களும், நிலங்களும். ஒரே கிறிஸ்தவ மதம்தான், ஆனாலும் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்தது ஏன்? காரணம் மொழி! அவர்கள் இங்கிலிஷ், இவர்கள் ஐரிஷ். இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்ததற்கு காரணம் மதம். ஆனால், பாகிஸ்தானிலிருந்து, பங்களாதேஷ் பிரிந்ததற்கு காரணம் மதமல்ல, மொழி! தாய்மொழிதான் அடையாளம். அதனால்தான் I am English, I am French, I am

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Naam Tamilar KatchiSeemanTamil Nadu Politicsஅமைச்சர் மரியாதையில்லாமல்சட்டமன்றம்சீமான்தமிழ் மொழிநாம் தமிழர் கட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சென்னை மாநகராட்சி ஆணையாளர் சென்னை மாநகராட்சி: கணக்கெடுப்புக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு கோரல்
Next Article வேளாண்துறை அமைச்சர் வினோத் சட்டப்பேரவையில் உரையாற்றுகிறார் விவசாயிகளின் வெற்றி பட்ஜெட்: அமைச்சர் வினோத் பெருமிதம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய யானைகள் குறித்து பேசுகிறார்

இந்தியாவில் 60% ஆசிய யானைகள்: பிரதமர் மோடி பெருமிதம்

உலக யானைகள் தினத்தில், இந்தியாவில் 22,000க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளதாகவும், இது…

ஆகஸ்ட் 12, 2026

முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்: நாடாளுமன்ற குழு அறிக்கை

முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரப்பூர்வ இல்லத்தில்…

ஆகஸ்ட் 12, 2026

பிரபல யூடியூபர் மனைவி ஓட்டம்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கேரளாவில் பிரபல யூடியூபர் அகில் என்.ஆர்.டி-யின் மனைவி…

ஆகஸ்ட் 12, 2026

வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை மசோதா: நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப அரசு முடிவு

வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தில் (FCRA) திருத்தங்கள்…

ஆகஸ்ட் 12, 2026

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு: எஃப்சிஆர்ஏ மசோதா ஜேபிசி-க்கு பரிந்துரை

வெளிநாட்டு நன்கொடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் எஃப்சிஆர்ஏ மசோதாவை…

ஆகஸ்ட் 12, 2026

You Might Also Like

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பேட்டி அளிக்கும் காட்சி
தமிழ்நாடு

தமிழகத்தில் தேர்தல் நடந்தால் விஜய் 180 தொகுதிகளில் வெல்வார் – வைகோ

தமிழகத்தில் மீண்டும் தேர்தல் நடந்தால் நடிகர் விஜய் 180 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவார் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தற்போதைய கள…

2 Min Read
ராமநாதபுரம் போதைப்பொருள் தொழிற்சாலை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட மெத்தம்பெட்டமைன்
தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் போதைப்பொருள் தொழிற்சாலை: 9 பேர் கைது, 2 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் பறிமுதல்

ராமநாதபுரத்தில் செயல்பட்டு வந்த போதைப்பொருள் தொழிற்சாலையில் 1.4 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. 9 பேர்…

1 Min Read
சேலத்தில் தற்கொலை செய்து கொண்ட 10-ம் வகுப்பு மாணவி தேவிஸ்ரீயின் புகைப்படம்
தமிழ்நாடு

சேலத்தில் 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை: 30 மாத்திரைகள் உட்கொண்ட சோகம்

சேலம் மாவட்டம் மேட்டூரில் 10-ம் வகுப்பு மாணவி தேவிஸ்ரீ, 30 மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர்…

2 Min Read
அரசியல்

போலி கடிதம் விவகாரம்: பாஜக வழக்கறிஞர்கள் இணைய குற்றப்பிரிவில் ஆஜர்!

தமிழக பாஜக தலைவர்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட போலி கடிதம் தொடர்பாக, அக்கட்சியின் வழக்கறிஞர்கள் இணைய குற்றப்பிரிவில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?