MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேகேதாட்டு அணை: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திருமாவளவன் கோரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேகேதாட்டு அணை: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திருமாவளவன் கோரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - மேகேதாட்டு அணை: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திருமாவளவன் கோரிக்கை

அரசியல்

மேகேதாட்டு அணை: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு திருமாவளவன் கோரிக்கை

Admin
Last updated: மே 25, 2026 6:44 மணி
Admin
Share
SHARE

மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கருத்துகளைக் கேட்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 'காவிரி பிரச்சினை என்பது தமிழ்நாடு தழுவிய ஒரு உணர்வுபூர்வமான பிரச்சினை என்பதால், அனைத்துத் தரப்பு கருத்துகளையும் கேட்டு முடிவெடுப்பது நல்லது. எனவே, சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி, அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு அமைய வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு, தமிழ்நாடு தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்துள்ளது. இதன் மூலம், 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த உத்தரவின்படி, மேகேதாட்டு அணை கட்டுமானத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி எதுவும் அளிக்கவில்லை. விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு (DPR) மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. அன்றைய தலைமை நீதிபதி கவாய் வழங்கிய தீர்ப்பில், 'கர்நாடக மாநிலத்தால் தயாரிக்கப்படவுள்ள விரிவான திட்ட அறிக்கையானது (DPR), காவிரி மேலாண்மை வாரியத்தின் (CWMA) ஒப்புதலைப் பெற்றால் மட்டுமே காவிரி நதிநீர் ஆணையத்தால் (CWC) பரிசீலிக்கப்படும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்கும் நிலையிலேயே அணை கட்ட ஒப்புதல் கிடைத்ததாக அர்த்தம் கிடையாது. இது கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் ஒரு அரசியல் நாடகமே தவிர வேறொன்றும் இல்லை. டி.கே.சிவகுமாரின் பேச்சின் அடிப்படையில் நாம் பதற்றமடைய வேண்டாம். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்திடம் நமது தரப்பு நியாயங்களை ஆதாரங்களுடன் எடுத்துக்கூறி, கர்நாடக அரசு தயாரிக்கும் விரிவான திட்ட மதிப்பீட்டுக்கு ஒப்புதல் அளிக்காமல் தடுக்க வேண்டியதே நம் முன்னால் இருக்கும் முக்கியமான உடனடிக் கடமையாகும். காவிரிப் பிரச்சினையில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளிடையே ஒன்றுபட்ட அரசியல் நிலைப்பாடு தேவை. அதை ஏற்படுத்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவதே சாலச் சிறந்த வழியாகும். இதை முதல்வர் விஜய் பரிசீலிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்' என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Mekedatu Damஅனைத்துக் கட்சிக் கூட்டம்காவிரி பிரச்சினைதமிழ்நாடு அரசுதிருமாவளவன்மேகேதாட்டு அணை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குடும்பத்துடன் பாங்காக் சென்ற நடிகர் ஸ்ரீகாந்த்: மன அமைதி தேடும் பயணம்
Next Article மேகதாது அணை: தமிழக அரசு சீராய்வு மனு தள்ளுபடி – அன்புமணி ராமதாஸ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

எலான் மஸ்க் ஸ்டார்லிங்க் தாமதம் குறித்து கேள்வி எழுப்புகிறார்

இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானியா? – எலான் மஸ்க் கேள்வி

இந்தியாவில் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணையச் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறி, மத்திய…

அக்டோபர் 9, 2026

பிரபல நடிகர் நானா படேகர் காலமானார் – இரங்கல் குவிதல்

பிரபல இந்தி நடிகர் நானா படேகர் மாரடைப்பால்…

அக்டோபர் 9, 2026

ராகுல் காந்தி ‘ஒன் மேன் ஷோ’ நடத்துகிறாரா? இண்டியா கூட்டணியில் சலசலப்பு

'இண்டியா' கூட்டணியில் நிலவும் உள் முரண்பாடுகள் மற்றும்…

அக்டோபர் 9, 2026

எஜமானரைக் காக்க பாம்புடன் சண்டையிட்டு வென்ற நாய்!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், விவசாயி டோனியின்…

அக்டோபர் 9, 2026

குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி பேரணி: ராகுல் காந்தி அழைப்பு

டெல்லியில் இன்று குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி…

அக்டோபர் 9, 2026

You Might Also Like

அமைச்சர் கீர்த்தனா சட்டசபை நடவடிக்கைகளை விளக்குகிறார்
தமிழ்நாடு

சட்டசபை நேரலை ஒளிபரப்பு: அமைச்சர் கீர்த்தனா விளக்கம்

சட்டமன்ற நடவடிக்கைகள் ஏன் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன என்பதற்கான காரணத்தை அமைச்சர் கீர்த்தனா அவர்கள் விளக்கினார். சில தரப்பினர் இதை எதிர்ப்பதாக அவர் தெரிவித்தார்.

2 Min Read
தமிழ்நாடு

மேகதாது அணை: தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் – டிடிவி தினகரன்

காவிரி நதிநீர் விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்றும், மேகதாது அணை விவகாரத்தில் சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் அமமுக…

1 Min Read
அரசியல்

த.வெ.க.வில் இணைந்த மகேந்திரன் மீது சிபிஐ விமர்சனம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், மாநில துணை செயலாளருமான சி.மகேந்திரன் த.வெ.க.வில் இணைந்த நிலையில், அவர் மீது சிபிஐ கட்சி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளது. மோசடி…

1 Min Read
அரசியல்

கட்சித் தாவல்: பதவி நீக்கம் குறித்து பழனிசாமி தரப்பு எச்சரிக்கை!

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை நிலுவையில் உள்ள ஒருவர் அமைச்சரானால், உச்ச நீதிமன்றம் அவரை பதவி நீக்கம் செய்ய முடியும் என அதிமுக வழக்கறிஞர்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?