MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: மேகாலயா ப்ராஜெக்ட்: 15 த.வெ.க எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் – காவல்துறை விசாரணை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: மேகாலயா ப்ராஜெக்ட்: 15 த.வெ.க எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் – காவல்துறை விசாரணை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மேகாலயா ப்ராஜெக்ட்: 15 த.வெ.க எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் – காவல்துறை விசாரணை

தமிழ்நாடு

மேகாலயா ப்ராஜெக்ட்: 15 த.வெ.க எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரம் – காவல்துறை விசாரணை

Fernandez
Last updated: ஜூலை 16, 2026 10:31 மணி
Fernandez
Share
தமிழகவெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேரம் நடைபெற்றது தொடர்பான விசாரணை
தமிழகவெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர்களிடம் குதிரை பேரம் நடைபெற்றது தொடர்பான விசாரணை
SHARE

தமிழகவெற்றி கழகத்தின் (த.வெ.க) 15 சட்டமன்ற உறுப்பினர்களிடம், 'மேகாலயா ப்ராஜெக்ட்' என்ற பெயரில் பெரும் தொகைக்கு பேரம் பேசிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது.

த.வெ.க-வைச் சேர்ந்த ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த யூடியூபர் மற்றும் ஐபிடிஎஸ் என்ற கருத்துக்கணிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் திருநாவுக்கரசு மீது புகார் அளித்துள்ளார். சட்டமன்ற வாக்கெடுப்பில் த.வெ.க-வின் நிலைப்பாட்டை மீறி, குறிப்பிட்டபடி வாக்களிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் ரூபாய் 35 கோடி லஞ்சமாக வழங்குவதாகவும் திருநாவுக்கரசு மற்றும் சில நபர்கள் தன்னிடம் கூறியதாக அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு மறுப்பு தெரிவித்ததால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், டி1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையின்போது, திருநாவுக்கரசு மற்றும் சில நபர்கள் கூட்டுச்சதி செய்து, 'மேகாலயா பிராஜக்ட்' என்ற பெயரில் சுமார் 15 த.வெ.க சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ஆட்சியின் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் செயல்பட முயன்றது தெரியவந்துள்ளது.

இந்த வழக்கில், புதிய தலைமுறை தொலைக்காட்சியின் மூத்த பத்திரிக்கை ஆசிரியர் திரு. விஜயன் என்பவரும் தொடர்புடையவர் என விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசுக்கு, ஆட்சேபகரமான குறுஞ்செய்திகளை அனுப்பி, குற்றச்சதியில் தொடர்ச்சியாக தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரிக்க, பத்திரிக்கை ஆசிரியர் திரு. விஜயனுக்கு காவல்துறை சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது.

நேற்று (15.07.2026) மற்றும் இன்று (16.07.2026) அவரிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது. மேலும், அவரது செல்போனை சைபர் பகுப்பாய்விற்கு உட்படுத்தி, வழக்கு தொடர்பான ஆதாரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இந்த 'மேகாலயா ப்ராஜெக்ட்' விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் ஆட்சியின் நிலைத்தன்மையை சீர்குலைக்கும் நோக்கில் நடத்தப்பட்டதாக கூறப்படும் இந்த பேரம்பேசுதல் சம்பவம், சட்டமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் நேர்மை குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

காவல்துறையின் தொடர் விசாரணையின் மூலம் இந்த விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் ரீதியான இதுபோன்ற செயல்கள் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகின்றன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MLAPolice investigationTamil Nadu Politicsகுதிரை பேரம்த.வெ.க.திருநாவுக்கரசுமேகாலயா ப்ராஜெக்ட்விஜயன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொகுதி மறுவரையறை: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மோடிக்கு கார்கே கடிதம்
Next Article அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றத்தை குறிக்கும் படம் அமெரிக்கா – ஈரான் போர்: கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அபாயம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

தொகுதி மறுவரையறை: அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மோடிக்கு கார்கே கடிதம்

தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமர்…

ஜூலை 16, 2026

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் நெரிசல்: ஒருவர் பலி, 120 பேர் பாதிப்பு

ஒடிசா புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் ஏற்பட்ட…

ஜூலை 16, 2026

புரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் நெரிசல்: ஒருவர் பலி, பலர் காயம்

ஒடிசா பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் கூட்ட…

ஜூலை 16, 2026

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் விரைவில்: சுர்ஜேவாலா தகவல்

கர்நாடக அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என…

ஜூலை 16, 2026

தொகுதி மறுவரையறை மசோதா: மோடிக்கு கார்கே அவசரக் கடிதம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், தொகுதி…

ஜூலை 16, 2026

You Might Also Like

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு: சிங்கப்பூர் பயணம் குறித்து விளக்கம்

தனக்கு அலர்ஜி, நரம்பு மற்றும் இதயப் பிரச்சனைகள் இருப்பதாகவும், அதனால் சிங்கப்பூர் செல்வதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஜூலை 15ஆம் தேதி ஆஜராவேன் என்றும் முன்னாள் அமைச்சர்…

1 Min Read

ஸ்ரீபெரும்புதூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: கட்டிட மேஸ்திரி கைது

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட மேஸ்திரியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

திருமண வீட்டில் ஒப்பாரி அழலாமா? – தவெக கேள்வி

திருமண நிகழ்ச்சியில் ஒப்பாரி வைத்து அழுவது போல் அரசியல் பேசுவது சரியல்ல என தவெக கட்சி விமர்சித்துள்ளது. சட்டப்பேரவையை சினிமா படப்பிடிப்பு தளம் போல மாற்றிவிட்டதாக எதிர்க்கட்சி…

1 Min Read
தமிழ்நாடு

போலியோ சொட்டு மருந்து ரீல்ஸ்: த.வெ.க. ஒன்றிய செயலாளர் தற்காலிக நீக்கம்

அரசு மருத்துவமனைகளில் கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்யக்கூடாது என அமைச்சர்கள் கூறிய நிலையில், போலியோ சொட்டு மருந்து நிகழ்வை வீடியோ எடுத்த த.வெ.க. ஒன்றிய செயலாளர் தற்காலிகமாக…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?