MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெக அரசின் 4 மாத ஆட்சியை விமர்சித்த மேயர் பிரியா!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெக அரசின் 4 மாத ஆட்சியை விமர்சித்த மேயர் பிரியா!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தவெக அரசின் 4 மாத ஆட்சியை விமர்சித்த மேயர் பிரியா!

தமிழ்நாடு

தவெக அரசின் 4 மாத ஆட்சியை விமர்சித்த மேயர் பிரியா!

Fernandez
Last updated: செப்டம்பர் 25, 2026 1:01 மணி
Fernandez
Share
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் உரையாற்றும் மேயர் பிரியா
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பேசிய மேயர் பிரியா
SHARE

சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில், தமிழக வெற்றி கழக (தவெக) அரசின் 4 மாத கால ஆட்சியை மேயர் பிரியா கடுமையாக விமர்சித்துள்ளார். மாநிலத்தின் தற்போதைய அரசியல் மற்றும் நிர்வாகச் சூழல் குறித்து காரசாரமான குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார்.

தவெக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக மேயர் பிரியா குற்றம்சாட்டினார். தொடரும் மின்வெட்டு, மின் கட்டண உயர்வு, மற்றும் ஆவின் பால் தட்டுப்பாடு ஆகியவற்றால் பொதுமக்கள் அன்றாடம் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதைச் சுட்டிக்காட்டினார். மக்கள் நலன் சார்ந்த அடிப்படைப் பிரச்சினைகளில் அரசு கவனம் செலுத்தாமல் அலட்சியம் காட்டுவதாகவும் அவர் மாமன்றக் கூட்டத்தில் தெரிவித்தார்.

சென்னை மேயர் பிரியா தனது உரையில், தவெக ஆட்சிக்கு வந்த இந்த 4 மாதங்களில் மாநிலம் முழுவதும் ஏகப்பட்ட பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளதாகக் கூறினார். குற்றச் சம்பவங்கள், கொலைகள், பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள், ஏழை எளிய மக்கள் பாதிப்பு, விலைவாசி உயர்வு, ஆவின் பால் தட்டுப்பாடு எனப் பல பிரச்சனைகள் ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக, மின்வெட்டுப் பிரச்சினைகள் வீடுகளையும், கடைகளையும் பாதிப்பதாகவும், சிறு, குறு தொழில்கள் முடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மாணவர்கள் விளக்கு வெளிச்சத்தில் படிக்க வேண்டிய அவல நிலை காணப்படுவதாகவும், இது குறித்து அமைச்சர்களிடம் கேட்டால், 'காற்று அடிக்கவில்லை, மழை பெய்யவில்லை' என்பது போன்ற பதில்கள் வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இதுபோன்ற காரணங்களால் தமிழகம் வளர்ச்சியில் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளதாக மேயர் பிரியா வருத்தம் தெரிவித்தார்.

சென்னை மாநகர வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்த பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டுள்ளதை மேயர் பிரியா விமர்சித்தார். 'இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்பட்டால், இருப்பதும் போய்விடும்' என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டி, சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு தாரை வார்க்க மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளதையும் அவர் கண்டனம் தெரிவித்தார். இதுபோன்ற எண்ணற்ற நடவடிக்கைகளை தவெக அரசு தமிழகத்திற்கு எதிராக மேற்கொண்டு வருவதாகவும், இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.

தற்போதைய தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் நடிகர் ஒருவரின் கருத்தை மேயர் பிரியா மேற்கோள் காட்டினார். அவர் குறிப்பிட்டதாவது, 'தலைவர் என்றால் என்னவென்றே தெரியாமல் தலைமையின் பொறுப்பை உணராமல் வாக்குறுதியை அள்ளி கொடுத்து விட்டு, பிரச்சினைகள் வரும் போது எதிரணியின் மீது பழியை போடுவது தலைமை பண்பிற்கான தகுதி கிடையாது. அது ஏமாற்று வேலை' என்று தெரிவித்தார். இதுதான் இன்றைய உண்மை நிலையும் கூட என்றும் அவர் கூறினார்.

இதற்கு மாறாக, திராவிட முன்னேற்றக் கழகம் எந்த காலத்திலும், எந்த சூழ்நிலையிலும், எந்த இடத்தில் இருந்தாலும் கொள்கையில் உறுதியாக நிற்கும் என்றும், தொடர்ந்து போராடி தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றியுள்ளனர் என்றும் மேயர் பிரியா குறிப்பிட்டார். திமுகவின் தேவை தமிழகத்திற்கு எப்போதும் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதை சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆட்சி கட்டிலில் இல்லாத போது சிறப்பான எதிர்க்கட்சியாக திமுக செயல்படும் என்பது பொதுவான கருத்து. ஆனால் தற்போதைய அரசியல் சூழல் என்பது கொள்கை ரீதியான விமர்சனங்கள், மக்கள் பிரச்சினைகள், உரிமைகள் சார்ந்த மோதல்கள் என்ற நிலையை தாண்டி தனிமனித தாக்குதல்களாக மாறிவிட்டன. இந்த விஷயத்தில் அனைத்து தரப்பினரும் சற்று கவனமாக செயல்பட வேண்டியது அவசியம் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai CorporationDMKTVEKசட்டம் ஒழுங்குசென்னை மாநகராட்சிதமிழக அரசியல்தவெக அரசுபால் தட்டுப்பாடுமின்வெட்டுமேயர் பிரியா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் 'பார்க்கிங்' திரைப்பட இயக்குநர் ராமு சிவகார்த்திகேயன் – ‘பார்க்கிங்’ இயக்குநரின் புதிய கூட்டணி!
Next Article ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றும் நேபாள பிரதமர் பாலேந்திர ஷா காலநிலை மாற்றத்தை சமாளிக்க இந்தியா, சீனா ஒத்துழைப்பு அவசியம்: நேபாள பிரதமர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

விசாகப்பட்டினம் - பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

விசாகப்பட்டினம் – பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

விசாகப்பட்டினம் மற்றும் பெங்களூரு இடையே சிறப்பு ரயில் சேவைகளை இயக்க தெற்கு கடற்கரை…

செப்டம்பர் 25, 2026

தேர்தல் ஆணையர் பதவி விலகாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்: சிஜேபி

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி…

செப்டம்பர் 25, 2026

தேர்தல் ஆணையம் சந்தேகங்களை போக்க வேண்டும்: சிராக் பாஸ்வான்

தேர்தல் ஆணையத்திற்குள் நிலவும் கருத்து வேறுபாடுகள் குறித்த…

செப்டம்பர் 25, 2026

உ.பி.யில் ஒரே மாவட்டத்தில் 2 முக்கியப் பதவிகளில் தமிழக அதிகாரிகள்

உத்தரப் பிரதேசத்தின் ஒரே மாவட்டத்திற்கு இரண்டு முக்கியப்…

செப்டம்பர் 25, 2026

விநாயகர் லட்டு ரூ.39 லட்சத்துக்கு ஏலம்: ஐதராபாத்தில் வியப்பு!

ஐதராபாத் பாலாப்பூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற…

செப்டம்பர் 25, 2026

You Might Also Like

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் பேசுகிறார்
தமிழ்நாடு

குளியலறைக்குள் கைது: மு.க.ஸ்டாலின் மீது கே.பி.முனுசாமி கடும் தாக்கு

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினை குளியலறைக்குள் சென்று கைது செய்தது அதிகார துஷ்பிரயோகம் என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி குற்றம்சாட்டியுள்ளார். இது அரசின் அடக்குமுறை என…

2 Min Read
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1 ஏவுதலுக்கான காட்சி
தமிழ்நாடு

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1 இன்று விண்ணில் பாய்கிறது!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் விக்ரம்-1 இன்று காலை 11.30 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. இது விண்வெளித் துறையில் ஒரு புதிய மைல்கல்.

1 Min Read
தமிழக காவல்துறை அதிகாரிகள் கூட்டம்
தமிழ்நாடு

காவல்துறை ஆள்சேர்ப்பு தள்ளிவைப்பு; பணிச்சுமை அதிகரிப்பு

தமிழக காவல்துறையில் வார விடுமுறை வழங்குவதில் சிக்கல் நீடிப்பதால் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இந்நிலையில், காவல்துறை ஆள்சேர்ப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

2 Min Read
தங்க காசு மோசடி வழக்கில் கைதான பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி
தமிழ்நாடு

தங்க காசு மோசடி வழக்கு: பெண் இன்ஸ்பெக்டர் விசாரணைக்கு அனுமதி

தங்க காசு மோசடி வழக்கில் கைதான பெண் இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி மற்றும் 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?