MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களுடன் நிற்கிறேன்: மாரி செல்வராஜ்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களுடன் நிற்கிறேன்: மாரி செல்வராஜ்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களுடன் நிற்கிறேன்: மாரி செல்வராஜ்

தமிழ்நாடு

நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களுடன் நிற்கிறேன்: மாரி செல்வராஜ்

Fernandez
Last updated: ஜூலை 23, 2026 12:06 மணி
Fernandez
Share
இயக்குநர் மாரி செல்வராஜ் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் பதிவு
நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்களுடன் நிற்பதாக இயக்குநர் மாரி செல்வராஜ் பதிவிட்டுள்ளார்.
SHARE

நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் மாணவர்களுக்கு ஆதரவாக தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்.

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் (சி.ஜே.பி) நாடு தழுவிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டங்கள் டெல்லியில் தொடங்கி சென்னை வரை பரவி, நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.

போராட்டத்திற்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்த சோனம் வாங்சுக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஜூலை 20 அன்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்ல முயன்றபோது, டெல்லி காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டு வீசியும் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதில் பல மாணவர்கள் மற்றும் காவல்துறையினருக்கு காயங்கள் ஏற்பட்டன.

மேலும், ஜந்தர் மந்தர் உள்ளிட்ட பல பகுதிகளில் இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டதுடன், டெல்லி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனால் தலைநகரில் பரபரப்பான சூழல் நிலவியது.

இந்த சி.ஜே.பி போராட்டத்திற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா போன்ற அரசியல் கட்சித் தலைவர்களும், பிரகாஷ் ராஜ், ஷபானா அஸ்மி போன்ற நடிகர்களும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.

நடிகர்கள் சோனு சூட், ரிதேஷ் தேஷ்முக், ஜெனிலியா, சித்தார்த், ரேவதி, அதிதி ராவ், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலரும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இயக்குநர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், 'அதிகார அடக்குமுறைக்கு எதிராக குரல் எத்திசையில் இருந்து ஒழித்தாலும் அத்திசைக்கு நம்பிக்கையையும் வலிமையையும் சேர்ப்பது என் கலையின் நேர்மை என்பதை உறுதியாக நம்புகிறேன். நீட் எனும் ஆணவப் போக்கிற்கு எதிராக களமாடும் இந்திய மாணவர்களின் கைகளோடு கைகோர்த்து நிற்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். மேலும், #BanNEET மற்றும் #SaveStudents என்ற ஹேஸ்டேக்குகளையும் அவர் இணைத்துள்ளார்.

இதற்கிடையில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் 'லத்தியால் கேள்விகளுக்கு பதிலளிக்காதீர்கள்' என்று பதிவிட்டதை பகிர்ந்த ப்ளூ சட்டை மாறன், 'தமிழ் சினிமாவில் முதல் மானஸ்தனின் குரல். மற்ற பெரிய நடிகர்கள் சைலன்ட் மோடில்' என்று கிண்டல் செய்துள்ளார்.

நடிகர் சித்தார்த் தனது சமூக வலைதளப் பதிவில், 'போராட்டங்களுக்கு பணிந்து போகும் முன்னுதாரணத்தை உருவாக்க அரசு விரும்பாததால், கல்வி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படமாட்டார். அவர்கள் தங்களது அதிகாரத்தையும், வலிமையையும் மிகுந்த திட்டமிடலுடனும், கவனத்துடனும் உருவாக்கியுள்ளனர். அதனால் பலவீனமானவர்களாக தெரிவதை அவர்கள் தவிர்க்கவே விரும்புவார்கள். இன்று ஒருவரது பதவி பறிபோனால், நாளை பலரது பதவி பறிபோகும் நிலை ஏற்படும்' என்று தெரிவித்துள்ளார்.

நடிகை அதிதி ராவ் ஹைதரி, 'ஒவ்வொருவருக்கும் அரசியல் விருப்பங்கள் வேறுபட்டு இருந்தாலும், அவற்றிற்கு மேலாக மனிதாபிமானமே முதன்மையாக இருக்க வேண்டும். ஆக்கப்பூர்வமான உரையாடலுக்கு உண்மையாக இருக்க வேண்டும். மாணவர்கள் கோரிக்கைகள் அரசால் பரிசீலிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் மரியாதை, கண்ணியம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு பாதுகாப்பான சூழலை நாம் உறுதி செய்ய வேண்டும். நமது மாணவர்களே நாட்டின் எதிர்காலம்' என குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் பா. ரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில், 'ஜந்தர் மந்தரில் அமைதியாக போராடி வரும் மாணவர்களுக்கு எதிராக அரசின் அடக்குமுறையை கண்டிக்கிறோம். போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதும், ஆதரவு கொடுத்த ஒவ்வொருவரும் தடுக்கப்பட்டதும், 21 நாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலருமான சோனம் வாங்சுக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதும் கவலையளிக்கின்றன' என பதிவிட்டுள்ளார்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Mari SelvarajNEET ExamStudent Protestஇந்திய மாணவர்கள்நீட் தேர்வுபா.ரஞ்சித்மாணவர் போராட்டம்மாரி செல்வராஜ்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நடிகை த்ரிஷா 'ஜனநாயகன்' திரைப்படத்தை காண ரோகிணி திரையரங்கிற்கு வருகை நடிகை த்ரிஷா வருகை: ‘ஜனநாயகன்’ படத்திற்கு ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்
Next Article டெல்லி மாணவர் போராட்ட வீடியோவை பகிர்ந்த ரித்திகா சஜ்தே டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ரோஹித் மனைவி ரித்திகா ஆதரவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமைச்சர் தர்மேந்திர பிரதான்

தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரிக்கை: பிரதமர் மோடிக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி பதில்

இளைஞர்களின் நலனே முக்கியம் என பிரதமர் மோடி கூறிய நிலையில், அமைச்சர் தர்மேந்திர…

ஜூலை 23, 2026

டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ரோகித் சர்மா மனைவி ஆதரவு

டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக மாணவர்கள்…

ஜூலை 23, 2026

இளைஞர்களின் நலனே மோடியின் முன்னுரிமை – அமித் ஷா

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்…

ஜூலை 23, 2026

நீட் தேர்வு விவகாரம்: மக்களவையில் 4வது நாளாக எதிர்க்கட்சி அமளி

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக…

ஜூலை 23, 2026

சூரிய மின் உற்பத்தியில் இந்தியா முதலிடம்: ஐ.நா. தலைவர் தகவல்

ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றத் திட்டத்துக்கான…

ஜூலை 23, 2026

You Might Also Like

தமிழ்நாடு

விஜய் ஒளிப்பதிவாளருக்கு தமிழ்நாடு அரசுப் பொறுப்பு

நடிகர் விஜய்யின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவுக்கு தமிழ்நாடு அரசு, எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

விஜய் பெரும்பான்மையை மட்டுமே நிரூபிக்க வேண்டும்..! – ஆளுநர்.

ஆட்சி அமைக்க விஜயை அழைக்காதது ஏன்?  என்பது குறித்து ஆளுநர் ராஜேந்திர விசுவநாத் அர்லேகர் விளக்கம் அளித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர், விஜய்க்கு…

1 Min Read
தமிழ்நாடு

குற்றாலம் ஐந்தருவியில் ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சி – சுற்றுலாப் பயணிகள் குதூகலம்

ஞாயிறு விடுமுறை காரணமாக குற்றாலம் ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து உற்சாக குளியல் போட்டு மகிழ்கின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

சிறுமி கால்களை தொட்ட அமைச்சர் விஸ்வநாதனுக்கு கண்டனம்

மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் விஸ்வநாதன் சிறுமிகளின் கால்களை தொட்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?