MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: நகைக்கடை கொள்ளை: யூடியூபர் மீனாட்சி கைது – 6 கிலோ நகைகள் மீட்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: நகைக்கடை கொள்ளை: யூடியூபர் மீனாட்சி கைது – 6 கிலோ நகைகள் மீட்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - நகைக்கடை கொள்ளை: யூடியூபர் மீனாட்சி கைது – 6 கிலோ நகைகள் மீட்பு

தமிழ்நாடு

நகைக்கடை கொள்ளை: யூடியூபர் மீனாட்சி கைது – 6 கிலோ நகைகள் மீட்பு

Fernandez
Last updated: நவம்பர் 15, 2026 6:36 காலை
Fernandez
Share
மதுரை நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட யூடியூபர் மீனாட்சி
மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் கைதான யூடியூபர் மீனாட்சி
SHARE

மதுரை காளவாசல் புறவழிச் சாலையில் அண்மையில் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையின் புதிய கிளையில், கடந்த நவம்பர் 12-ஆம் தேதி அதிகாலை மர்ம நபர் ஒருவர் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க மற்றும் வைர நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றார். மறுநாள் காலை ஊழியர்கள் கடையைத் திறந்து பார்த்த போது தான் நகைகள் மாயமானது தெரியவந்தது.

இது குறித்துப் புகாரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனிப்படை காவல் துறையினர் அமைக்கப்பட்டுக் கடையிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றித் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், முகமூடி அணிந்த நபர் ஒருவர் கடையின் பின்பக்கத்தில் கட்டடப் பணிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த சாரங்கள் வழியாக மேலே ஏறி, லிப்ட் திறப்பு வழியாக உள்ளே நுழைந்து கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்தது.

கடைக்குள் இருந்த காட்சிப் பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த தங்கம் மற்றும் வைர நகைகளைப் பைகள் மற்றும் டிராலி பேக்குகளில் எடுத்துச் சென்ற கொள்ளையன், சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கடைக்குள் இருந்ததும் தெரிய வந்தது. கொள்ளைச் சம்பவம் தொடர்பாகக் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, நவம்பர் 5-ஆம் தேதி அதிகாலை முகமூடி அணிந்த மர்ம நபர் கடையின் கட்டுமான சாரம் வழியாக ஏறி மொட்டை மாடிக்கு சென்று நோட்டமிட்டது தெரியவந்தது. இதனால் கொள்ளையன் நவம்பர் 12-ஆம் தேதி கொள்ளையடிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே திட்டமிட்டு ஒத்திகை பார்த்திருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகித்தனர்.

இதற்கிடையே, கொள்ளையன் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் வழித்தடங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த காவல் துறையினருக்கு பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெருவைச் சேர்ந்த நிஷாந்த் கிருஷ்ணா என்ற பட்டதாரி இளைஞர் மீது சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரது வீட்டில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு சோதனை மேற்கொண்டனர்.

மதுரை மாநகர காவல் துணை ஆணையர் இனிகோ திவ்யன் நேரில் சென்று விசாரணையை மேற்பார்வையிட்டார். வீட்டின் அறைகள், மாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளனவா அல்லது வேறு இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனவா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றது.

இதற்கிடையே, நிஷாந்த் கிருஷ்ணா, மாடக்குளம் பகுதியில் உள்ள வயல்வெளிக்குச் சென்று இரண்டு பைகளில் துணிகளை எரித்ததாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த பகுதியில் மாடு மேய்த்த நபர் அளித்த தகவலின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பகுதிகளில் காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நிஷாந்த் கிருஷ்ணா ஆட்டோவில் அந்தப் பகுதிக்குச் சென்று வந்தது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

கொள்ளைச் சம்பவத்திற்குப் பிறகு நிஷாந்த் கிருஷ்ணாவின் செல்போனில் இருந்து மதுரை திருப்பாலை பகுதியைச் சேர்ந்த யூடியூபரும் இன்ஸ்டாகிராம் இன்புளூயன்சருமான மீனாட்சி என்ற பெண்ணுக்கு அழைப்பு சென்றது காவல் துறை விசாரணையில் தெரிய வந்தது. செல்போன் அழைப்பு மற்றும் அதனைச் சார்ந்த தகவல்களின் அடிப்படையில் மீனாட்சியை பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் மீனாட்சியையும், நிஷாந்த் கிருஷ்ணாவின் தந்தை சுரேஷையும் போலீசார் இன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனாட்சி அளித்த தகவலின் பெயரில் பழங்காநத்தத்தை அடுத்த மாடக்குளம் கண்மாய் பகுதியில் போலீசார் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் இன்று பிற்பகல் மீனாட்சியை மாடக்குளம் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் அடையாளம் காட்டிய இடத்தில் புதைத்து வைத்திருந்த நகைகளை போலீசார் தோண்டி எடுத்து, சாக்குப்பையில் கொண்டு சென்றனர். இதன் மதிப்பு சுமார் 6 கிலோ என காவல் துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு நிஷாந்த் கிருஷ்ணா தலைமறைவாகி விட்டதால், அவரை 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Jewellery Store RobberyMaduraiNishanth KrishnaTanishq JewelleryYouTuber Meenakshiதனிஷ்க் நகைக்கடைநகைக்கடை கொள்ளைநிஷாந்த் கிருஷ்ணாமதுரையூடியூபர் மீனாட்சி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இந்தியாவில் கியா செல்டோஸ் கார் விற்பனை மைல்கல்லைக் கொண்டாடும் காட்சி இந்தியாவில் கியா செல்டோஸ்: 7 லட்சம் விற்பனை மைல்கல்லை எட்டிய கார்
Next Article ஸ்டீபன் கிங் எழுதிய 'டாலிஸ்மேன்' நாவலின் இறுதிக்கட்டம் பற்றிய செய்தி ஸ்டீபன் கிங்கின் ‘டாலிஸ்மேன்’ இறுதிக்கட்டம்: ரசிகர்களுக்கான படைப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வந்தே பாரத் ரயில்

பிரேக் செயலிழந்தும் 463 கி.மீ. ஓடிய வந்தே பாரத் ரயில்: விசாரணை தீவிரம்

பிரேக் செயலிழந்த நிலையில் சுமார் 463 கி.மீ. தூரம் பயணித்த வந்தே பாரத்…

நவம்பர் 16, 2026

டேட்டிங் செயலி காதல்: கனடா பெண் இந்தியா வருகை

டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான இளைஞரை திருமணம்…

நவம்பர் 16, 2026

பசியின் கோரம்: நாயிறைச்சியை உண்ட இளைஞர் – ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்

ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில், சாலையில் இறந்த நாயின்…

நவம்பர் 15, 2026

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு இல்லை: பிரியங்கா காந்தி

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தை நடத்துவது குறித்து எதிர்க்கட்சிகளுக்கு…

நவம்பர் 14, 2026

இந்தியா, உலகத்துடன் நவீன ஆராய்ச்சிகளைப் பகிர வேண்டும்: பிரதமர் மோடி

இந்தியாவின் பண்டைய அறிவு மற்றும் நவீன ஆராய்ச்சிகளின்…

நவம்பர் 13, 2026

You Might Also Like

பீல்ட்ஸ் மெடல் விருது பெறும் விஞ்ஞானிகள்
தமிழ்நாடு

100 ஆண்டுகால கணிதப் புதிருக்கு தீர்வு: சீன விஞ்ஞானிகளுக்கு பீல்ட்ஸ் மெடல்

100 ஆண்டுகால கணிதப் புதிருக்கு தீர்வு கண்ட சீன விஞ்ஞானிகள் யு டெங் மற்றும் ஹாங் வாங் ஆகியோருக்கு பீல்ட்ஸ் மெடல் விருது வழங்கப்பட்டது. ஹாங் வாங்…

2 Min Read
தமிழ்நாடு

தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்: சவரனுக்கு ரூ.3,360 சரிவு!

சென்னையில் தங்கத்தின் விலை இரண்டு நாட்களில் சவரனுக்கு ரூ.3,360 சரிந்துள்ளது. இது தங்கம் வாங்க சரியான நேரம் என நகை பிரியர்கள் கருதுகின்றனர்.

1 Min Read
முதல்வர் விஜய் முன்னிலையில் வால்கிரீன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகும் காட்சி
தமிழ்நாடு

முதல்வர் விஜய் முன்னிலையில் வால்கிரீன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் முன்னிலையில், அமெரிக்காவின் வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. இதன் மூலம் 250…

2 Min Read
தமிழ்நாடு

சேலம் மாவட்ட புதிய ஆட்சியர்: முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் தொடர்கிறது. சேலம் மாவட்ட புதிய ஆட்சியராக இளம்பகவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முக்கிய அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?