MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கள்ளக்காதல்: நண்பனை காரில் ஏற்ற முயன்ற நபர் கைது!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கள்ளக்காதல்: நண்பனை காரில் ஏற்ற முயன்ற நபர் கைது!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கள்ளக்காதல்: நண்பனை காரில் ஏற்ற முயன்ற நபர் கைது!

தமிழ்நாடு

கள்ளக்காதல்: நண்பனை காரில் ஏற்ற முயன்ற நபர் கைது!

Admin
Last updated: மே 14, 2026 4:12 மணி
Admin
Share
SHARE

வேலூரில் நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த நபர், அவரை காரில் ஏற்ற முயன்று கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜோலார்பேட்டையை அடுத்த ரெட்டியூரைச் சேர்ந்த ஜெயக்குமார் (34), அவரது மனைவி சிவரஞ்சனி. இவர்களுக்கு 13 வருட திருமண வாழ்வில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அதேபோல், புதூர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (26), 4 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து, தற்போது அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார். திருப்பதியில் பானிபூரி கடை நடத்தி வரும் அஜித்குமாரும், ஜெயக்குமாரும் நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று, ஜெயக்குமார் மொபட்டில் சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த அஜித்குமார் திடீரென மொபட் மீது காரை ஏற்ற முயன்றுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் தண்ணீர் தொட்டி மீது மோதி நின்றது. அப்போது, 'உன்னைக் கொல்லாமல் விடமாட்டேன்' என அஜித்குமார் மிரட்டியதாக ஜெயக்குமார் தனது புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஜெயக்குமார் புகார் அளித்தார்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜெயக்குமார் மற்றும் அஜித்குமார் நெருங்கிய நண்பர்கள் என்றும், அடிக்கடி அஜித்குமார் ஜெயக்குமாரின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். அப்போது, ஜெயக்குமாரின் மனைவி சிவரஞ்சனிக்கும் அஜித்குமாருக்கும் 2 ஆண்டுகளாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் ஜெயக்குமாருக்கு தெரியவந்ததை அடுத்து, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருவரும் சேர்ந்து வாழ அனுப்பி வைக்கப்பட்டனர்.

இருப்பினும், சிவரஞ்சனியும் அஜித்குமாரும் மீண்டும் பழகி கள்ளக்காதலை வளர்த்ததுடன், அஜித்குமார் சிவரஞ்சனியுடன் இருந்த தகாத உறவை வீடியோ எடுத்து நண்பர்களுக்கு அனுப்பியதும் தெரியவந்துள்ளது. இதனால் மனமுடைந்த ஜெயக்குமார், சிவரஞ்சனியிடம் விவாகரத்து கேட்டு திருப்பத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில், கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தால் ஜெயக்குமாரை காரில் ஏற்றிக் கொலை செய்ய முயன்றதாகக் கூறி அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:MDTV 24x7Tamil Nadu Newsகள்ளக்காதல்கொலை முயற்சிவேலூர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்த வீரர் இந்திய டெஸ்ட் அணிக்கு அவசியம் – அஸ்வின் பரிந்துரை!
Next Article மேற்குவங்க 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: 91.23% தேர்ச்சி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்வர் விஜய்யை விமர்சிப்பது எம்.ஜி.ஆர் காலத்து டெக்னிக் – அமைச்சர் நிர்மல் குமார்

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் பேசும்போது அவரை கேலி செய்தவர்கள், தற்போது முதலமைச்சர் விஜய்யையும் அதேபோல் விமர்சிப்பதாக அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். திமுகவினரின் செயல்பாடுகள் குறித்தும் அவர்…

1 Min Read
தமிழ்நாடு

கவர்னர் உரையில் தமிழக வளர்ச்சி இல்லை – உதயநிதி ஸ்டாலின்

தமிழக ஆளுநரின் உரை முரண்பாடுகளின் மொத்த உருவமாக அமைந்துள்ளது என்றும், அதில் தமிழக வளர்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெறவில்லை என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

குமரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம்: மக்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து, விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனினும், மேகமூட்டத்தால் சூரிய உதயத்தை காண சுற்றுலாப்…

1 Min Read
தமிழ்நாடு

சேலம் ரயில் சேவை மாற்றம்: பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

பெருந்துறை ரயில்வே யார்டு பகுதியில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணிகள் காரணமாக, எர்ணாகுளம்-டாடா நகர் மற்றும் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை குறிப்பிட்ட ரயில்கள்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?