MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீச்சு: கோவை அதிர்ச்சி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீச்சு: கோவை அதிர்ச்சி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீச்சு: கோவை அதிர்ச்சி

க்ரைம்

காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீச்சு: கோவை அதிர்ச்சி

Admin
Last updated: மே 25, 2026 4:03 மணி
Admin
Share
SHARE

கோவையில், காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய மதுபான பாட்டில்களை வீசி தீவைக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கொலை மிரட்டல் விடுத்த இளைஞர்கள் மற்றும் அவரது நண்பர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொண்டாமுத்தூர் அருகே கலிக்கநாயக்கன்பாளையம் சிபிசி கார்டன் பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, தாளியூர் பேரூராட்சியில் பிட்டராக பணிபுரிகிறார். இவரது மகள், கோவையில் உள்ள கல்லூரியில் படிக்கும்போது சென்னையைச் சேர்ந்த கார்த்திக் (எ) மாரியப்பன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. ஆனால், கார்த்திக் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட 31-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதை அறிந்த இளம்பெண், அவரிடமிருந்து காதலை முறித்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

காதலை ஏற்க மறுத்ததால், கார்த்திக் தொடர்ந்து அந்தப் பெண்ணிற்கு தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கார்த்திக் தனது நண்பர்கள் 3 பேருடன் இருசக்கர வாகனங்களில் கலிக்கநாயக்கன்பாளையம் வந்து, இளம்பெண்ணின் வீட்டிற்கு வெளியே நின்றிருந்த அவரது தந்தை சுந்தரமூர்த்தியிடம் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர், மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் நிரப்பப்பட்ட பீர் மற்றும் மதுபான பாட்டில்களை வீட்டின் மீது வீசியுள்ளனர்.

அவர்கள் வீசியதில் ஒரு பாட்டில் வெடித்து, வீட்டின் போர்டிகோ பகுதியில் இருந்த ஷூ ஸ்டாண்ட் மீது விழுந்து தீப்பிடித்தது. இதில் ஷூக்கள் எரிந்து சாம்பலாகின. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாட்டில்களை வீசிவிட்டு தப்பியோடிய கும்பல் குறித்து சுந்தரமூர்த்தி தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். குடியிருப்புப் பகுதியில் நடந்த இந்த துணிகரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:coimbatoreகாதல்கோவைதமிழ்நாடு செய்திகள்மண்ணெண்ணெய் குண்டுவன்முறை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article காதலித்த வாலிபரை உறவினர்கள் கொடூரமாக கொலை: குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு
Next Article மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் வெட்டிப் கொலை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

நெல்லை இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்
க்ரைம்

நெல்லை இரட்டை கொலை: மேலும் 4 பேர் கைது – பதற்றம் நீடிப்பு

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி இரட்டை கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தந்தை-மகன் உடல்களைப் பெற உறவினர்கள் மறுப்பதால் பதற்றம் நீடிக்கிறது.

1 Min Read
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிடுகிறார்
தமிழ்நாடு

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: முதல்வர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யத்…

1 Min Read
அரசியல்

கூலி உயர்வு இழு இழுப்பு: விசைத்தறியாளர்கள் கோரிக்கை

கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள், பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்படும் கூலி உயர்வு விவகாரத்தில் சட்டப் பாதுகாப்புடன் ஒப்பந்த கூலியை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஜவுளி உற்பத்தியாளர்கள்…

1 Min Read
தமிழ்நாடு

சிவகங்கையில் பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல்: 3 பேர் கைது

சிவகங்கையில் பெண் காவலருக்கு கூட்டு பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட காவலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?