உடல் எடையைக் குறைக்கும் கொள்ளு சட்னி தயாரிக்கும் முறையை இங்கே காணலாம். பலரும் உடல் எடையைக் குறைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியடைந்திருக்கலாம். ஆனால், இந்த கொள்ளு சட்னி அந்த முயற்சிகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும். இதை ஒருமுறை செய்து சாப்பிட்டால், உடல் எடை குறைய வாய்ப்புள்ளது. இந்த சட்னியை எப்படி செய்வது மற்றும் அதனால் உடலில் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி தெரிந்துகொண்டு, உடல் எடை குறைத்து ஆரோக்கியமாக வாழ்வோம்.
முதலில், ஒரு பாத்திரத்தில் கொள்ளு சேர்த்து வறுத்துக்கொள்ள வேண்டும். பின்பு, அதே பாத்திரத்தில் எண்ணெய், உளுத்தம் பருப்பு மற்றும் கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். அதனுடன் பூண்டு, வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
பின்னர், வறுத்த கொள்ளுவில் புளி, தேங்காய் துருவல், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கலவை வதங்கியதும், வறுத்த பொருட்களுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இறுதியாக, ஒரு கடாயில் எண்ணெய், கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த சட்னியில் கலந்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான கொள்ளு சட்னி தயார். இந்த கொள்ளு சட்னியை இட்லி, தோசை போன்றவற்றுடன் தொட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.