MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறாரா சித்தராமையா?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறாரா சித்தராமையா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறாரா சித்தராமையா?

இந்தியா

கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலகுகிறாரா சித்தராமையா?

Admin
Last updated: மே 27, 2026 10:13 காலை
Admin
Share
SHARE

கர்நாடகாவில் 2023-ல் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவியது. நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சித்தராமையா முதல்வராக நியமிக்கப்பட்டார். அப்போது, சித்தராமையா இரண்டரை ஆண்டுகள் பதவி வகித்த பிறகு, டி.கே.சிவக்குமாருக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க வேண்டும் என கட்சி மேலிடம் ரகசிய ஒப்பந்தம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் எழுத்துப்பூர்வமாக இல்லாவிட்டாலும், சித்தராமையா சம்மதம் தெரிவித்ததாகத் தகவல்.

சித்தராமையா முதல்வராகப் பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில், துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தனக்கு முதல்வர் பதவி வழங்கப்பட வேண்டும் என திடீரெனக் கோரிக்கை விடுத்தார். இது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவாக 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்களும் குரல் கொடுத்ததால், கட்சிக்கும் ஆட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டது. சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே வார்த்தைப் போர் நீடித்தது.

இந்தச் சூழலில், காங்கிரஸ் மேலிடம் தலையிட்டு, கட்சி முடிவெடுக்கும் வரை பொறுமை காக்குமாறு டி.கே.சிவக்குமாருக்கு உத்தரவிட்டது. இதை ஏற்று, அவர் தனது கோரிக்கையைத் தற்காலிகமாக ஒத்திவைத்தார். இந்நிலையில், முதல்வர் சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகியோரை டெல்லிக்கு அழைத்த காங்கிரஸ் மேலிடம், நேற்று முன்தினம் இரவு டெல்லி சென்றனர். நேற்று, காங்கிரஸ் அலுவலகத்தில் ராகுல் காந்தியை முதல்வர் சித்தராமையா சந்தித்துப் பேசினார்.

இந்த ஆலோசனையின்போது, ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு ராகுல்காந்தி கேட்டுக்கொண்டதாகத் தெரிகிறது. இதை ஏற்று, முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சித்தராமையா முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கர்நாடக அரசியலில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, முதல்வர் சித்தராமையா தனது ஆதரவு அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும், அவர் தனது ராஜினாமா முடிவில் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், சித்தராமையா மாநிலங்களவை எம்.பி.யாக வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Karnataka Politicsஅரசியல்கர்நாடகாகாங்கிரஸ்சித்தராமையாடி.கே. சிவக்குமார்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உரிமையியல் வழக்குகளில் அரசுக்காக வாதாட 17 புதிய வழக்கறிஞர்கள் நியமனம்
Next Article ஐபிஎல் 2026: இறுதிப்போட்டிக்கு ஆர்சிபி, ரஜத் பட்டிதார் அதிரடி சாதனை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மலப்புரம் குடியிருப்பு பகுதிக்குள் உலா வரும் காட்டு யானை

கேரளாவில் ஒற்றை காட்டு யானை உலா: மலப்புரம் மக்கள் அச்சம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில், குடியிருப்புப் பகுதிக்குள் ஒற்றைக் காட்டு யானை ஒன்று…

ஜூலை 31, 2026

காவி உடையணிந்து, உண்டியலில் பணம் போட்ட ராகுல்: எதிர்க்கட்சி நூதனப் போராட்டம்

அயோத்தி ராமர் கோயில் நிதி விவகாரத்தை கண்டித்து…

ஜூலை 31, 2026

பிரதமர் மோடியின் செல்ஃபி வீடியோவை விமர்சித்த அபிஜித் தீப்கே

பிரதமர் மோடியின் 'வினாத்தாள் கசிவு தடுப்புச் சட்டத்…

ஜூலை 31, 2026

பிரதமர் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.6,000 மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் பிரதமரின் கிசான்…

ஜூலை 31, 2026

விவாகரத்து கோரி உமர் அப்துல்லா, பாயல் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா…

ஜூலை 31, 2026

You Might Also Like

இந்தியா

சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம்: ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

பயங்கரவாதம், சைபர் கிரைம், போதை மருந்து வர்த்தகம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுவதாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.

1 Min Read
கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா
இந்தியா

கேரளாவில் போதைப்பொருள் வேட்டை: 6700க்கும் மேல் கைது!

கேரளாவில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 6,700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ரூ.30-40 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தகவல்.

2 Min Read
இந்தியா

சென்னையில் குளிர்ந்த வானிலை: விமான சேவைகள் பாதிப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று திடீரென வானிலை மாற்றம் ஏற்பட்டு குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால், விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

2 Min Read
இந்தியா

மகனை இழந்த தந்தை வேதனை: திருமணத்தை நிறுத்தியிருக்கலாமே – புனே வழக்கு

புனேவில் இளம் தொழிலதிபர் கேதன் விஷால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது தந்தை, 'மகனை கொல்வதற்கு பதிலாக திருமணத்தை நிறுத்தியிருக்கலாமே' என கண்ணீருடன் வேதனை தெரிவித்துள்ளார்.…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?