தமிழகத்தில் செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவதாக தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது கருத்துக்களை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
முதலமைச்சர் விஜய், தமிழ்நாட்டில் உள்ள 717 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடப்பட்டிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், 'நீண்ட காலமாக இந்த கேள்விக்கு தீர்வு இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது இது செயல்பாட்டிற்கு வந்துள்ளது. இது மிகவும் நல்ல செய்தி. எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. இந்த உத்தரவு வரவேற்கத்தக்கது. இந்த முடிவை செயல்படுத்தியதற்காக முதலமைச்சர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்' என்று தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர் ஒருவர், 'திரைத்துறையில் இருந்து உங்களில் ஒருவராக இருந்த விஜய் இப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கிறார். அவருடைய செயல்பாடுகள் குறித்து உங்கள் கருத்து என்ன?' என்று கேட்டார். இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், 'மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், மக்களின் ஒருவராக இருப்பதற்கும் எந்த ஒரு துறையும் தடையில்லை. யார் முதலமைச்சராக வந்தாலும் மக்களின் தேவைகளைக் கேட்டு பூர்த்தி செய்வதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும். மேலும், எங்கள் துறையிலிருந்து ஒருவர் முதலமைச்சராக இருப்பதில் எனக்கு மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது' என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
டாஸ்மாக் கடைகளை மூடும் இந்த அரசின் நடவடிக்கை, மதுவிலக்கு மற்றும் மது ஒழிப்பு குறித்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய்யின் துரித நடவடிக்கை பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. கமல்ஹாசனின் பாராட்டுக்கள் இந்த அறிவிப்பின் முக்கியத்துவத்தை மேலும் உணர்த்துகின்றன.