MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெக விவகாரம்: ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் இடையே வார்த்தை மோதல்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெக விவகாரம்: ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் இடையே வார்த்தை மோதல்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - தவெக விவகாரம்: ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் இடையே வார்த்தை மோதல்!

அரசியல்

தவெக விவகாரம்: ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் இடையே வார்த்தை மோதல்!

Admin
Last updated: மே 26, 2026 10:04 மணி
Admin
Share
SHARE

காங்கிரஸ் கட்சியில் குதிரை பேர அரசியலை யார் நியாயப்படுத்தினாலும் அது தவறு என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, 'திடீரென சில தோழமை சுட்டுதல் நிபுணர்கள் அறிவுரை சொல்ல ஆரம்பித்துவிட்டனர்' என மற்றொரு காங்கிரஸ் எம்.பி.யான மாணிக்கம் தாகூர் எதிர்வினையாற்றியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது.

கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தனது எக்ஸ் பக்கத்தில், 'தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணியில் உள்ளது. ஆட்சியில் பங்கெடுத்திருக்கிறது. தமிழக மக்களுக்கு சிறப்பான ஆட்சியை தருவதற்கு நிச்சயம் அவருக்கு நாம் துணை நிற்போம். ஆனால், அதற்காக தவெக தேர்ந்தெடுக்கும் அனைத்து வழிமுறைகளையும் காங்கிரஸ் ஆதரிக்க முடியாது. குதிரை பேர அரசியலை காங்கிரஸ் கட்சியில் இருந்து யார் நியாயப்படுத்தினாலும் அது தவறானது. இந்தியாவில் ஜனநாயகத்தை, காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்த பாஜக முதலில் கையில் எடுத்த ஆயுதம் குதிரை பேரம். தமிழகத்தில் குதிரை பேரத்தை ஆதரிக்கும், தமிழகத்துக்கு வெளியே எதிர்க்கும் என்ற இரட்டை நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி ஒருபோதும் எடுக்க முடியாது. ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் ஒரு சக்தியாக காங்கிரஸ் செயல்பாடுமேயானால் அது காந்திக்கும், நேருவுக்கும், கொண்ட கொள்கைக்கும் செய்கிற வரலாற்றுத் துரோகமாக மாறிவிடும். ராகுல் காந்தி கொள்கைக்காக சமரசமற்று போராடி வரும் சூழலில் அந்தப் போராட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அதை ஏற்க முடியாது' என்று தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக மாணிக்கம் தாகூர் எம்.பி, '23-ம் தேதி காங்கிரஸ் ஒழிக… ராகுல் காந்தி ஒழிக என ஸ்டாலின் முன்னிலையில் கோஷம். காங்கிரஸை ஒட்டுண்ணி, துரோகி என்று உதயநிதி அணி தீர்மானம். 25-ம் தேதி காங்கிரஸின் போலி பாஜக எதிர்ப்பும் பல்லிளிக்கிறது என்று ஸ்டாலின் தாக்குதல். அப்போது அமைதி. ஒரு எக்ஸ் போஸ்ட் கூட இல்லை. ஒரு சத்தம் இல்லை. ஒரு கண்டனம் கூட இல்லை. ஆனால், இன்று திடீரென சில தோழமை சுட்டுதல் நிபுணர்கள் வந்து அறிவுரை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க' என சாடினார்.

மாணிக்கம் தாகூரின் இந்த எதிர்வினைக்கும் பதிலளித்த ஜோதிமணி எம்.பி, 'தவெக என்ற ஒரு கட்சி உருவாவதற்கு முன்பு இந்த திடீர் திமுக எதிர்ப்பாளர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று வரலாறு சொல்லும். காமராஜருக்காகக் கூட வாய் திறக்காமல் அவ்வளவு பயம்! நாம் எதிர்க்க வேண்டியது பாஜகவை. சக கட்சிக்காரர்களை அல்ல. காங்கிரஸ் எந்தக் கூட்டணியில் இருந்தாலும் ஆதரிக்க வேண்டிய விஷயங்களை ஆதரிப்பதும், எதிர்க்க வேண்டிய விஷயங்களை எதிர்ப்பதும், கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதும்தான் ஒரு உண்மையான காங்கிரஸ் தொண்டரின் கடமை. அப்பொழுதுதான் காங்கிரஸ் தனித்தன்மையையும், மதிப்பையும் காப்பாற்றிக் கொள்ள முடியும். அதிகாரத்துக்கு நெருக்கமாக காட்டிக் கொள்வதற்காக காங்கிரஸ் அடிப்படை கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ள முடியாது. செய்யவும் மாட்டேன். அதேபோல யாரிடமிருந்தும் எனது நம்பகத்தன்மைக்கு எந்த சான்றிதழும் தேவையில்லை. போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து செல்வோம்' என்று ஜோதிமணி குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅரசியல்காங்கிரஸ்தவெகமாணிக்கம் தாகூர்ஜோதிமணி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 50 திரிணமூல் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய தயார்: எம்.பி சவுமித்ரா கான்
Next Article ரஷ்யாவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு குறித்த செய்தி

சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் சுகதன், சிறையிலேயே பதவியேற்கலாம் என கேரள உயர்…

ஜூலை 14, 2026

ரயில்வேயில் நூதன திருட்டு: 4 ஆண்டுகளில் 1.27 கோடி பெட்ஷீட், துண்டுகள் மாயம்!

இந்திய ரயில்வேயில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும்…

ஜூலை 14, 2026

மராட்டியத்தில் லாரி மோதி 3 பக்தர்கள் பலி: 4 பேர் காயம்

மராட்டியத்தில் ஆன்மீக யாத்திரை சென்ற பக்தர்கள் மீது…

ஜூலை 14, 2026

மகளுக்கு அரசுப் பணி: தேர்வாணைய தலைவர் சஸ்பெண்ட்

கர்நாடக அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் சிவசங்கரப்பா…

ஜூலை 14, 2026

மகாராஷ்டிராவில் ரூ.1,500 திட்டம்: 92 லட்சம் பெண்கள் தகுதி நீக்கம்

மகாராஷ்டிராவில் மாதந்தோறும் ரூ.1,500 வழங்கும் 'மாஜி லட்கி…

ஜூலை 14, 2026

You Might Also Like

மாணிக்கம் தாகூர் ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்க பொதுக்கூட்டம் குறித்து அறிவிக்கிறார்
தமிழ்நாடு

ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்க குழுவில் கூடுதல் உறுப்பினர்கள் நியமனம்

ஊழலுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் பொதுக்கூட்டம் ஜூலை 15, 2026 அன்று நடைபெறுகிறது. இதற்காக பொதுக்கூட்ட குழுவில் கூடுதல் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என மாணிக்கம் தாகூர் அறிவித்துள்ளார்.

1 Min Read
இந்தியா

விஜய் உடன் ஒப்பீடா? – பவன் கல்யாண் விளக்கம்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது அரசியல் பயணம் தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் ஒப்பிடப்படுவது குறித்து விளக்கமளித்துள்ளார். இரு மாநில அரசியல் சூழல் வேறுபட்டது…

1 Min Read
அரசியல்

தவெக அரசு எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்: ஈ.பி.எஸ்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தற்போதைய தவெக அரசு ஒரு 'பொய்க்கால் குதிரை அரசு' என்றும், அது எப்போது வேண்டுமானாலும் கவிழலாம் என்றும்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

தவெக அரசின் முக்கிய அறிவிப்புகள்: ஆளுநர் உரை வெளியீடு

தவெக அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றினார். இதில் இருமொழிக் கொள்கை தொடரும், விவசாய கடன் தள்ளுபடி, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?