திருச்செந்தூர் கோயிலுக்கு வருகை தந்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே.வி.என் புரொடக்ஷன்ஸின் வெங்கட் கே.நாராயணா, தணிக்கைச் சான்றிதழ் விரைவில் கிடைக்கும் என நம்புவதாகவும், அதன்பின் பட வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சுவாமி தரிசனம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஜனநாயகன்' படம் குறித்த அறிவிப்புகள் தகுந்த நேரத்தில் வெளியாகும் என்றும், படத்தின் உலகளாவிய வெளியீடு பிரம்மாண்டமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் மாறியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அவர் தமிழ்நாட்டின் ஜனநாயகனாக திகழ்வது பெருமைக்குரிய விஷயம் என்றும் வெங்கட் கே.நாராயணா தெரிவித்தார்.
ஹெச். வினோத் இயக்கியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தணிக்கைச் சான்றிதழ் கிடைத்தவுடன் படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
