MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: IPL 2026: இன்ஸ்டாகிராமில் ஹர்திக் பாண்டியா செய்த மர்மமான செயல்.. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் விவாதம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: IPL 2026: இன்ஸ்டாகிராமில் ஹர்திக் பாண்டியா செய்த மர்மமான செயல்.. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் விவாதம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - IPL 2026: இன்ஸ்டாகிராமில் ஹர்திக் பாண்டியா செய்த மர்மமான செயல்.. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் விவாதம்

விளையாட்டு

IPL 2026: இன்ஸ்டாகிராமில் ஹர்திக் பாண்டியா செய்த மர்மமான செயல்.. மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் விவாதம்

Admin
Last updated: மே 11, 2026 9:50 காலை
Admin
Share
SHARE

மும்பை: 2026 ஐபிஎல் தொடரில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி பரிதாபமாக வெளியேறியுள்ள நிலையில், அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா செய்த ஒரு காரியம் சமூக வலைதளங்களில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலால் அவர் வெளியேறப்போகிறாரா அல்லது இது வெறும் தொழில்நுட்ப கோளாறா என்ற விவாதம் தற்போது அனல் பறக்கிறது. ராய்ப்பூரில் நடந்த பெங்களூரு அணிக்கு எதிரான தோல்விக்கு பிறகு ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை ‘அன்-பாலோ’ செய்ததாக வெளியான தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

2026 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 8 தோல்விகளைச் சந்தித்து, பிளே ஆப் வாய்ப்பை அதிகாரப்பூர்வமாக இழந்துவிட்டது. மே 10 அன்று பெங்களூரு அணியிடம் தோற்ற சில நிமிடங்களிலேயே, ஹர்திக் பாண்டியாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பின்தொடரும் கணக்குகளின் எண்ணிக்கை 151-ல் இருந்து 150 ஆகக் குறைந்தது. அந்தப் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ பக்கம் காணாமல் போனதை ரசிகர்கள் ஸ்கிரீன்ஷாட் எடுத்து வைரலாக்கினர். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே மீண்டும் அந்த எண்ணிக்கை 151 ஆக உயர்ந்ததுடன், மும்பை இந்தியன்ஸ் பக்கமும் அவரது பட்டியலில் மீண்டும் இடம் பெற்றது.

இந்த மர்மமான செயல் ரசிகர்கள் மத்தியில் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 2024-ம் ஆண்டு ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது முதலே மும்பை ரசிகர்களிடையே ஒரு பிரிவினை இருந்தது. நடப்பு சீசனும் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. விளையாடிய 8 போட்டிகளில் வெறும் 146 ரன்கள் மட்டுமே எடுத்தார். பந்துவீச்சிலும் 4 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார்.

முதுகுவலி காரணமாக 3 போட்டிகளில் அவர் விளையாடவில்லை. பெங்களூரு அணிக்கு எதிரான முக்கியமான போட்டியிலும் அவர் களம் இறங்கவில்லை. அவருக்குப் பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்தினார். இந்த இக்கட்டான சூழலில் தான் ஹர்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் செய்த இந்த வேலை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தற்செயலாக நடந்ததா அல்லது தோல்வி விரக்தியில் எடுக்கப்பட்ட முடிவா என்பது குறித்து ஹர்திக் தரப்பிலோ அல்லது மும்பை அணி நிர்வாகமோ இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாகவே இருப்பதாகத் தெரிகிறது. அணியின் தோல்விக்கு கேப்டன் மட்டுமே காரணம் அல்ல, டி20 ஆட்டமுறை மாறி வருவதே காரணம் என நிர்வாகம் கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒருபுறம் இருக்க, ஹர்திக் பாண்டியாவின் இந்த மர்மமான செயல் மும்பை இந்தியன்ஸ் அணியின் எதிர்காலத் திட்டங்கள் மற்றும் அவரது கேப்டன் பதவி குறித்த பலத்த சந்தேகங்களை மீண்டும் ஒருமுறை கிளப்பியுள்ளது. இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிரதமர் மோடி தலைமையில் சோம்நாத் கோயிலுக்கு இன்று கும்பாபிஷேகம்
Next Article வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்கும் மத்திய அரசு

பிரதமர் கிசான் திட்டம்: விவசாயிகளுக்கு ரூ.6,000 மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கும் பிரதமரின் கிசான் திட்டம் மேலும் 5 ஆண்டுகளுக்கு…

ஜூலை 31, 2026

விவாகரத்து கோரி உமர் அப்துல்லா, பாயல் அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு

ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா…

ஜூலை 31, 2026

பத்ரிநாத் கோயில் காணிக்கை திருட்டு: பணம், நகை மீட்பு

பத்ரிநாத் பத்ரி நாராயணன் கோயிலில் காணிக்கை திருட்டில்…

ஜூலை 31, 2026

சீமா வெண்கலப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை சீமாவிற்கு…

ஜூலை 31, 2026

காவிரி நீர் பங்கீட்டு சந்திப்பு ரத்து: ஜோசப் விஜய் பெங்களூரு பயணம் ஒத்திவைப்பு

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக கர்நாடகா-தமிழகம் இடையே…

ஜூலை 31, 2026

You Might Also Like

விளையாட்டு

ஏசி அறையை விட்டு வெளியே வாங்க: பாகிஸ்தான் முன்னாள் வீரர்களுக்கு அக்யுப் ஜாவித் எச்சரிக்கை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள், குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து விமர்சிப்பதை நிறுத்தி மைதானத்திற்கு வர வேண்டும் என மூத்த தேர்வாளர் அக்யுப் ஜாவித் எச்சரித்துள்ளார்.

1 Min Read
இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி
விளையாட்டு

15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி: 2027 உலகக்கோப்பைக்கு தயார்படுத்த சிவராமகிருஷ்ணன் யோசனை

15 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமாகி சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷிக்கு 2027 உலகக்கோப்பையில் வாய்ப்பளிக்க வேண்டும் என முன்னாள் வீரர் சிவராமகிருஷ்ணன் யோசனை தெரிவித்துள்ளார். அவருக்குத்…

2 Min Read
விளையாட்டு

ஐபிஎல்: ஒரே சீசனில் ஜொலித்து காணாமல் போன வீரர்கள் யார்?

ஐபிஎல் கிரிக்கெட்டில் ஒரு சீசனில் மின்னிய பிறகு, அதே ஃபார்மைத் தக்கவைக்க முடியாமல் காணாமல் போன வீரர்களின் கதைகளை இங்கே காணலாம்.

2 Min Read
விளையாட்டு

தாய்லாந்து ஓபன்: பிவி சிந்து அபார வெற்றி, அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்!

பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து தனது முதல் சுற்று ஆட்டத்தில் வெற்றி…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?