MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: IPL 2026: “அர்ஷ்தீப் சிங் இனி வீடியோ எடுத்தால்..”.. பிசிசிஐ விடுத்த அதிரடி உத்தரவு.. என்ன நடந்தது?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > விளையாட்டு > IPL 2026: “அர்ஷ்தீப் சிங் இனி வீடியோ எடுத்தால்..”.. பிசிசிஐ விடுத்த அதிரடி உத்தரவு.. என்ன நடந்தது?
விளையாட்டு

IPL 2026: “அர்ஷ்தீப் சிங் இனி வீடியோ எடுத்தால்..”.. பிசிசிஐ விடுத்த அதிரடி உத்தரவு.. என்ன நடந்தது?

Admin
Last updated: May 10, 2026 11:56 am
Admin
Share
SHARE

சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் வலம் வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர்களுக்கு திடீர் செக் வைத்துள்ளது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். குறிப்பாக சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமாக உள்ள நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு இந்த புதிய உத்தரவால் மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. தங்களது சொந்த சமூக வலைதளப் பக்கங்களுக்காக தனிப்பட்ட வீடியோக்கள் மற்றும் ரீல்ஸ் எடுப்பது தொடர்பாக பல கடுமையான புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன.

ஐபிஎல் தொடரில் ஊழல் மற்றும் சூதாட்டங்களை தடுக்கும் வகையில் ஊழல் தடுப்புப் பிரிவு தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில் ஐபிஎல் அணிகளுக்கு மிக கடுமையான சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில், வீரர்கள் தங்கும் ஹோட்டல் அறைகளுக்குள் அனுமதியற்ற நபர்கள் நுழைவது குறித்தும், சமூக வலைதளங்களில் பிரபலமான நபர்களுடன் ஐபிஎல் வீரர்கள் அதிக நெருக்கம் காட்டுவது குறித்தும் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தடை செய்யப்பட்ட மற்றும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வைத்து வீடியோக்கள் எடுப்பதற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி, வீரர்களின் அறைகளுக்குள் செல்ல விரும்பும் விருந்தினர்கள் இனி அணி மேலாளரிடம் கட்டாயம் எழுத்துப்பூர்வமாக முன் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. வீரர்களின் நடமாட்டத்தை அணி நிர்வாகம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகளை 48 மணி நேரத்திற்குள் அனைத்து வீரர்களுக்கும் விளக்கி, அவர்களிடம் ஒப்புதல் கையெழுத்து பெற வேண்டும் என அணிகளுக்கு கெடு விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தரம்சாலாவில் நடந்த பயிற்சிக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்தின் தலைமை அதிகாரி தனது வீரர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி புதிய விதிமுறைகளை வாசித்துக் காட்டி விளக்கினார்.

இதில் பஞ்சாப் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கிற்கு மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. அவருக்கு இன்ஸ்டாகிராம் தளத்தில் 6 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்ஸ் உள்ளனர். தொடர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வரும் அவருக்கு, இந்த புதிய விதிகள் மூலம் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது. இனிமேல் பஞ்சாப் அணி வீரர்களின் வீடியோக்கள் அனைத்தும் அந்த அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக மட்டுமே வெளியிடப்படும் என அணி நிர்வாகம் தரப்பில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அர்ஷ்தீப் சிங் ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே தனது காதலியுடன் ஹோட்டல் மற்றும் மைதானங்களுக்கு வெளியே சுற்றித் திரிவது பிசிசிஐ கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே, அர்ஷ்தீப் சிங் இனி கவனமாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மாநகர பேருந்து மோதி விபத்தில் பலியான பெயின்டர் குடும்பத்துக்கு ரூ.25.81 லட்சம் இழப்பீடு
Next Article முதல்-அமைச்சராக பதவியேற்கும் அன்பு தம்பி விஜய்க்கு வாழ்த்துகள் – பிரேமலதா
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளுக்கு கேரள முதல்வர் வி.டி.சதீசன்…

June 25, 2026

25 ஆண்டுகளுக்குப் பிறகு சிறுவயதில் இறந்தவர்களுக்கு திருமணம்

சிறுவயதில் இறந்தவர்களுக்கு 25 ஆண்டுகளுக்குப் பிறகு புத்தாடை,…

June 25, 2026

அயோத்தி ராமர் கோவிலை தகர்க்க சதியா? பயங்கரவாதி பகீர் வாக்குமூலம்

பெங்களூருவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி, அயோத்தி ராமர்…

June 25, 2026

ஈரான் உச்ச தலைவர் இறுதிச்சடங்கு: மோடிக்கு அழைப்பா?

ஈரான் உச்சபட்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி…

June 25, 2026

இமாச்சலில் கனமழை: 5 பேர் மாயம், 17 பேர் காயம்

இமாச்சல பிரதேசத்தில் கனமழை மற்றும் நிலச்சரிவால் 5…

June 24, 2026

You Might Also Like

விளையாட்டு

ஹர்திக் பாண்டியாவுக்கு வலை விரிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை தங்கள் அணிக்கு மாற்றிக்கொள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) ஆர்வம் காட்டி வருவதாக…

2 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: 50வது ஆட்டத்தில் முகமது சிராஜின் அசத்தல் பந்துவீச்சு… குஜராத்திடம் சன்ரைசர்ஸ் தடுமாறுமா?

169 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சாளர்களான முகமது சிராஜ் மற்றும் ககிசோ ரபாடா ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சால் துவக்கத்திலேயே இரண்டு…

2 Min Read
விளையாட்டு

CSK-க்கு பெரும் பின்னடைவு: ஜேமி ஓவர்டன் விலகல்! பிளே ஆஃப் கனவு கேள்விக்குறி?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஜேமி ஓவர்டன், தொடையில் ஏற்பட்ட காயத்தால் ஐபிஎல் 2026 தொடரில் இருந்து விலகியுள்ளார். இது அணிக்கு பெரும்…

1 Min Read
விளையாட்டு

29 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி: ரகானே கருத்து!

ஐபிஎல் கிரிக்கெட்டில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 29 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?