MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அயர்லாந்துக்கு எதிராக முதல் முறை டி20யில் இந்திய அணி தோல்வி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அயர்லாந்துக்கு எதிராக முதல் முறை டி20யில் இந்திய அணி தோல்வி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - அயர்லாந்துக்கு எதிராக முதல் முறை டி20யில் இந்திய அணி தோல்வி

விளையாட்டு

அயர்லாந்துக்கு எதிராக முதல் முறை டி20யில் இந்திய அணி தோல்வி

Admin
Last updated: ஜூன் 27, 2026 8:04 காலை
Admin
Share
SHARE

பெல்ஃபாஸ்ட்: அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 183 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, அயர்லாந்து அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 18.5 ஓவர்களில் 148 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லோர்கன் டக்கர் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய கரேத் டெலானி, ஒரு ரன்னில் அரைசத வாய்ப்பை இழந்து 49 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா 24 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். டி20 போட்டிக்குத் திரும்பிய பிரசித் கிருஷ்ணாவுக்கு இந்த நாள் சிறப்பாக அமையவில்லை. அவர் விக்கெட் ஏதுமின்றி 4 ஓவர்களில் 57 ரன்களைக் கொடுத்தார்.

183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர். எனினும், மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 19 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். ஆனால், அவர் ஆட்டமிழந்த பிறகு இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. நடுவரிசையில் ஷிவம் துபே 14 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ஜெய் முந்த்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அக்சர் படேல் 14 ரன்களுக்கும், ஹர்ஷித் ராணா 8 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு நழுவியது.

அயர்லாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மேத்யூ ஹம்ப்ரிஸ் அற்புதாமாக பந்துவீசி அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் இன்னிங்ஸை முடிவுக்குக் கொண்டுவந்தார். இறுதியில் இந்திய அணி 18.5 ஓவர்களில் 148 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அயர்லாந்து அணி தரப்பில் மேத்யூ ஹம்ப்ரிஸ் 3.5 ஓவர்களில் 38 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும், ஜெய் முந்த்ரா 4 ஓவர்களில் 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினர். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக அயர்லாந்திடம் இந்தியா தோல்வியை தழுவியது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அயர்லாந்துஇந்தியாகிரிக்கெட்டி20விளையாட்டு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஹஜ் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: ஜூலை 20க்குள் விண்ணப்பிக்கலாம்!
Next Article உங்களுக்காக போராடுவேன்: ராகுல் காந்தி உறுதி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம் அளிக்கிறார்

அருணாச்சலில் சீன ஊடுருவல் இல்லை: மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு

அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் 60 கி.மீ. இந்தியப் பகுதிக்குள் ஊடுருவியதாக வெளியான…

ஆகஸ்ட் 20, 2026

10 ஆண்டு காத்திருப்புக்கு பின் குருவாயூர் கோயிலில் திருமணம்: ஸ்காட்லாந்து எம்பி மார்ட்டின் டே-நிதின் சந்த் இணைந்தனர்

10 ஆண்டு காத்திருப்புக்குப் பிறகு, ஸ்காட்லாந்து எம்பி…

ஆகஸ்ட் 20, 2026

திருப்பதி உண்டியலில் ஒரே நாளில் ரூ.6.12 கோடி காணிக்கை குவிந்தது

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் பக்தர்கள்…

ஆகஸ்ட் 20, 2026

பி.எம். கேர்ஸ் நிதி ரூ.8,452 கோடியாக உயர்வு: வட்டி வருவாய் ரூ.475 கோடி

பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட ‘பி.எம். கேர்ஸ்’ நிதியின்…

ஆகஸ்ட் 20, 2026

சென்னையை அடுத்த முக்கிய ரயில் வழித்தடங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல்

கும்மிடிப்பூண்டி-கூடூர் இடையே இரண்டு புதிய ரயில் வழித்தடங்கள்…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

உலக கோப்பை கால்பந்து: நியூசிலாந்தை வீழ்த்தி எகிப்து முதலிடம்

உலக கோப்பை கால்பந்து போட்டியில், நியூசிலாந்து அணியை வீழ்த்தி எகிப்து அணி புள்ளி பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் எகிப்து அணி தொடரில்…

1 Min Read
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில்
விளையாட்டு

இந்தியாவின் தோல்விக்கு பந்துவீச்சாளர்களே காரணம்: கேப்டன் சுப்மன் கில் குற்றச்சாட்டு

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்த இந்திய அணியின் தோல்விக்கு பந்துவீச்சாளர்களே காரணம் என கேப்டன் சுப்மன் கில் குற்றம் சாட்டியுள்ளார். கடைசி ஓவர்களில் அதிக ரன்கள்…

3 Min Read
விளையாட்டு

ஐபிஎல் 2026: 15 வயது வைபவ் அதிரடி! சன்ரைசர்ஸ் வெளியேற்றம், ராஜஸ்தான் முன்னேற்றம்

ஐபிஎல் 2026 எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 47 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குவாலிபையர் 2க்கு முன்னேறியது. 15 வயது வைபவ் சூர்யவன்ஷி…

1 Min Read
இந்திய கிரிக்கெட் கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் செய்யும் காட்சி
விளையாட்டு

இந்தியா vs இலங்கை: சுப்மன் கில் ஏமாற்றம், கேப்டன்சிக்கு கேள்வி

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில், இந்திய கேப்டன் சுப்மன் கில் வெறும் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். ஜெயசூர்யா பந்தில் சிக்கிய…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?