இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஆறாவது இடத்தில் யார் விளையாட வேண்டும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் இலங்கையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. காயமடைந்த சாய் சுதர்சன் விலகியதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக சர்பராஸ் கான் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தற்போது, ஆறாவது வரிசையில் சர்பராஸ் கானுக்கும் துருவ் ஜூரலுக்கும் இடையே யார் விளையாட வேண்டும் என்பதில் பெரும் விவாதம் எழுந்துள்ளது.
இதுகுறித்து தனது கருத்தை வெளிப்படுத்திய வாசிம் ஜாபர், தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் களமிறங்குவார்கள் என்றும், பயிற்சிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 142 ரன்கள் எடுத்த தேவ்தத் படிக்கல் மூன்றாவது இடத்திலும், கேப்டன் சுப்மன் கில் நான்காவது இடத்திலும், ரிஷப் பந்த் ஐந்தாவது இடத்திலும் விளையாடுவார்கள் என்றும் கணித்துள்ளார்.
துருவ் ஜூரல் மற்றும் சர்பராஸ் கான் ஆகிய இருவரில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜூரலுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று ஜாபர் தேர்வு செய்துள்ளார். சர்பராஸ் கான் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளார். ஆனால், ஜூரல் கடந்த சில காலமாக அணியுடன் தொடர்ந்து பயணித்து வருகிறார். படிக்கல் சதம் அடித்திருப்பதால் அவர் மூன்றாவது இடத்தில் விளையாடுவார். ரிஷப் பந்த் ஐந்தாவது இடத்தில் விளையாடலாம். ஆறாவது இடத்தில் சர்பராஸ் அல்லது துருவ் ஜூரல் விளையாடலாம். ஜடேஜாவும் அணியில் இருக்கிறார், அவர் நிச்சயமாக இரண்டாவது ஸ்பின்னராக விளையாடுவார்.
ஜூவல் மற்றும் சர்பராஸ் ஆகியோருக்கு இடையே தான் போட்டி இருக்கும். ஜூரல் கடந்த சில காலமாக அணியில் இருப்பதால் அவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்று நான் நினைக்கிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்குத் திரும்புபவர், தனது வாய்ப்பிற்காக காத்திருக்க வேண்டும். அணியின் தொடர்ச்சியைத் தக்கவைக்க ஜூரல் விளையாட வேண்டும் என்று நான் கருதுகிறேன் என வாசிம் ஜாபர் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
சர்பராஸ் கான் கடைசியாக 2024 இல் டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அவர் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான அணியில் இடம் பெற்றிருந்தாலும், ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு நடந்த டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார். துருவ் ஜூரல் கடந்த சில காலமாக அணியுடன் தொடர்ந்து பயணித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் ஆகஸ்ட் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிளேயிங் லெவனில் யார் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
வாசிம் ஜாபரின் இந்த கருத்துக்கள் கிரிக்கெட் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்பராஸ் கானின் சமீபத்திய ஃபார்ம் மற்றும் துருவ் ஜூரலின் தொடர்ச்சியான இருப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, தேர்வுக்குழுவினர் என்ன முடிவெடுப்பார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்திய அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையில் இந்திய அணி இலங்கையில் டெஸ்ட் தொடரை வெல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த தொடர் இந்திய அணிக்கு ஒரு புதிய தொடக்கமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
