MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ”தவறு செய்ய மாட்டேன்.. செய்யவும் விடமாட்டேன்”: முதல்-அமைச்சர் விஜய் உறுதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - ”தவறு செய்ய மாட்டேன்.. செய்யவும் விடமாட்டேன்”: முதல்-அமைச்சர் விஜய் உறுதி

அரசியல்

”தவறு செய்ய மாட்டேன்.. செய்யவும் விடமாட்டேன்”: முதல்-அமைச்சர் விஜய் உறுதி

Admin
Last updated: மே 10, 2026 5:57 மணி
Admin
Share
SHARE

முதல்-அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் விஜய் மக்கள் மத்தியில் பேசியதாவது;

”என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் எனது வணக்கம். சினிமாவில் கஷ்டப்பட்டு வெற்றி பெற வேண்டுமென இருந்த சாதாரண உதவி இயக்குநருக்கு பிறந்த பிள்ளைதான் நான். வறுமை, பசி எனக்கும் தெரியும். நான் ஒன்றும் பெரிய மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் கிடையாது. உங்களில் ஒருவன். உங்கள் பிள்ளை, உங்கள் அண்ணன், உங்கள் தம்பி மாதிரி தான் நான் உணர்கிறேன். நீங்களும் அப்படி நினைப்பதால் தான் என்னை இங்கு நிற்க வைத்திருக்கிறீர்கள்.

உங்களுக்காக நன்றிக்கடன் செலுத்த வந்த என்னை, ’நாங்கள் இருக்கிறோம்.. பார்த்துக்கலாம்’ என அன்பாக, உறவாக ஏத்துக்கொண்டீர்கள். எனக்காக கூட நின்ற உங்களுக்கும் கஷ்டங்கள், அவமானங்களை பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் என் கூடவே நின்று இன்று ’சி.ஜோசப் விஜய் எனும் நான்’ என்பதை உண்மையாக்கி உள்ளீர்கள்.

எது சாத்தியமோ அதுமட்டும்தான் நான் செய்வேன். அப்போ சாத்தியம் இல்லாத்தை செய்ய மாட்டியா? என நீங்கள் கேள்வி கேட்பது தெரிகிறது. இத்தனை கோடி மக்கள் என்னுடன் இருக்கும்போது எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற உறுதி எனக்கு உள்ளது.

தமிழகத்தின் நிதிநிலை மோசமாக உள்ளது. 10 லட்சம் கோடி கடன் தமிழ்நாட்டின் கடனாக உள்ளது. தூக்க முடியாத சுமையை ஏற்றி வைத்துள்ளார்கள். என்ன இருக்கு, எது இல்லை என்பதை உள்ளே போய் பார்த்தால்தான் தெரியும். அதனை ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிட உள்ளேன். அதன் பின்னர் முன்னோக்கி செல்ல உள்ளேன்.

இவ்வளவு பெரிய பொறுப்பை எனக்கு கொடுத்துள்ளீர்கள். அதேபோல எனக்கு கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். பெண்கள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். போதைப்பொருளை ஒழிப்பேன். நண்பர்களாக இருந்தாலும், எதிரிகளாக இருந்தாலும் 8 கோடி மக்களும் என் மக்கள்தான்.

ரேஷன், மருத்துவம், குடிநீர், சாலை வசதிகளில் முழு கவனம் செலுத்துவேன். மக்கள் பணத்தில் ஒரு பைசவும் தொட மாட்டேன். விஜய் தப்பு பன்ன மாட்டான். தப்பு பன்னவும் விடமாட்டான். என் கூட இருப்பர்களாக இருந்தாலும் சரி. நாம் ஜெயித்துவிட்டோம். ஒரு ஆட்டம் ஆடி பார்த்துவிடலாம் என நினைப்பர்வர்கள் இப்பவே சென்றுவிடுங்கள். இங்கு ஒரே பவர் செண்ட்டர்தான்.

பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள் என அனைவரும் நமது அரசில் நல்லா இருப்போம். சிறுபாண்மை சகோதரர்களுக்காக நமது அரசு கூடவே இருக்கும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி.

விஜய்யின் குட்டி நண்பா, நன்பிகளுக்கு நன்றிகள். உங்களுக்காக அனைத்து நல்ல விஷயங்களையும் விஜய் மாமா செய்து கொடுப்பான். முக்கியமாக தமிழக வெற்றிக்கழக தோழர்களுக்கு எனது நன்றிகள். எனக்கு ஆதரவளித்த அனைத்து கட்சியினருக்கும் நன்றி. இது ஒரு புதிய தொடக்கம். மீண்டும் மீண்டும் சந்திப்போம். வணக்கம். ”

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதல்-அமைச்சர் விஜய்க்கு இயக்குனர் ​நெல்சன் வாழ்த்து
Next Article ஐரோப்பிய நாடுகளுக்கு மே15ல் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்..
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று திட்டமிட்டபடி கரூர் மாவட்டத்திற்கு வருகை…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

You Might Also Like

அரசியல்

மின்வெட்டுக்கு காரணங்கள் என்ன? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

தமிழகம் முழுவதும் பரவலாக ஏற்பட்டு வரும் திடீர் மின்வெட்டு சம்பவங்கள் குறித்து, மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் முக்கிய விளக்கங்களை அளித்துள்ளார். மின்சார தட்டுப்பாடு எதுவும்…

2 Min Read
அரசியல்

வெளிநாட்டு குடியுரிமை: வாக்களித்தோர் கைது – திமுகMP கண்டனம்!

வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 25 பேர் தமிழக தேர்தலில் முறைகேடாக வாக்களித்ததாக தகவல். திமுக எம்பி வில்சன், வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

1 Min Read
அரசியல்

விஜய் மீது சிபிஐ வழக்கு?: அதிமுக எம்.பி. கருத்தால் சர்ச்சை

முதல்வர் ஸ்டாலின் மீது சிபிஐ வழக்கு தொடர வாய்ப்புள்ளதாக அதிமுக எம்.பி. இன்பதுரை கருத்து தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
அரசியல்

செய்யாத பணிக்கு ரூ.16 லட்சம்: காரைக்குடி மாநகராட்சி மீது ஒப்பந்ததாரர் புகார்

காரைக்குடி மாநகராட்சியில் செய்யாத பணிக்காக ரூ.15.80 லட்சம் வழங்கப்பட்டதாக ஒப்பந்ததாரர் பாண்டி புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த கோரிக்கை விடுத்துள்ளார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?