MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தமிழ்நாடு

விடுமுறை தினம்: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Admin
Last updated: May 10, 2026 12:24 pm
Admin
Share
SHARE

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவார்கள்.

இந்தநிலையில் இன்று ஞாயிறு விடுமுறையையொட்டி காலையில் இருந்தே கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். அவர்கள் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.

அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர். காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, சன்செட் பாயிண்ட், அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.

சபரிமலை சீசன் என்பதால், கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்திருந்தனர். கடற்கரையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசாரும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், சுற்றுலா பாதுகாவலர்களும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 9 அமைச்சர்கள் பதவியேற்பு
Next Article C.ஜோசப் விஜய் எனும் நான்… ஆனந்த கண்ணீரில் விஜயின் பெற்றோர்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அசாம் மாநில முதல்-மந்திரியாக ஹிமந்த பிஸ்வ சர்மா மீண்டும் தேர்வு

அசாம் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தொடர்ந்து…

May 10, 2026

திருப்பதியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சாமி தரிசனம்

இந்தியாவில் 5 மாநில தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று…

May 10, 2026

கர்நாடகா: தெரு நாய் கடித்ததில் 4 மாத பச்சிளம் குழந்தை பலி

கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம், ஹும்னாபாத் தாலுக்கா,…

May 10, 2026

அசாமில் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்-ஹிமந்தா பிஸ்வா சர்மா..

ஹிமந்தா பிஸ்வா சர்மா ஞாயிற்றுக்கிழமை அசாமில் பாஜக…

May 10, 2026

கேரள புதிய முதல் மந்திரி யார்? காங்கிரஸ் கட்சிக்குள் நீடிக்கும் இழுபறி

கேரள மாநிலத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இடதுசாரி…

May 10, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கருப்பு பேண்ட், வெள்ளை சட்டை: Tuck செய்து மிடுக்காக வந்து இறங்கினார் விஜய்

தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ், இரண்டு இடது சாரி கட்சிகள், விசிக, ஐ.யு.மு.லீ. ஆதரவுடன்…

1 Min Read
தமிழ்நாடு

த.வெ.க. அமைச்சரவை உத்தேச பட்டியல்..!

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் ஆளுநர் அர்லேகரிடம் ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டியை சமர்பித்ததால், ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை…

1 Min Read
தமிழ்நாடு

தவெகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு? – திருமாவிடம் கடிதத்தை பெறும் ஆதவ் அர்ஜுனா?

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் த.வெ.க. 108 இடங்களில் வெற்றி பெற்றது. ஆனால் அந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி த.வெ.க. வுக்கு ஆதரவு…

1 Min Read
தமிழ்நாடு

நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்க ஆளுநரிடம் நேரம் கேட்டார் த.வெ.க. தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன. இதனைத்…

0 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?