MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

லைஃப் ஸ்டைல்

தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்பு!

Admin
Last updated: மே 9, 2026 8:33 மணி
Admin
Share
SHARE

சென்னை: ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையுடன் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை, தவெக தலைவர் விஜய் இன்று (சனிக்கிழமை) மாலை சந்தித்ததை அடுத்து, ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதும், நாளை காலை 10 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் விஜய் முதல்வராக பதவியேற்க இருப்பதும் உறுதியாகியுள்ளது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், விஜய் தலைமையிலான தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், விஜய் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. இதன் காரணமாக தவெகவின் எண்ணிக்கை 107 ஆக குறையும். ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்களின் எண்ணிக்கை தேவை எனும் நிலையில், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவைக் கேட்டு விஜய் கடிதம் எழுதி இருந்தார்.

அதன் பேரில், முதல் கட்சியாக காங்கிரஸ் தனது ஆதரவை அறிவித்தது. காங்கிரஸ் கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் உள்ளதால், தவெக தலைமையிலான கூட்டணியின் பலம் 112 ஆக அதிகரித்தது. இந்நிலையில், சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகள் நேற்று தங்கள் ஆதரவை அறிவித்தன. அந்த இரு கட்சிகளுக்கும் தலா 2 எம்எல்ஏக்கள் உள்ளதால், பலம் 116 ஆக உயர்ந்தது.

இதன் தொடர்ச்சியாக, இன்று மாலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் தங்கள் ஆதரவை அறிவித்தன. இவ்விரு கட்சிகளுக்கும் தலா 2 எம்எல்ஏக்கள் இருப்பதால் பலம் 120 ஆக அதிகரித்தது. இதன் காரணமாக தவெக பெரும்பான்மை பலத்தை பெற்றுள்ளது.

இதையடுத்து, ஆளுநரைச் சந்திக்க விஜய் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இன்று இரவு 7.20 மணிக்கு விமானம் மூலம் கேரளா செல்ல திட்டமிட்டிருந்த ஆளுநர் அர்லேகர், விஜய் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு தனது பயணத்தை ரத்து செய்தார். மேலும், மாலை 6.30 மணி அளவில் சந்திக்க விஜய்க்கு அவர் நேரம் ஒதுக்கினார்.

இதன் பின்னர், ஆளுநரை நேரில் சந்தித்த விஜய், பெரும்பான்மை பலம் இருப்பதற்கான கடிதங்களை நேரில் வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். விஜய் உடன் கூட்டணி கட்சித் தலைவர்களான காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம், சிபிஎம் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன், சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன், விசிக எம்எல்ஏ வன்னி அரசு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

விஜய்க்கு பெரும்பான்மை பலம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்ட ஆளுநர், அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதும், நாளை காலை 10 மணியளவில் விஜய் பதவியேற்பதும் உறுதியானது. சென்னை நேரு விளையாட்டரங்கில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

தாமதத்துக்கான காரணம் குறித்து ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, அதன் அடிப்படையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி இருந்தால் ஆளுநர் அப்போதே அதற்கு சம்மதம் தெரிவித்திருப்பார். விஜய்யும் உடனடியாக முதல்வர் பதவியை ஏற்றிருப்பார். ஆனால், கூட்டணி ஆட்சி அமைக்க இருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியின் 5 எம்எல்ஏக்கள் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் கூறி விஜய் தனது முதல் கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார்.

கூட்டணி ஆட்சி என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததால், போதிய பெரும்பான்மை இல்லாதததை ஆளுநர் சுட்டிக்காட்டினார். போதிய பெரும்பான்மையுடன் வந்தால் உடனடியாக ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறினார். பெரும்பான்மையை திரட்டுவதில் விஜய்க்கு ஏற்பட்ட தாமதம் காரணமாக, ஆளுநர் அழைப்பு விடுக்காமல் இருந்தார். இன்று பெரும்பான்மை கிடைத்ததை அடுத்து ஆளுநர் விஜய்க்கு ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மீண்டும் ஆளுநரைச் சந்திக்க புறப்பட்டார் விஜய்
Next Article அர்ஜூன் தாஸின் “கான் சிட்டி” படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி ஆட்டோ ரிக்ஷாவில் பயணிக்கும் காட்சி

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார் தாமதமானதால் ஆட்டோவில் பயணித்த சம்பவம்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில்…

ஆகஸ்ட் 9, 2026

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

அரியலூர் பள்ளி: பல்லி கலந்த உணவு, 90 மாணவர்கள் பாதிப்பு!

அரியலூர் பள்ளியில் பல்லி கலந்த மதிய உணவை சாப்பிட்ட 90 மாணவர்கள் வாந்தி, மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

சர் சி.வி. ராமன் பாராட்டிய ஜி.டி. நாயுடு: ஒரு கோடிக்கு ஒருவர்!

கோவை கண்டுபிடிப்பாளர் ஜி.டி. நாயுடுவை, விஞ்ஞானி சர் சி.வி. ராமன் 'ஒரு கோடிக்கு ஒருவர்' எனப் பாராட்டியது அவரது திறமைக்குக் கிடைத்த பெரும் அங்கீகாரம். தலைவர்கள் வருகையும்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

டெல்லி தமிழ்ச் சங்கம் ‘நந்தன்’ படத்திற்கு பாராட்டு: மீண்டும் திரையிட ஏற்பாடு!

டெல்லி தமிழ்ச் சங்கம் 'நந்தன்' திரைப்படத்தை சிறப்புற கவுரவித்துள்ளதுடன், அதனை மீண்டும் திரையிடவும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. இது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமையாகப் பார்க்கப்படுகிறது.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

டாஸ்மாக்கில் AI இயந்திரம்: காலி பாட்டில்களுக்கு ரூ.10!

டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ், எழும்பூரில் AI வசதி கொண்ட தானியங்கி இயந்திரம் சோதனை முறையில் அறிமுகம். பாட்டிலுக்கு ரூ.10…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?