MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த சமநிலை கொள்கை: அழகப்பா அன்பழகன் கோரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த சமநிலை கொள்கை: அழகப்பா அன்பழகன் கோரிக்கை

தமிழ்நாடு

எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்த சமநிலை கொள்கை: அழகப்பா அன்பழகன் கோரிக்கை

Admin
Last updated: மே 24, 2026 9:56 மணி
Admin
Share
SHARE

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் பெரும் பொருளாதார சுமையை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும், இதை கட்டுப்படுத்த மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் சமநிலையான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அழகப்பா அ. அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் விலை நிர்ணய கொள்கைகளால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் நேரடி தாக்கமாக போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து, பொதுமக்கள் பெரும் பொருளாதார சுமையை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் சமநிலையான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்த காலகட்டங்களிலும் மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் அதற்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை பெரிய அளவில் குறைக்கவில்லை. 2023-24 நிதியாண்டில் அரசு எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க லாபம் ஈட்டியுள்ளன. குறிப்பாக 2024 நிதியாண்டில் இருந்து தற்போது வரை ஏறக்குறைய 82,000 கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் லாபம் அடைந்துள்ளதாக மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில், அதன் முழு சுமையையும் பொதுமக்கள் மீது சுமத்தாமல், மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் தங்களது வரி மற்றும் விலை நிர்ணயத்தில் சமநிலையான அணுகுமுறையை கடைப்பிடித்து, பொதுமக்களின் நலனை பாதுகாக்க வேண்டும்.

இது ஒருபுறம் இருக்க, தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் ஆண்டுதோறும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதிமுறைகளின்படி சுமார் 5% வரை திருத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள சுமார் 60 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுங்க கட்டண உயர்வு போக்குவரத்து செலவினை மேலும் அதிகரித்து, அதன் தாக்கம் அத்தியாவசிய பொருட்களின் விலையிலும் பிரதிபலிக்கும் என்ற கவலை பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து துறையினரிடையே எழுந்துள்ளது.

ஒருபுறம், தனிநபர் வாகன பயன்பாட்டை குறைத்து, பொது போக்குவரத்து பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசும் பாரத பிரதமரும் பல்வேறு சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் மறுபுறம், பொது போக்குவரத்தில் பெரும் அளவில் பயன்படுத்தப்படும் பேருந்து போன்ற வாகனங்களுக்கு எரிபொருள் விலை உயர்வு மற்றும் சுங்க கட்டண உயர்வு தொடர்ந்து அமல்படுத்தப்படுவது, பொது போக்குவரத்து துறையின் செயல்பாட்டு செலவினை அதிகரித்து, அதன் சுமை பொதுமக்கள் மீதும் மறைமுகமாக பாதிப்பை ஏற்படுத்தும் சூழலை உருவாக்குகிறது. எனவே, பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில், பேருந்து போன்ற சேவை வாகனங்களுக்கு எரிபொருள் விலை மற்றும் சுங்க கட்டணங்களில் சிறப்பு சலுகை வழங்க வேண்டும்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Naduஅழகப்பா அன்பழகன்எரிபொருள் விலைசுங்கச்சாவடிடீசல்பெட்ரோல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மணிக்கட்டு காயம் வதந்தி: சூர்யகுமார் யாதவ் ஆவேசம்
Next Article திமுகவுடன் இணைந்து செயல்படுவோம் – மனிதநேய மக்கள் கட்சி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி திருமலையில் 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம் செய்யும் 116 வயது மூதாட்டி

116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்!

திருப்பதி திருமலையில் 116 வயது மூதாட்டி 3,550 படிகள் ஏறி ஏழுமலையானை தரிசனம்…

ஜூலை 5, 2026

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும்…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ.…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

You Might Also Like

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி
தமிழ்நாடு

பிரச்சனைகளை தயக்கமின்றி தெரிவிக்கலாம் – கவர்னர் ஆர்.என். ரவி

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, பொதுமக்கள் தங்கள் பிரச்சனைகளை தயக்கமின்றி லோக் பவனில் தெரிவிக்கலாம் என்றும், அவற்றுக்கு தீர்வு காண தமிழக அரசுடன் இணைந்து செயல்படுவேன் என்றும்…

1 Min Read
தமிழ்நாடு

கூடலூர் காபி தோட்டத்தில் காட்டு யானை உயிரிழப்பு

கூடலூர் தொரப்பள்ளி காபி தோட்டத்தில் கிணற்றில் விழுந்து இறந்த காட்டு யானை. மின் மோட்டார், வயர்கள் அருகே இருந்ததால் மின்சாரம் தாக்கி இறந்ததா என விசாரணை.

1 Min Read
தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் தொல்லை: த.வெ.க. பிரமுகர் கைது

மதுரை பரவை அருகே 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக த.வெ.க. பிரமுகர் கண்ணன் கைது செய்யப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார்…

1 Min Read
தமிழ்நாடு

நள்ளிரவில் DMK நிர்வாகியை கைது செய்ய முயற்சி: போலீஸ் சோதனை!

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே ஜென் Z திமுக நிர்வாகி அன்பானந்தம் வீட்டில் நள்ளிரவில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?