MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வனத்துறை உணவுப்படி நிதியில் முறைகேடு அம்பை வனக்கோட்டத்தில் குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வனத்துறை உணவுப்படி நிதியில் முறைகேடு அம்பை வனக்கோட்டத்தில் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வனத்துறை உணவுப்படி நிதியில் முறைகேடு அம்பை வனக்கோட்டத்தில் குற்றச்சாட்டு

தமிழ்நாடு

வனத்துறை உணவுப்படி நிதியில் முறைகேடு அம்பை வனக்கோட்டத்தில் குற்றச்சாட்டு

Fernandez
Last updated: செப்டம்பர் 13, 2026 4:09 மணி
Fernandez
Share
வனத்துறை ஊழியர்கள் உணவுப்படி நிதி முறைகேடு தொடர்பாக புகார் அளிக்கும் காட்சி
வனத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவுப்படி நிதியில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு.
SHARE

அம்பை வனக்கோட்டத்தில் வனத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவுப் படி நிதியில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கீழ் செயல்படும் அம்பாசமுத்திரம் மற்றும் களக்காடு வனக்கோட்டங்கள், கடினமான மலை மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளைக் கொண்டவை. இப்பகுதிகளில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 0 அடி முதல் 6,000 அடி உயரம் வரை உள்ள நிலப்பரப்புகளில் களப்பணியாளர்கள் தினசரி நடைபயணம் மேற்கொண்டு வனப்பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேட்டைத் தடுப்பு, வனக்கண்காணிப்பு, வனவிலங்கு கணக்கெடுப்பு, பல்லுயிர் பாதுகாப்பு போன்ற பல்வேறு பணிகளை மிகவும் கடினமான சூழ்நிலைகளில் மேற்கொண்டு வரும் பணியாளர்களுக்கு, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மாதந்தோறும் ரூ.840/- உணவுப்படியாக வழங்கப்பட்டு வந்தது. இந்த உணவுப்படி நவம்பர் 2025 வரை வழங்கப்பட்டதாகவும், டிசம்பர் 2025 முதல் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வனச்சரகர், துணை இயக்குநர் மற்றும் கள இயக்குநர் ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், நிலுவையில் உள்ள உணவுப்படிக்கான தொகை இதுவரை கிடைக்கவில்லை எனப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீப காலங்களில், இந்த உணவுப்படி தொடர்பான நிதித் தொகைகள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அல்லது ஒப்பந்ததாரர்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

தற்போதுள்ள வனத்துறை அதிகாரிகள், போலியான பில்களைத் தயாரித்து, உணவுப்படி பணத்தை மோசடி செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஒருபுறமிருக்க, வேட்டைத் தடுப்பு முகாம்களுக்கான உணவு மற்றும் உணவுப்படி, சிங்கவால் குரங்கு கணக்கெடுப்பு, புலிகள் கணக்கெடுப்பு, மலை மொங்கான் பறவை கணக்கெடுப்பு, வரையாடு கணக்கெடுப்பு, தவளை ஆராய்ச்சி போன்ற பல்வேறு வனவிலங்கு மற்றும் பல்லுயிர் சார்ந்த களப்பணிகளுக்காக ஒதுக்கப்படும் உணவு மற்றும் நிதிப் பயன்பாடு குறித்தும் பணியாளர்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

எனவே, அனைத்துப் பணிகளுக்கும் கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட மற்றும் செலவிடப்பட்ட உணவு, உணவுப்படி, பயணச் செலவு மற்றும் தொடர்புடைய நிதி ஒதுக்கீடுகள் குறித்து முழுமையான கணக்குத் தணிக்கை மேற்கொண்டு, உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பக களப்பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வனப்பாதுகாப்புப் பணிகளில் அயராது உழைக்கும் களப்பணியாளர்களின் நலன் கருதி, உணவுப்படிக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவும், நிதி முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வனத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வனக்கோட்டங்களில் நடைபெறும் இந்த நிதி முறைகேடுகள், களப்பணியாளர்களின் மன உறுதியைப் பாதிப்பதாகவும், அவர்களின் பணிச் சூழலைச் சிக்கலாக்குவதாகவும் கருதப்படுகிறது. எனவே, இதுகுறித்து உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, நியாயமான தீர்வைக் காண வேண்டும் என்பதே களப்பணியாளர்களின் ஒருமித்த குரலாக உள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AmbaiFood AllowanceForest DepartmentKalamadhu-Mundanthurai Tiger ReserveScamஅம்பைஉணவுப்படிகளக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகம்முறைகேடுவனத்துறைவனப்பாதுகாப்பு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
Next Article சென்னையில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் மற்றும் பழைய பொருட்கள் சென்னையில் நேற்று 33.22 டன் குப்பைகள் அகற்றம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பீகார் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில் மணமகனுக்கு பரிசளிக்கப்பட்ட கார்

ரூ.2.5 கோடியில் கார்: பீகார் எம்எல்ஏ மகள் திருமணத்தில் மாப்பிள்ளைக்கு அசத்தல் பரிசு!

பீகாரில் எம்எல்ஏ ஆனந்த் சிங் மகள் திருமணத்தில், மணமகனுக்கு ரூ.2.5 கோடியில் கார்…

நவம்பர் 11, 2026

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

You Might Also Like

சென்னையில் ரத்து செய்யப்பட்ட ஏசி பேருந்து டெண்டர்கள் குறித்த செய்தி
தமிழ்நாடு

சென்னையில் ஏசி பேருந்துகள் தாமதம்: டெண்டர்கள் ரத்து!

சென்னையில் 1,000 ஏசி மின்சார பேருந்துகள் மற்றும் மெட்ரோ இணைப்புக்காக 220 ஏசி பேருந்துகள் இயக்கும் திட்டங்கள் டெண்டர் ரத்து செய்யப்பட்டதால் தாமதமாகியுள்ளது. பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

2 Min Read
தமிழ்நாடு

குருவாயூர்-எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்: வழித்தட மாற்றம் அறிவிப்பு!

எர்ணாகுளம் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் வழித்தடத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட நாட்களில் கோட்டயம் வழியாக…

1 Min Read
திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
தமிழ்நாடு

மதுவால் ரூ.5000 கோடி கூடுதல் வருவாய்: திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்

போதையை ஒழிப்போம் என கூறிய திமுக, மதுபான விற்பனை மூலம் ரூ.5000 கோடி கூடுதல் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது. இது மிகுந்த வேதனை அளிப்பதாக திமுக எம்.எல்.ஏ…

2 Min Read
தமிழ்நாடு

திமுக கூட்டணியில் சுயமரியாதையை இழந்தோம் – வைகோ வேதனை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக கூட்டணியில் சுயமரியாதையையும் தன்மானத்தையும் இழக்க நேரிட்டதாகவும், விசிக கட்சிக்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டது அவமானம் என்றும் வேதனை தெரிவித்தார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?