வனத்துறை உணவுப்படி நிதியில் முறைகேடு அம்பை வனக்கோட்டத்தில் குற்றச்சாட்டு

வனத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவுப்படி நிதியில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு.

அம்பை வனக்கோட்டத்தில் வனத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவுப் படி நிதியில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கீழ் செயல்படும் அம்பாசமுத்திரம் மற்றும் களக்காடு வனக்கோட்டங்கள், கடினமான மலை மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளைக் கொண்டவை. இப்பகுதிகளில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 0 அடி முதல் 6,000 அடி உயரம் வரை உள்ள நிலப்பரப்புகளில் களப்பணியாளர்கள் தினசரி நடைபயணம் மேற்கொண்டு வனப்பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேட்டைத் தடுப்பு, வனக்கண்காணிப்பு, வனவிலங்கு கணக்கெடுப்பு, பல்லுயிர் பாதுகாப்பு போன்ற பல்வேறு பணிகளை மிகவும் கடினமான சூழ்நிலைகளில் மேற்கொண்டு வரும் பணியாளர்களுக்கு, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி மாதந்தோறும் ரூ.840/- உணவுப்படியாக வழங்கப்பட்டு வந்தது. இந்த உணவுப்படி நவம்பர் 2025 வரை வழங்கப்பட்டதாகவும், டிசம்பர் 2025 முதல் இதுவரை வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வனச்சரகர், துணை இயக்குநர் மற்றும் கள இயக்குநர் ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், நிலுவையில் உள்ள உணவுப்படிக்கான தொகை இதுவரை கிடைக்கவில்லை எனப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீப காலங்களில், இந்த உணவுப்படி தொடர்பான நிதித் தொகைகள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அல்லது ஒப்பந்ததாரர்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

தற்போதுள்ள வனத்துறை அதிகாரிகள், போலியான பில்களைத் தயாரித்து, உணவுப்படி பணத்தை மோசடி செய்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது ஒருபுறமிருக்க, வேட்டைத் தடுப்பு முகாம்களுக்கான உணவு மற்றும் உணவுப்படி, சிங்கவால் குரங்கு கணக்கெடுப்பு, புலிகள் கணக்கெடுப்பு, மலை மொங்கான் பறவை கணக்கெடுப்பு, வரையாடு கணக்கெடுப்பு, தவளை ஆராய்ச்சி போன்ற பல்வேறு வனவிலங்கு மற்றும் பல்லுயிர் சார்ந்த களப்பணிகளுக்காக ஒதுக்கப்படும் உணவு மற்றும் நிதிப் பயன்பாடு குறித்தும் பணியாளர்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

எனவே, அனைத்துப் பணிகளுக்கும் கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட மற்றும் செலவிடப்பட்ட உணவு, உணவுப்படி, பயணச் செலவு மற்றும் தொடர்புடைய நிதி ஒதுக்கீடுகள் குறித்து முழுமையான கணக்குத் தணிக்கை மேற்கொண்டு, உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பக களப்பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வனப்பாதுகாப்புப் பணிகளில் அயராது உழைக்கும் களப்பணியாளர்களின் நலன் கருதி, உணவுப்படிக்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கவும், நிதி முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வனத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வனக்கோட்டங்களில் நடைபெறும் இந்த நிதி முறைகேடுகள், களப்பணியாளர்களின் மன உறுதியைப் பாதிப்பதாகவும், அவர்களின் பணிச் சூழலைச் சிக்கலாக்குவதாகவும் கருதப்படுகிறது. எனவே, இதுகுறித்து உயர் அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, நியாயமான தீர்வைக் காண வேண்டும் என்பதே களப்பணியாளர்களின் ஒருமித்த குரலாக உள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version