MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தந்தை வெறிச்செயல்: மகளை கிணற்றில் தள்ளி கொன்று புதைத்த கொடூரம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தந்தை வெறிச்செயல்: மகளை கிணற்றில் தள்ளி கொன்று புதைத்த கொடூரம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - தந்தை வெறிச்செயல்: மகளை கிணற்றில் தள்ளி கொன்று புதைத்த கொடூரம்!

இந்தியா

தந்தை வெறிச்செயல்: மகளை கிணற்றில் தள்ளி கொன்று புதைத்த கொடூரம்!

Admin
Last updated: மே 17, 2026 7:29 மணி
Admin
Share
SHARE

கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. திருமண விஷயத்தில் ஏற்பட்ட தகராறில், சொந்த மகளையே கிணற்றில் தள்ளி கொலை செய்து உடலை புதைத்த கொடூர தந்தையின் செயல், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தும்கூரு மாவட்டம் நிம்ப மரதஹல்லி கிராமத்தைச் சேர்ந்த திம்மராயப்பா என்பவருக்கு 17 வயதில் மகள் இருந்துள்ளார். அவரது திருமணத்தை, மனைவியின் உறவினர் ஒருவருடன், அவர் 18 வயது ஆனதும் நடத்தி வைக்க ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளன. திருமணத்திற்கான துணிகள், தாலி போன்றவையும் வாங்கப்பட்டு தயார் நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், திம்மராயப்பாவுக்கு இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லை. இது தொடர்பாக கடந்த 5 மாதங்களாக குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் நிலவி வந்துள்ளன. இந்த பிரச்சனை முற்றிய நிலையில், திம்மராயப்பா தனது மகளையே கொலை செய்ய முடிவெடுத்துள்ளார்.

கடந்த மாதம் 16-ஆம் தேதி, திம்மராயப்பா தனது மகளை கிணறு அருகே அழைத்துச் சென்றுள்ளார். அங்கே, மகளை வலுக்கட்டாயமாக கிணற்றில் தள்ளிவிட்டுள்ளார். கிணற்றில் விழுந்த மகள், 'காப்பாற்றுங்கள்' என்று கெஞ்சியபோதும், இரக்கமின்றி கல்லை தூக்கிப்போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார். அதன் பிறகு, மகளின் உடலை அங்கிருந்து எடுத்துச் சென்று, யாரும் நடமாட்டம் இல்லாத மறைவான இடத்திற்கு கொண்டு சென்று புதைத்துள்ளார். எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி, வீட்டில் சகஜமாக இருந்துள்ளார்.

மாலை 6:30 மணியளவில் கூலி வேலை முடிந்து வீடு திரும்பிய திம்மராயப்பாவின் மனைவி, வீட்டில் மகள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பல்வேறு இடங்களில் தேடியும் மகள் கிடைக்காததால், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது, தன் மீது சந்தேகம் வராமல் இருக்க, திம்மராயப்பாவும் மனைவியுடன் காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். இருப்பினும், காவல்துறையினரின் நுணுக்கமான விசாரணையில் திம்மராயப்பா சிக்கியுள்ளார். விசாரணையில், மனைவியின் உறவினருக்கு மகளை திருமணம் செய்து கொடுக்க விருப்பம் இல்லாததால், அவரை கொடூரமாக கொலை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளார். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Karnataka NewsMurderTamil Nadu Crimeகொலைதும்கூரு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்திய புவித்தட்டு பிளவு: நிலநடுக்க அபாயம் அதிகரிப்பு!
Next Article சோழர் பெருமை: நெதர்லாந்திலிருந்து மீட்கப்பட்ட ஆனைமங்கலம் செப்பேடுகள் – மோடி நெகிழ்ச்சி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மேற்கு வங்காளத்தின் முன்னாள் துணை சபாநாயகர்

மேற்கு வங்காள முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை: அரசியலே தவறு என கடிதத்தில் அதிர்ச்சி

மேற்கு வங்காள முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும்…

ஆகஸ்ட் 16, 2026

ChatGPT உதவியுடன் இளைஞர் செருப்பை கண்டுபிடித்தார்

மத்திய பிரதேசத்தில், கோயிலுக்கு வெளியே குவிந்திருந்த ஆயிரக்கணக்கான…

ஆகஸ்ட் 16, 2026

செங்கோட்டைக்கு சென்ற மோடியை வழிமறித்த மயில்கள், விலங்குகள்!

பிரதமர் மோடி செங்கோட்டைக்குச் செல்லவிருந்த நிலையில், அவர்…

ஆகஸ்ட் 16, 2026

திருப்பதி ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு: நவம்பர் மாத தரிசன கோட்டா அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவம்பர் மாதத்திற்கான ஆர்ஜித…

ஆகஸ்ட் 16, 2026

மேற்குவங்க முன்னாள் துணை சபாநாயகர் தற்கொலை: கடிதம் எழுதி வைப்பு

மேற்குவங்க சட்டப்பேரவையின் முன்னாள் துணை சபாநாயகர் ஆஷிஷ்…

ஆகஸ்ட் 16, 2026

You Might Also Like

இந்தியா

தேனிலவு சென்ற இடத்தில் புதுப்பெண் உயிரிழப்பு: கணவரிடம் விசாரணை

குருகிராமில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த ராதா காயத்ரி, தேனிலவுக்குச் சென்ற இடத்தில் உயிரிழந்தார். இது குறித்து அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
திருப்பதி ஏழுமலையான் கோவில்
இந்தியா

திருப்பதியில் ஒரே நாளில் 88,000 பக்தர்கள் தரிசனம்: ரூ.5 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 88,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இதன் மூலம் தேவஸ்தானத்திற்கு ரூ.5 கோடிக்கும் அதிகமான உண்டியல் காணிக்கையாக வசூலானது.

1 Min Read
இந்தியா

முன்னாள் காதலியை கடத்த முயன்ற இளைஞர் காரில் கருகி பலியான சோகம்

கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் ஒருவர், காரில் தீப்பிடித்து கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண் உயிர் தப்பினார்.

1 Min Read
இந்தியா

பினராயி வீட்டில் சோதனை: அமலாக்கத்துறை வாகனங்கள் மீது மார்க்சிஸ்ட் கட்சியினர் தாக்குதல்

கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், அதிகாரிகள் திரும்பும்போது மார்க்சிஸ்ட் கட்சியினர் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?