MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சொத்துக்களை பாதுகாக்க 8% வாக்குகள் போதும்: எடப்பாடி பழனிச்சாமி – சவுக்கு சங்கர்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > சொத்துக்களை பாதுகாக்க 8% வாக்குகள் போதும்: எடப்பாடி பழனிச்சாமி – சவுக்கு சங்கர்
தமிழ்நாடு

சொத்துக்களை பாதுகாக்க 8% வாக்குகள் போதும்: எடப்பாடி பழனிச்சாமி – சவுக்கு சங்கர்

Admin
Last updated: June 29, 2026 7:02 pm
Admin
Share
SHARE

அதிமுகவில் இருந்து நிர்வாகிகள் பலர் விலகிச் செல்லும் நிலையில், 'போகிறவர்கள் போகட்டும், என் சொத்துக்களை பாதுகாக்க 8% வாக்குகள் போதும்' என எடப்பாடி பழனிச்சாமி கூறியதாக யூடியூபர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, 'அரசியல் எதிர்காலம் வேண்டுமென்றால் அதிமுகவிலிருந்து வெளியேறுங்கள். சொந்த கட்சி, தன்னை முதலமைச்சராகவும், பொதுச்செயலாளராகவும் ஆக்கிய கட்சி. ஆனாலும், அக்கட்சியின் தலைவர்கள், எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் மாற்றுக்கட்சிக்கு செல்கிறார்கள். இது குறித்து கிஞ்சித்தும் கவலையோ அக்கறையோ இல்லாமல், அவர்கள் வெளியேறுவதை மகிழ்ச்சியாக ரசிக்கும் ஒரே தலைவர் எடப்பாடி பழனிச்சாமியாகத்தான் இருப்பார். அவரது நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தால், அதிமுக கரைவதை அவர் விரும்புவதாகவே புரிந்து கொள்ள முடியும்' என்றும் சவுக்கு சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எடப்பாடிக்கு நெருக்கமான ஒரு தொழில் அதிபர், 'இப்படி கட்சி நிர்வாகிகள் வெளியேறுவதை தடுக்க ஏதாவது செய்யுங்கள்' என்று கேட்டபோது, 'போகிறவர்கள் போகட்டும். என் சொத்துக்களை பாதுகாக்க 8 பர்சென்ட் வாக்குகள் போதும்' என்று எடப்பாடி கூறியதாக சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். மற்றொருவரிடம், 'யார் போனாலும் போகட்டும். வைகோ 20 வருடமாக மதிமுகவை நடத்தவில்லையா. இருக்கும் ஆட்களை வைத்து கட்சியை நடத்திக் கொள்கிறேன்' என்றும் எடப்பாடி கூறியதாகக் கூறியுள்ளார்.

இதுதான் எடப்பாடி பழனிச்சாமியின் இன்றைய மனநிலை என்றும், அதிமுகவை மீண்டும் வலிமையாக்கி தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இல்லை என்றும் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார். வேறு யாரையும் தலைமை பதவிக்கு வரவிடாமல், ஆக்டோபஸ் போல கட்சியை ஆக்கிரமித்து, அக்கட்சியை அழிக்கும் வரை பழனிச்சாமி ஓய மாட்டார் என்றும், அரசியல் எதிர்காலம் வேண்டுவோர் இனியும் அதிமுகவில் தொடர்வதில் பொருளில்லை என்பதை உணர்ந்து முடிவெடுங்கள் என்றும் அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:அதிமுகஅரசியல்எடப்பாடி பழனிச்சாமிசவுக்கு சங்கர்தமிழ்நாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ரேசன் அரிசி விநியோகம்: விஜய் அரசை விமர்சிக்கும் டி.டி.வி. தினகரன்
Next Article இந்திய அணிக்கு எதிராக வரலாற்று வெற்றி.. அயர்லாந்து பயிற்சியாளர் ஹென்றிச் மாலன் விலகல்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குழந்தையின் உயிரை பணயம் வைத்த தந்தை: கடும் கண்டனங்கள் குவிதல்

கர்நாடகாவில் குழந்தையின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தி, ஆபத்தான முறையில் பயணம் செய்த தந்தையின் செயலுக்கு…

June 29, 2026

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு: மூன்றாவது மொழி தேர்வு கட்டாயமில்லை

சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு மாணவர்கள் மூன்றாவது மொழியில்…

June 29, 2026

ஆந்திராவில் 2 பல்கலைக்கழக விழாக்களில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, ஆந்திர பிரதேச…

June 29, 2026

மாநிலங்களின் கஜானாவை நிரப்பும் மதுபான விற்பனை

பல்வேறு மாநிலங்களின் கஜானா மதுபான விற்பனை மூலம்…

June 29, 2026

ராஜஸ்தான்: ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை

ராஜஸ்தானில், ஐ.ஐ.டி. கனவுடன் ஜே.இ.இ. தேர்வுக்கு தயாரான…

June 29, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கோவை-சென்னை ரயில்கள் பகுதியாக ரத்து: ரயில்வே அறிவிப்பு

தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக, சென்னை-கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் சென்னைக்கும் காட்பாடிக்கும் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தல்.

1 Min Read
தமிழ்நாடு

கோவை சிறுமி கொலை: இருவருக்கு 12 வரை காவல் நீட்டிப்பு

கோவை சிறுமி கொலை வழக்கில் கைதான கார்த்தி மற்றும் மோகன்ராஜ் ஆகிய இருவரையும் வரும் 12-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும்…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பாலியல் வழக்கில் கைது: எம்.எல்.ஏ. மீது கொலை மிரட்டல் குற்றச்சாட்டு!

ஸ்ரீவைகுண்டம் பாலியல் வழக்கில் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எம்.எல்.ஏ. தரப்பிலிருந்து கொலை மிரட்டல் வருவதாகவும், பாதுகாப்பு தேவைப்படுவதாகவும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

சென்னையில் மதுபானம் விற்ற 2 பெண்கள் கைது: 39 பாட்டில்கள் பறிமுதல்!

சென்னையில் அண்ணாசாலை மற்றும் அயனாவரம் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து மொத்தம் 39 மதுபாட்டில்கள் பறிமுதல்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?