MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வெளியேறுபவர்கள் வெளியேறட்டும்: அதிமுக மீண்டும் எழும் – எடப்பாடி பழனிசாமி உறுதி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வெளியேறுபவர்கள் வெளியேறட்டும்: அதிமுக மீண்டும் எழும் – எடப்பாடி பழனிசாமி உறுதி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வெளியேறுபவர்கள் வெளியேறட்டும்: அதிமுக மீண்டும் எழும் – எடப்பாடி பழனிசாமி உறுதி

தமிழ்நாடு

வெளியேறுபவர்கள் வெளியேறட்டும்: அதிமுக மீண்டும் எழும் – எடப்பாடி பழனிசாமி உறுதி

Admin
Last updated: ஜூலை 5, 2026 7:01 காலை
Admin
Share
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பு
அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
SHARE

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டத்தின் தற்போதைய கட்சி அமைப்பு, உறுப்பினர் சேர்க்கை, களப்பணிகள் மற்றும் எதிர்கால தேர்தல் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சந்தித்த தோல்விக்கான காரணங்கள், மாவட்ட வாரியாக ஏற்பட்ட பின்னடைவுகள், வாக்கு சதவீதம் குறைந்த பகுதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலை முன்னிட்டு, கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் எவ்வாறு சிறப்பாக செயல்படுவது, கட்சியின் களப்பணிகளை எப்படி மேலும் வலுப்படுத்துவது, கட்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்தும் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான பெருந்துறை ஜெயக்குமார், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, தாராபுரம் சத்தியபாமா, மதுராந்தகம் மரகதம் குமாரவேல், விராலிமலை சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைத்துக்கொண்டனர். மேலும், முன்னாள் அமைச்சர்களான எம்.எஸ்.எம்.ஆனந்தன், வளர்மதி ஆகியோரும் அதிமுகவிலிருந்து விலகி த.வெ.க-வில் இணைந்துள்ளனர். தொடர்ந்து இன்னும் பல முக்கிய நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து விலகி த.வெ.க-வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்தச் சூழலில், அந்தந்த மாவட்டங்களில் அதிமுக கட்சியின் செயல்பாடுகளை வலுப்படுத்தி புதிய நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 'தமிழக வெற்றிக் கழகம் சுனாமி பேரலை விபத்து போல வெற்றி பெற்றுள்ளது. ஆனால் வருகிற உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்களில் நிச்சயமாக அதிமுகவே வெற்றி பெறும். அதற்காக அனைவரும் உழைக்க வேண்டும்' என நிர்வாகிகளிடம் வலியுறுத்தினார்.

மேலும், 'அதிமுகவில் இருந்து பலனடைந்து தற்போது கட்சி சரிந்திருக்கும் நேரத்தில் அதனை தாங்கி பிடிக்காமல் வெளியேறுபவர்கள் வெளியேறட்டும். நிச்சயமாக நம்முடைய கட்சி மீண்டும் எழும்' என நிர்வாகிகளிடம் அவர் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.

திருவண்ணாமலையைத் தொடர்ந்து, இன்று மாலை பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டத்தை நடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆலோசனைக் கூட்டங்கள் அதிமுகவின் எதிர்கால வியூகங்களை வகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKEdappadi PalaniswamiTVKஅதிமுகஉள்ளாட்சித் தேர்தல்எடப்பாடி பழனிசாமிசட்டமன்றத் தேர்தல்தமிழக வெற்றிக் கழகம்தவெக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அமைச்சர் டி.கே. பிரபுவின் தந்தை அரசு அதிகாரிகளுடன் ஆய்வு செய்கிறார் அமைச்சர் அப்பாவின் ஆய்வு: பாஜக எஸ்.ஜி.சூர்யா விமர்சனம்
Next Article மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வுகள்: இஞ்சி, தேன், பப்பாளி, கொத்தமல்லி, எள் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு இயற்கை தீர்வுகள்: இஞ்சி, தேன் கலவை சிறப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

லோக் அயுக்தா விசாரணை

ரூ.500 கோடி நில மோசடி: லோக் அயுக்தா விசாரணை

தனியார் நில ஆவணங்களில் டிஜிட்டல் கையெழுத்துக்கள் மாற்றப்பட்டு, சுமார் 500 கோடி ரூபாய்…

ஆகஸ்ட் 22, 2026

மராத்தி மொழி தெரியாத 1,268 ஓட்டுநர்களுக்கு மகாராஷ்டிர அரசு நோட்டீஸ்

மும்பையில் மராத்தி மொழி தெரியாத 1,268 ஆட்டோ,…

ஆகஸ்ட் 22, 2026

பாகிஸ்தான் தூதரக பாதுகாப்பு தடுப்புகள் அகற்றம்: மத்திய அரசு விளக்கம்

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக வளாகத்தில், விசா…

ஆகஸ்ட் 22, 2026

டெல்லியில் 42 நாட்கள் கட்டுமான பணிகளுக்கு தடை

டெல்லியில் குளிர்கால காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில்,…

ஆகஸ்ட் 22, 2026

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் இல்லை: மத்திய அரசு

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் விடைத்தாள்களை…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பேரன் இன்பநிதியை அணைத்து வாழ்த்துகிறார்
தமிழ்நாடு

பேரனை வாழ்த்த லண்டன் சென்ற மு.க.ஸ்டாலின்: நெகிழ்ச்சியான தருணம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், லண்டனில் நடைபெற்ற தனது பேரன் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு அவரை அன்புடன் அணைத்து வாழ்த்தினார். இந்த நெகிழ்ச்சியான தருணம் பலரால் பாராட்டப்படுகிறது.

1 Min Read
கொடைக்கானலில் ரோப்வே திட்டம் குறித்து ஆய்வு செய்யும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள்
தமிழ்நாடு

கொடைக்கானல் ரோப்வே திட்டம்: கள ஆய்வில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

கொடைக்கானலில் சுற்றுலா மேம்பாடு மற்றும் விரைவான போக்குவரத்துக்காக ரோப்வே திட்டம். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கள ஆய்வு. 2026 செப்டம்பரில் அறிக்கை நிறைவு.

2 Min Read
சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில் சேவை குறித்த அறிவிப்பு பலகை
தமிழ்நாடு

சென்னை: கடற்கரை-தாம்பரம் ரயில் சேவை ரத்து – முக்கிய அறிவிப்பு!

சென்னை: எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகளால், கடற்கரை-தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரயில்கள் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 6 வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.…

2 Min Read
கொழுக்குமலை அருகே பள்ளத்தில் விழுந்து மீட்கப்பட்ட இளைஞர் கார்த்திக்
தமிழ்நாடு

கொழுக்குமலை: 200 அடி பள்ளத்தில் விழுந்த சென்னை இளைஞர் மீட்பு

சென்னையைச் சேர்ந்த 28 வயது இளைஞர் கொழுக்குமலை அருகே 200 அடி பள்ளத்தில் தவறி விழுந்து படுகாயமடைந்தார். தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்குப்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?