துரந்தர் 2 திரைப்படம் ரூ.2000 கோடி வசூலை நெருங்குகிறது: ஓடிடி வெளியீட்டுத் தேதி மற்றும் தளம் அறிவிப்பு!

ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்த துரந்தர் திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி, 1500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து பெரும் சாதனை படைத்தது.

பாகிஸ்தானில் பணிபுரியும் ஒரு இந்திய உளவாளியின் கதையை அடிப்படையாகக் கொண்டது இந்தப் படம். இதன் இரண்டாம் பாகமான 'துரந்தர் தி ரிவெஞ்ச்', கடந்த மார்ச் 19 அன்று வெளியாகி, முதல் பாகத்திற்கு கிடைத்ததைப் போலவே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இரண்டாம் பாகம் தற்போது வரை 1,800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால், இது 2,000 கோடி ரூபாய் வசூலை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, துரந்தர் 2 திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று ஒரு தகவல் பரவியது.

ஆனால், தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மே 14 ஆம் தேதி துரந்தர் 2 வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், துரந்தர் முதல் பாகம் ஜப்பானிய மொழியில் டப் செய்யப்பட்டு, ஜப்பான் நாட்டில் ஜூலை 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version