த.வெ.க. அரசுக்கு அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் ஆதரவு: முதலமைச்சரின் திட்டங்களை பாராட்டிப் பேச்சு

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாவது நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தின்போது, ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகப் பொறுப்பேற்றார். ரவிசங்கர் துணை சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.சி.டி. பிரபாகரை, அவை முன்னவரும் எதிர்க்கட்சித் தலைவரும் அவரது இருக்கையில் அமரவைத்தனர். புதிய சபாநாயகருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது பேசிய அ.ம.மு.க. எம்.எல்.ஏ. காமராஜ் கூறியதாவது: அரசியல் சூழல் காரணமாக சில விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்தன. தமிழக இளைஞர்களாகிய நாங்களும் உங்களை நம்புகிறோம். த.வெ.க. ஆட்சி ஐந்தாண்டு காலம் தொடர வேண்டும். இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ளனர். முதலமைச்சர் கையெழுத்திட்ட மூன்று திட்டங்களும் மிகவும் வரவேற்கத்தக்கவை. த.வெ.க. தலைமையிலான அரசுக்கு எனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version