அதிகப்படியாக வெந்நீர் அருந்துவது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, மூளையின் செயல்பாடு பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாகம் எடுக்கும்போது உடனடியாக தண்ணீர் குடிப்பது இயல்பு. ஆனால், சிலர் எந்த நேரமும் வெந்நீரையே குடித்துக்கொண்டிருப்பார்கள். இப்படி தேவையில்லாமல் வெந்நீர் அருந்துவது எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
மருத்துவர்களின் கூற்றுப்படி, அதிக வெந்நீர் குடிப்பதால் மூளையின் செயல் திறன் பாதிக்கப்படலாம். தாகம் இல்லாமலேயே வெந்நீரை அதிகமாக அருந்துவது மூளைத் திறனை பாதிக்கக்கூடும். சளி, காய்ச்சல் அல்லது தொண்டை பிரச்சனை இருக்கும்போது வெந்நீர் அருந்துவது நல்லது. வயிற்று வலி இருக்கும் சமயங்களிலும் வெந்நீர் அருந்தலாம். ஆனால், அளவுக்கு அதிகமாக சூடான நீரை அருந்தும்போது மூளை செல்களில் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், இது மூளை தொடர்பான பல சிக்கல்களுக்கும் வழிவகுக்கும். அதிக வெந்நீர் அருந்துவதால் தலை வலியும் ஏற்படலாம். உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வெந்நீர் உதவுவதாக கூறப்பட்டாலும், அது அளவோடு இருக்க வேண்டும். தேவையில்லாமல் அதிக அளவு சூடான நீரை குடிப்பதால் சிறுநீரகத்தின் வேலைப்பளு அதிகரித்து, அதன் செயல்பாடு பாதிக்கப்படும்.
நிபுணர்களின் எச்சரிக்கையின்படி, அளவுக்கு அதிகமாக வெந்நீர் அருந்துவது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சில காலம் கழித்து சிறுநீரக செயலிழப்பு கூட ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, வெந்நீரை அளவோடு அருந்துவது அவசியம்.