MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி

தமிழ்நாடு

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி

Fernandez
Last updated: ஜூலை 30, 2026 7:46 காலை
Fernandez
Share
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
SHARE

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்புமனுவில் அறக்கட்டளை சொத்து விவரங்களை மறைத்ததாக தொடரப்பட்ட தேர்தல் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின், தனது வேட்புமனுவில் அறக்கட்டளைக்கு சொந்தமான சொத்து விவரங்களை மறைத்ததாக கூறி, தேசிய மக்கள் கட்சியின் வேட்பாளர் சிவஞானசம்பந்தம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். திமுக அறக்கட்டளையின் நிர்வாகியாக ஸ்டாலின் இருப்பதாகவும், அறக்கட்டளைக்கு சொந்தமாக செங்கல்பட்டு அருகே 2 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம் வாங்கியதை அவர் மறைத்ததாகவும் மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும், ஸ்டாலின் மீதான வழக்கை விசாரிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஸ்டாலின் அறக்கட்டளை சொத்து விவரங்களை மறைத்தது குற்றம் என்றும், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர், தேர்தல் வெற்றியை எதிர்த்து மட்டுமே தேர்தல் வழக்கு தொடர முடியும் என்றும், ஆவணங்களை மறைத்தது தொடர்பாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு தாக்கல் செய்ய முடியும் என்றும் தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், வேட்புமனுவில் தனிப்பட்ட சொத்து விவரங்கள் மட்டுமே தெரிவிக்கப்பட வேண்டும் என்றும், அறக்கட்டளை சொத்துகள் தனிப்பட்ட சொத்துகள் ஆகாது என்றும் கருத்து தெரிவித்தனர். மேலும், இந்த அறக்கட்டளை சொத்துகளில் மு.க.ஸ்டாலினுக்கு தனிப்பட்ட முறையில் சம்பந்தம் இருக்கிறது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால், அவருக்கு நோட்டீஸ் பிறப்பிக்க முடியாது என்றும் திட்டவட்டமாக கூறினர்.

இதனையடுத்து, வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரரான சிவஞானசம்பந்தம் கூறியதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பு திமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai High CourtDMKElection CaseMK Stalinகொளத்தூர் தொகுதிசிவஞானசம்பந்தம்சென்னை உயர் நீதிமன்றம்திமுகதேர்தல் வழக்குமு.க. ஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இமாச்சல பிரதேசத்தில் விபத்துக்குள்ளான கார் இமாச்சல பிரதேசத்தில் கார் விபத்து: குழந்தை உட்பட 5 பேர் உயிரிழப்பு
Next Article தமிழகத்தில் டெங்கு பாதிப்பு 9,000ஐ தாண்டியது: அரசு தீவிர நடவடிக்கை!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

உச்ச நீதிமன்றம் கட்டிடம்

டெல்லி மாணவர் போராட்டம்: வெடிமருந்து பதிவேட்டை பாதுகாக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பேரணியில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து பதிவேட்டைப் பாதுகாக்க மத்திய…

ஜூலை 30, 2026

புதுச்சேரியில் ஆகஸ்ட் 1 முதல் அக்னிவீர் ராணுவ முகாம்

புதுச்சேரி இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் 1…

ஜூலை 30, 2026

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்

வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மாநிலங்களவையில் தாக்கல்…

ஜூலை 30, 2026

அமித் ஷா நாடாளுமன்றம் வராதது ஏன்? கார்கே கேள்வி

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) பேரணியில் போலீசார்…

ஜூலை 30, 2026

விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ படத்திற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு

நடிகரும் தமிழக முதல்வருமான விஜய்யின் 'ஜனநாயகன்' படத்திற்கு…

ஜூலை 30, 2026

You Might Also Like

மாதம் ₹3000 உதவித்தொகை: யாருக்கெல்லாம் கிடைக்கும்?

மத்திய அரசின் புதிய திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் புதிய பணியாளர்களை நியமிக்கும்போது மாதம் ₹3,000 வரை ஊக்கத்தொகை பெறலாம். உற்பத்தித் துறைக்கு 4 ஆண்டுகள் வரை சலுகை…

2 Min Read
முன்னாள் சபாநாயகர் அப்பாவு
தமிழ்நாடு

முதல்வர் பொதுவெளியில் பேசுவது சட்டப்படி குற்றமா? – அப்பாவு கேள்வி

கரூர் சிபிஐ விசாரணை சம்பவம் குறித்து முதல்வர் பேசுவது சட்டப்படி குற்றமா? என முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், வேட்பாளர் அறிவிப்பு குறித்த குற்றச்சாட்டுகளையும்…

1 Min Read
தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் 2 புதிய ஐஏஎஸ் பணியிடங்கள் உருவாக்கம் குறித்த அரசாணை
தமிழ்நாடு

இந்து சமய அறநிலையத்துறை: 2 புதிய ஐஏஎஸ் பணியிடங்கள் உருவாக்கம்

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறையில் நிர்வாக வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், இரண்டு புதிய ஐ.ஏ.எஸ். பணியிடங்களை உருவாக்கியுள்ளது. இத்துறை இனி வடக்கு மற்றும் தெற்கு என…

2 Min Read
தமிழ்நாடு

தங்க முலாம் பூசப்பட்ட தகரம் தான் கவர்னர் உரை – டிடிவி தினகரன்

ஆளுநரின் இன்றைய உரை தங்க முலாம் பூசப்பட்ட தகரம் போன்றது என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அள்ளி வீசியது ஏன் என்றும் அவர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?