MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி

தமிழ்நாடு

திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி

Fernandez
Last updated: ஜூலை 30, 2026 10:33 மணி
Fernandez
Share
திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்
திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன்
SHARE

கோவில்பட்டியில் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகவும், மிரட்டும் வகையிலும் பேசியதாக விளாத்திகுளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் மீது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, கடந்த 20-ஆம் தேதி கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுவை தூத்துக்குடி முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் கடந்த 22-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.

இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு சார்பில் பதிவு செய்யப்பட்ட வழக்கு சட்ட முரண்பாடுகளுக்கு எதிரானது என்றும், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும், இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கோரி மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு, நீதிபதி எஸ்.சுபாதேவி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர் நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து சில விளக்கங்களைக் கேட்டு, ஜாமீன் மனு மீதான விசாரணையை இன்று (வியாழக்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

ஆனால், தற்போது கைது செய்யப்பட்ட தி.மு.க எம்.எல்.ஏ மார்க்கண்டேயனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மார்க்கண்டேயனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற நீதிபதி சுபா தேவி உத்தரவிட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKMarkandeyanThoothukudiVIJAYதிமுகதூத்துக்குடிமார்க்கண்டேயன்விஜய்ஜாமீன் மனு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே அமித் ஷா பதவி விலக சிஜேபி நிறுவனர் வலியுறுத்தல்
Next Article சென்னையில் மின் தடை அறிவிப்பு தொடர்பான அறிவிப்புப் பலகை சென்னையில் நாளை மறுநாள் மின் தடை: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே

அமித் ஷா பதவி விலக சிஜேபி நிறுவனர் வலியுறுத்தல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது…

ஜூலை 30, 2026

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் நாளை பந்த்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து,…

ஜூலை 30, 2026

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: கனிமொழி கண்டனம்

மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தின் முன்னுரிமையை மூன்றாம்…

ஜூலை 30, 2026

முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் முரளி…

ஜூலை 30, 2026

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள்: தமிழகம் எத்தனையாவது இடம்?

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே…

ஜூலை 30, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மேகதாது அணை: சட்டசபையில் இன்று தனித்தீர்மானம்!

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, இன்று (வெள்ளிக்கிழமை) தமிழக சட்டசபையில் அரசினர் தனித்தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட உள்ளது. இது குறித்த விரிவான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

1 Min Read
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்திக்கும் காட்சி
தமிழ்நாடு

விஜய் அரசுப்பணி வழங்கியது விமர்சனத்துக்குள்ளானது!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நடிகர் விஜய் அரசுப்பணி வழங்கிய விவகாரத்தை விமர்சித்துள்ளார். "சொந்த பணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கொடுத்திருக்கலாம்" என தெரிவித்துள்ளார்.

1 Min Read
திருச்சி விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்
தமிழ்நாடு

திருச்சி-சார்ஜா இடையே கூடுதல் விமான சேவை தொடக்கம்

திருச்சி மற்றும் சார்ஜா இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தனது கூடுதல் விமான சேவையை தொடங்கியுள்ளது. இது பயணிகளுக்கு அதிக வசதியை அளிக்கும்.

2 Min Read
தமிழ்நாடு

பனை மரம் ஏறியபோது வாலிபர் பரிதாபம்: நுங்கு பறிக்க முயன்ற சோகம்

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் பனை மரத்தில் நுங்கு பறிக்க முயன்றபோது தவறி விழுந்த கூலித்தொழிலாளி நல்லாண்டவர் (37) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?