MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: திமுகவின் வீழ்ச்சி: ‘உடன்பிறப்பின் குரல்’ உண்மையை பேசுமா?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - அரசியல் - திமுகவின் வீழ்ச்சி: ‘உடன்பிறப்பின் குரல்’ உண்மையை பேசுமா?

அரசியல்

திமுகவின் வீழ்ச்சி: ‘உடன்பிறப்பின் குரல்’ உண்மையை பேசுமா?

Admin
Last updated: மே 16, 2026 8:00 காலை
Admin
Share
SHARE

சமீபத்திய தேர்தல் தோல்விக்கு நானே பொறுப்பேற்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, தோல்விக்கான காரணங்களை ஒவ்வொரு தொகுதியாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க 38 பேர் கொண்ட 19 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தொண்டர்களின் கருத்துக்களை நேரடியாக பதிவு செய்ய 'உடன்பிறப்பின் குரல்' என்ற புதிய இணையதளத்தையும் தொடங்கியுள்ளார்.

ஆனால், தோல்விக்கான காரணங்களைத் தேடும் முன், திமுக தலைமை சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரம் இது. முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில், கட்சிக்குள் கருத்து சுதந்திரம் இருந்தது. யாராக இருந்தாலும் அவர்களைப் பேசவிட்டு, மாற்றுக் கருத்துக்களுக்கும் மதிப்பளிப்பார். தொண்டர்களின் கருத்துக்கள் நேரடியாக கட்சித் தலைமையை சென்றடைய வேண்டும் என்பதற்காக, மாவட்ட செயலாளர்களுக்கு போட்டியாக வளர்ந்தவர்களையும் அவர் பாதுகாத்தார். இது கட்சிக்குள் சில சமயங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தினாலும், கட்சியை வளர்க்க உதவியது.

ஒரு காலத்தில், தேர்தல் கணிப்புகளை துல்லியமாக சொல்லக்கூடிய வல்லுநர்கள் திமுகவில் இருந்தனர். ஆனால், வணிக ரீதியான வியூகம் வகுக்கும் நிறுவனங்கள் கட்சிக்குள் நுழைந்து 'கட்டளைகளை' பிறப்பிக்க ஆரம்பித்த பிறகு, கட்சியின் ஆரோக்கியம் கெட்டுவிட்டது. நிர்வாகிகளும் 'எல்லாம் மேலே இருப்பவன் பார்த்துக்கொள்வான்' என்ற பாணியில் சொகுசு வாழ்க்கைக்கு பழகியதால், கிழிந்து தொங்கும் கட்சி கொடிகளை மாற்றக்கூட ஆளில்லாமல் போனது. சாதாரண கரைவேட்டியை அடையாளமாகக்கொண்ட கருணாநிதியின் காலம் மாறி, வியூக வல்லுநர்கள் சொன்ன இடங்களில் சைக்கிள் ஓட்டுவது, டீ குடிப்பது, செல்ஃபி எடுப்பது என திமுகவின் இயல்பு மாறியது.

புகைப்படங்கள், வீடியோ ஷூட்களை விரும்பும் தலைமையை திருப்திப்படுத்த, மாவட்ட செயலாளர்கள் தொண்டர்களுக்கு தலா 300 ரூபாய் கொடுத்து போலியான கூட்டத்தை காட்டினார்கள். இதனால், உண்மை நிலவரம் தலைமையை சென்றடையவில்லை. குறைகளை சொல்ல நினைப்பவர்களை ஊக்குவிக்காமல், மாவட்ட செயலாளர்கள் சொல்வதை மட்டுமே நம்பும் சூழல் ஏற்பட்டது. உண்மையை சொல்பவர்கள் மீது 'உள்ளடி வேலை' முத்திரை குத்தப்பட்டது. அமைச்சராக வேண்டும் என நினைத்தவர்கள், தங்கள் மாவட்டத்தில் யாரும் உயர்ந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர். எதிர்க் கட்சியுடன் பேசி, தங்கள் தொகுதிகளில் 'சொத்தான' வேட்பாளர்களை நிறுத்தி, சொந்தக் கட்சிக்குள் இருக்கும் போட்டியாளர்களை வலுவானவர்களை நிறுத்தி வீழ்த்தவும் முயன்றனர். கட்சிக்கு உழைத்த பல பாரம்பரிய திமுக குடும்பங்கள் காணாமல் போயின.

தேர்தல் நேரத்தில், 'உடன்பிறப்பே வா' என்று நிர்வாகிகளை அழைத்து கருத்து கேட்டீர்கள். அப்போதும் மாவட்ட செயலாளர்களுக்கு சிலர் 'துப்பு' கொடுத்ததால், உண்மையை சொல்ல வந்தவர்கள் உங்களிடம் உண்மை சொல்லாமல் திரும்பினர். மேலும், கூட்டணிக் கட்சிகளுக்கும் தாராளமாக செலவு செய்தீர்கள். அதை திமுக நிர்வாகிகள் 'எங்க பணம் தானே' என்று சொல்லி பதுக்கிக் கொண்டார்கள். தேர்தல் தோல்விக்கான காரணங்களைத் தேடும் முன், கூட்டணிக் கட்சிகளை ஜெயிக்க வைத்துவிட்டு, 'நம்மால் ஜெயித்துவிட்டு இப்படி போய்விட்டோமே…' என்று வேதனையில் இருக்கும் திமுகவினரை முதலில் அழைத்து ஆறுதல் படுத்துங்கள். அவர்கள் நீங்கள் சொன்னதால் உழைத்துவிட்டு, 'கொளத்தூர் வேதனைக்கு' நிகரான வலியில் உள்ளனர். எனவே, வேர்ப்பூச்சிக்கு வைத்தியம் பார்க்காமல் மேலோட்டமாக மகசூலுக்கு மருந்தடிப்பது நீடித்த பலனைத் தராது என்பதை புரிந்துகொண்டு, முன்னாள் முதல்வர் ஸ்டாலின் அப்டேட் ஆக வேண்டும்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKTamil Nadu Politicsஉடன்பிறப்பின் குரல்திமுகதேர்தல் தோல்வி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article அதிமுக உட்கட்சி பூசல்: நீக்கப்பட்ட நிர்வாகிகள் பதவியில் தொடர்வார்கள் – வேலுமணி, நத்தம் திடீர் அறிக்கை!
Next Article CSK vs LSG: ஒரே ஓவரில் 28 ரன்கள்.. மார்ஷ் அதிரடி.. சென்னை வெற்றி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திமுக கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனா

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிரான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில்…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

You Might Also Like

தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேட்டி அளிக்கும் காட்சி
தமிழ்நாடு

திமுகவின் அழிவு காலம் தொடங்கிவிட்டது: தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேட்டி

திமுகவின் அழிவு காலம் தொடங்கிவிட்டதாக தவெக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க திமுக முயற்சிப்பதாக அவர் குற்றம்…

2 Min Read
அரசியல்

அதிமுக வலுவிழக்க பழனிசாமிதான் காரணமா? – அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி

அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளால் கட்சி வலுவிழந்து வருவதாக குற்றம் சாட்டினார்.

1 Min Read
தமிழ்நாடு

திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு

திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

முதல்வர் பதவி குறித்து கருத்து திரித்து வெளியிடப்பட்டது: அமைச்சர் கண்டனம்

தமிழக பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதல்-அமைச்சர் பொறுப்பேற்பது குறித்து தான் கூறிய கருத்துக்கள் திரித்து வெளியிடப்பட்டதாக அமைச்சர் விஸ்வநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயல்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?