MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழ்நாட்டைக் காக்கும் வலிமை திமுகவிடம் உள்ளது – ஸ்டாலின்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழ்நாட்டைக் காக்கும் வலிமை திமுகவிடம் உள்ளது – ஸ்டாலின்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழ்நாட்டைக் காக்கும் வலிமை திமுகவிடம் உள்ளது – ஸ்டாலின்

தமிழ்நாடு

தமிழ்நாட்டைக் காக்கும் வலிமை திமுகவிடம் உள்ளது – ஸ்டாலின்

Admin
Last updated: மே 14, 2026 9:21 காலை
Admin
Share
SHARE

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது' என்ற தனது நிலைப்பாட்டின்படியே, திமுக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சட்டமன்றத்தில் தங்களது தோழமை இயக்க உறுப்பினர்களான திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகியோரும் வெளிநடப்பு செய்ததற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்ற தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததை திமுக மதிக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த அனைவரின் நம்பிக்கையையும் சிதைக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 3 நாட்களாக ஆளுங்கட்சியின் செயல்பாடுகளும், அதற்கு தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளுமே இதற்கு சாட்சி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

'Clean Politics' சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது 'Dirty Politics' செய்வதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பிளவுபட்ட அதிமுகவில், உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 'உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?' என்று வாக்களித்த மக்களே வருந்திப் பேசுவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை நேரடியாகச் சாடிய ஸ்டாலின், உங்கள் செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து கவனித்து வருவதாகவும், அடுத்து பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு என்ன 'Return Gift' கொடுக்கப் போகிறீர்கள் என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள் என்றும் கூறியுள்ளார். திமுக ஒருபோதும் தனது கொள்கைகளில் இருந்து மாறாது என்றும், ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படும் என்றும் தனது அறிக்கையில் அவர் உறுதியளித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKTamil Nadu Politicsதமிழக அரசியல்திமுகமு.க. ஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IAS ஆகலாம் வாங்க! சென்னையில் சிறப்பு வழிகாட்டு நிகழ்ச்சி!
Next Article 21 வயதுக்குட்பட்டோருக்கு மதுபானம் விற்பனை செய்ய தடை – டாஸ்மாக் அதிரடி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ராஜஸ்தான் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதியினர் சொத்து விசாரணை

40 சொகுசு வீடுகள்: ராஜஸ்தான் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதியிடம் விசாரணை

ராஜஸ்தானில் ஐஏஎஸ், ஐபிஎஸ் தம்பதியினர் 40 சொகுசு வீடுகளை வாங்கி, ஆண்டுக்கு ரூ.1.8…

நவம்பர் 2, 2026

பிலிபித் வாக்காளர் பட்டியல் முறைகேடு: 2 அதிகாரிகள் மீது வழக்கு

பிலிபித் தொகுதி வாக்காளர் பட்டியல் முறைகேடு தொடர்பாக,…

நவம்பர் 2, 2026

தீவிர புயலாக மாறிய ‘முரசு’: நாளை நெல்லூர் அருகே கரையை கடக்கும் என கணிப்பு

வங்கக் கடலில் உருவான 'முரசு' புயல் தீவிர…

நவம்பர் 2, 2026

ராகுல் காந்தி மீது பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீன் குற்றச்சாட்டு

வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதலின் பேரில் ராகுல் காந்தி…

நவம்பர் 2, 2026

ஆந்திராவில் பள்ளிக்குள் புகுந்து மாணவியை வெட்டிய இளைஞர் கைது

ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப்…

நவம்பர் 1, 2026

You Might Also Like

தமிழ்நாடு

சூர்யாவிற்கு அரசியல் எண்ணம் இல்லை: நற்பணி இயக்கம் விளக்கம்

நடிகர் சூர்யா அரசியலில் ஈடுபடப்போவதாக வெளியான வதந்திகளுக்கு அவரது நற்பணி இயக்கம் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. சூர்யாவிற்கு அரசியல் எண்ணம் இல்லை என்றும், சமூக சேவைகளில் மகிழ்ச்சி…

1 Min Read
அமராவதி அணையில் உயர்ந்துள்ள நீர்மட்டம்
தமிழ்நாடு

அமராவதி அணை நீர்மட்டம் உயர்வு: மகிழ்ச்சியில் விவசாயிகள்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் சாரல் மழையால் அமராவதி அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 Min Read
மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவை கட்டிடம்
தமிழ்நாடு

மத்திய பிரதேசத்தில் லிவ்-இன் உறவுகளுக்கு புதிய சட்டம்: பதிவு செய்யாவிட்டால் சிறை!

மத்திய பிரதேசத்தில் விரைவில் அமல்படுத்தப்பட உள்ள பொது சிவில் சட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத லிவ்-இன் உறவுகளுக்கு 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

2 Min Read
அமைச்சர் ஜெகதீஸ்வரி 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படை குறித்து பேசுகிறார்
தமிழ்நாடு

சிங்கப்பெண் படையின் 100 நாள் செயல்பாடு: அமைச்சர் ஜெகதீஸ்வரி பெருமிதம்

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, 'சிங்கப்பெண்' சிறப்பு அதிரடிப்படையின் 100 நாள் செயல்பாடுகளைப் பாராட்டியுள்ளார். இந்தப் படையில் 54 குழந்தைத் திருமணங்கள்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?