இயக்குநர் ரவி அரசு புதிய தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்

அதர்வா நடிப்பில் வெளியான 'ஈட்டி' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ரவி அரசு, வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். தொடர்ந்து 'ஐங்கரன்' படத்தையும் இயக்கினார். தற்போது விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'மகுடம்' படத்தை இயக்கி வந்த நிலையில், விஷாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படத்திலிருந்து விலகினார்.

இந்நிலையில், ரவி அரசு தற்போது 'பைவ் சி'ஸ் ஃபிலிம்ஸ்' என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த அறிவிப்பை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்த நிறுவனம், நான் இயக்கும் திரைப்படங்களைத் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் இளம் திரைப்படப் படைப்பாளிகளையும் ஊக்குவிக்கும் வகையில் செயல்படும்' என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம், புதிய திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் இந்த நிறுவனம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரவி அரசு, 'ஈட்டி', 'ஐங்கரன்' போன்ற படங்களை இயக்கியதன் மூலம் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியுள்ளார். தற்போது அவர் தொடங்கியுள்ள இந்த புதிய தயாரிப்பு நிறுவனம், தமிழ் சினிமாவில் மேலும் பல தரமான படைப்புகள் உருவாக வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

இயக்குனர் ரவி அரசு புதிய தயாரிப்பு நிறுவனம் தொடக்கம்

தமிழ் சினிமாவில் வெற்றிமாறனின் உதவி இயக்குனராக தனது பயணத்தை தொடங்கிய ரவி அரசு, 'ஈட்டி', 'ஐங்கரன்' போன்ற படங்களை இயக்கி ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் 'மகுடம்' திரைப்படத்திலிருந்து சில காரணங்களால் விலகியதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ரவி அரசு, '2004-ஆம் ஆண்டில் இயக்குனர் வெற்றிமாறனின் உதவியாளராக சேர்ந்து எனது திரைப்படப் பயணத்தைத் தொடங்கினேன். சுமார் 10 ஆண்டுகள் நீடித்த இந்தப் பயணத்தின் போது, அவரது அனுபவமும், கதை சொல்லும் கலையின் மீதான எனது ஆர்வமும் இணைந்து, என்னை ஒரு மிகச்சிறந்த, உணர்வுபூர்வமான படைப்பாளியாக வார்த்தெடுத்தன' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், '2026-ஆம் ஆண்டில், தமிழ் திரையுலகில் 20 ஆண்டுகளுக்கும் மேலான பயணத்திற்குப் பிறகு, காலம் எனது திரைப்பயணத்தில் ஒரு முக்கியத் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. பைவ் சீஸ் பிலிம்ஸ் ('FIVE C's Films') எனும் பெயரில் ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை நான் தொடங்கியுள்ளேன். இந்த நிறுவனம், நான் இயக்கும் திரைப்படங்களைத் தயாரிப்பதோடு மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் இளம் திரைப்படப் படைப்பாளிகளையும் ஊக்குவிக்கும் வகையில் செயல்படும். பார்வையாளர்களுடன் ஆழமாக ஒன்றிணையும் வகையிலான, மிகுந்த பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த மற்றும் ஈர்க்கக்கூடிய படைப்புகளை உருவாக்குவதையே 'FIVE C's Films' தனது முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது' என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய பயணத்திற்கு ஆதரவளிக்கும் ரசிகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்தவர்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்த ரவி அரசு, 'எங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு குறித்த விவரங்களை விரைவில் அறிவிப்போம்' என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version