MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சட்டமன்றம் விளையாட்டு மன்றமாக உள்ளது – திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சட்டமன்றம் விளையாட்டு மன்றமாக உள்ளது – திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சட்டமன்றம் விளையாட்டு மன்றமாக உள்ளது – திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்

தமிழ்நாடு

சட்டமன்றம் விளையாட்டு மன்றமாக உள்ளது – திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்

Fernandez
Last updated: செப்டம்பர் 6, 2026 7:24 காலை
Fernandez
Share
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
SHARE

வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை முன்னிட்டு, திண்டுக்கல் – திருச்சி சாலையில் காட்டாஸ்பத்திரி அருகே வ.உ.சி. சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இன்று (05.09.26) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த இசக்கிமுத்து, மீண்டும் எம்எல்ஏவாக தொடர்வதற்காக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தது குறித்த கேள்விக்கு, 'என்னுடைய ஆய்வில் உள்ளது, சட்டசபை கூட்டம் முடிவடைந்த உடன் பதில் சொல்கிறேன்' என சபாநாயகர் கூறியுள்ளார். சபாநாயகர் எது சொன்னாலும் நீதிமன்றம்தான் முடிவு செய்யும். கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதாக கூறி எம்எல்ஏ பதவியில் இருந்து நீக்க வேண்டும் என எடப்பாடியார் நீதிமன்றம் சென்றுள்ளார். நீதிமன்றம்தான் இறுதி தீர்ப்பு.

நிலைமையற்ற வாழ்க்கை எப்படி உள்ளது என்று பாருங்கள். எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்துவிட்டு, என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஆனால் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மறுபடியும் நான் எம்எல்ஏவாக தொடர்கிறேன் என்று சொல்வது, குழந்தைகள் கூட தெரியும் செல்லாது என்று தேவையில்லாமல் சபாநாயகரிடம் மனு கொடுத்து கதாநாயகன் போல் காட்டுகிறார். இறுதி முடிவு நீதிமன்றம்தான் முடிவு செய்யும்.

ஏற்கனவே சட்டசபையில் தற்காலிக சபாநாயகராக காங்கிரசைச் சேர்ந்த யசோதா பொன்னம்பலம் அமர்ந்து உள்ளார். தற்போது தற்காலிகமாக சத்தியபாமாவை நாங்கள் தான் பெண் தற்காலிக சபாநாயகர் அமைத்துள்ளோம் என கூறி வருவது குறித்த கேள்விக்கு, ஏற்கனவே பல பெண்கள் எம்எல்ஏக்கள் சபாநாயகராக இருக்கையில் அமர்ந்துள்ளனர். எல்லாமே முதலில் தாங்கள் தான் செய்தது போல் ஆளும் கட்சியினர் காட்டுகின்றனர். அது பொய், உண்மைக்கு மாறானது, தவறானது. தவறான தகவலை பரப்பி வருகின்றனர்.

1200 கோடி செலவில் புதிதாக தலைமைச் செயலகம் கட்டப்படும் என சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு, 'தான்தோன்றித்தனமாக அரசு செயல்படுகிறது. எதையும் செய்யலாம், எவ்வளவு வேண்டுமானாலும் கடன் வாங்கலாம். இவர்கள் புதிதாக கட்டுவது போல் காண்பிக்கிறார்கள். என்ன நடக்கப்போகிறது, என்ன முடியப்போகிறது என்பதை தெரியாது. சுதந்திரம் வாங்கியதற்கு பின்பு உள்ள அனைத்து முதலமைச்சர்களும் இந்த சட்டமன்ற அரங்கில் தான் இருந்துள்ளனர். இதன் முடிவு என்னவென்று தெரியாது.'

மேட்டூர் அணைக்கு 6 கோடி ரூபாய் செலவு செய்து வந்து சென்ற முதலமைச்சர் குறித்த கேள்விக்கு, 'காஸ்ட்லி முதலமைச்சர்' என எடப்பாடி யார் உதயநிதி சொல்லிவிட்டார். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் விலகுவதற்கான சூழ்நிலைகளை சொல்லிவிட்டார்கள். கூட்டணியில் இருக்க மாட்டோம், எதிலும் இருக்க மாட்டோம். எங்களது கொள்கைகளை நிறைவேற்றுகிறார்களோ அவருடன் இருப்போம் என்று இரண்டு பேரும் சொல்லிவிட்டார்கள். ஆல்மோஸ்ட் விலகுகிறோம் எனக் கூறிவிட்டார்கள்.

பிரதமர் ராகுல் தான் என சொல்லவில்லை என்றால் காங்கிரஸை விலக்குவோம் என கூறிவிட்டார்கள். இவர்களை எல்லாம் சரி பண்ணுவதற்காகத்தான் கூட்டம் நடத்துகிறார்கள், பேச்சுவார்த்தை நடத்துவார்கள். விஜய் அடுத்த பிரதமர் என அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கூறி வருவது குறித்த கேள்விக்கு, 'அதிகாரப்பூர்வமாக இதனை மறுக்க வேண்டியது முதலமைச்சர். விஜய் மந்திரிகளை விட்டு அடுத்த பிரதமர் விஜய் தான் என்ன பேச விடுகிறார்கள்? ராகுல் தான் பிரதமர் என சொல்ல வேண்டியது முதலமைச்சர். பிரதமர் ஆக வேண்டிய ஆசை விஜய்க்கு இருக்கிறது என்றுதான் அர்த்தம். இரட்டை வேடம் போடுகிறார்கள். நடிகர் விஜய் தேர்தலுக்கு முன்பு ஒரு வாக்குறுதி, தேர்தலுக்குப் பின்பு ஒரு வாக்குறுதி என பொய்யான சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். இதனை பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள்.'

கூட்டணிக் கட்சிகளுக்கு தவெகவினர் மிரட்டல் கொடுக்கிறார்களா அல்லது அழுத்தம் கொடுக்கிறார்களா என்ற கேள்விக்கு, 'அழுத்தம் அல்ல, மிரட்டல் என்று சொல்ல முடியாது. இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் எங்கள் கொள்கை, தொழிலாளர்கள் கொள்கை சரியாக நடந்தால் ஆதரவு தருவோம், இல்லையென்றால் வரமாட்டோம் எனத் தெளிவாக சொல்கிறார்கள். பாரம்பரிய கட்சியான நாங்கள் சொல்வதைக் கேட்டால் ஆதரவு தருவோம், இல்லை என்றால் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளனர்.

சட்டசபையில் இருந்து முதலமைச்சர் திடீரென வெளியே சென்றது குறித்த கேள்விக்கு, 'முதலமைச்சர் வெளியே செல்வதற்கு உரிமை உண்டு. பத்து நிமிடம் இருந்து உட்கார்ந்து விட்டு சென்றிருக்கலாம். வீர விளையாட்டு போல் நடக்கிறது. சட்டமன்றமாக தெரியவில்லை, விளையாட்டு மன்றமாக நடக்கிறது. பொறுப்பான முதலமைச்சராக இருந்தால் எதிர்க்கட்சிகள் சொல்வதை கேட்டுவிட்டு சென்றிருக்க வேண்டும். கத்தி சண்டை ஒன்றும் போடவில்லை. சட்டமன்றத்தில் இருக்க சொல்வது நியாயமானது. மிரட்டுவது என இரண்டு பர்பஸ் உள்ளது.'

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKAssemblyChief MinisterDindigul SrinivasanMLAPlaygroupஅதிமுகஎம்எல்ஏசட்டமன்றம்திண்டுக்கல் சீனிவாசன்முதலமைச்சர்விளையாட்டு மன்றம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article முகமது ஷமி கிரிக்கெட் விளையாடும் புகைப்படம் முகமது ஷமியை ஓரங்கட்டிய தேர்வுக்குழுவினர் – முன்னாள் பயிற்சியாளர் பரத் அருண் சாடல்
Next Article கிராம்பு மற்றும் அதன் நன்மைகள் பற்றிய தகவல் கிராம்பின் அற்புத ஆரோக்கிய நன்மைகள்: ஒரு பார்வை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் புதிய அறிவியல் இதழ்களை அறிமுகப்படுத்துகிறார்

5 மொழிகளில் புதிய அறிவியல் இதழ்கள் வெளியீடு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தமிழ், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட 5…

செப்டம்பர் 26, 2026

பாகிஸ்தான் பிரதமரின் உரைக்கு ஐ.நா.வில் இந்தியா பதிலடி

ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் உரைக்கு இந்தியா பதிலடி.…

செப்டம்பர் 26, 2026

தேர்தல் ஆணையர் சர்ச்சை: இந்தியா கூட்டணி கூட்டம் அடுத்த வாரம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் சர்ச்சை…

செப்டம்பர் 26, 2026

மணிப்பூரில் மியான்மர் கும்பலால் 4 பேர் படுகொலை

மணிப்பூர் மாநிலத்தில் மியான்மர் கும்பலால் 4 பேர்…

செப்டம்பர் 26, 2026

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் சொத்தில் சம பங்கு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இஸ்லாமிய பெண் வாரிசுகளுக்கும் பூர்வீகச் சொத்தில் சம…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கும் வழக்கறிஞர்
தமிழ்நாடு

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் லஞ்சம்: த.வெ.க. நிர்வாகி மீது புகார்

தேனி தெற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் லெஃப்ட் பாண்டி மீது அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு லஞ்சம் பெற்றதாக புகார். பாதிக்கப்பட்டவர் எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

பாலியல் குற்றவாளிகளுக்கு ‘கலர் கோடு’: தவெக அரசு புதிய திட்டம்

பாலியல் குற்றவாளிகளைக் கண்காணிக்க 'SPECTRUM' என்ற புதிய 'கலர் கோடு' திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 15,000 குற்றவாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, வண்ணக் குறியீடுகள் மூலம் கண்காணிக்கப்படும்.

1 Min Read
தமிழக சட்டசபை வளாகம்
தமிழ்நாடு

மத்திய வரிகள் பகிர்வு: தமிழக நலன் காக்க தனித்தீர்மானம்

மத்திய வரிகள் பகிர்வுக்கான அளவுகோல்கள் எந்த மாநிலத்தையும் பாதிக்கக்கூடாது என வலியுறுத்தி, தமிழக சட்டசபையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநிலத்தின் நிதி உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம்…

2 Min Read
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழ்நாடு

2027-ல் அண்ணாமலை புதிய கட்சி? வியூகம் வகுக்கிறாரா?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 2027-ல் புதிய கட்சி தொடங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல். 2029 நாடாளுமன்ற தேர்தலை இலக்காக கொண்டு வியூகம். கரு.நாகராஜன் பொதுச்செயலாளராக நியமனம்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?