MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: “கேரள முதல்வர் குறித்து காங். தலைமை 24 மணி நேரத்துக்குள் முடிவெடுக்கும்” – கே.முரளிதரன்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: “கேரள முதல்வர் குறித்து காங். தலைமை 24 மணி நேரத்துக்குள் முடிவெடுக்கும்” – கே.முரளிதரன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - “கேரள முதல்வர் குறித்து காங். தலைமை 24 மணி நேரத்துக்குள் முடிவெடுக்கும்” – கே.முரளிதரன்

லைஃப் ஸ்டைல்

“கேரள முதல்வர் குறித்து காங். தலைமை 24 மணி நேரத்துக்குள் முடிவெடுக்கும்” – கே.முரளிதரன்

Admin
Last updated: மே 9, 2026 8:21 காலை
Admin
Share
SHARE

திருவனந்தபுரம்: கேரளாவின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்த ஆலோசனைகள் 24 மணி நேரத்துக்குள் நிறைவடையும் என்ற தகவல் டெல்லியில் இருந்து வந்துள்ளதாக மூத்த காங்கிரஸ் தலைவர் கே.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 140 தொகுதிகளில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) 102 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் தகுதியைப் பெற்றுள்ளது. இதில், காங்கிரஸ் மட்டுமே 63 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, கேரளாவின் அடுத்த முதல்வரை தேர்வு செய்வதற்கான முயற்சிகளை காங்கிரஸ் கட்சி தீவிரப்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மேலிட பார்வையாளர்களான அஜய் மக்கான் மற்றும் முகுல் வாஸ்னிக் ஆகியோர் கடந்த 7-ம் தேதி திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினர். இதில், யாரை முதல்வராக தேர்ந்தெடுப்பது என்பது குறித்து எம்எல்ஏக்களின் கருத்துகளை அவர்கள் கேட்டறிந்தனர்.

இது தொடர்பாக டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அஜய் மக்கான், “காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டத்தை நாங்கள் மே 7-ம் தேதி கூட்டினோம். ஒவ்வொரு எம்எல்ஏவிடமும் நாங்கள் தனித்தனியாகப் பேசினோம். கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவர் தொடர்பான அவர்களின் கருத்துக்களைக் கேட்டோம். அவர்கள் கூறிய மற்ற கருத்துகளையும் நாங்கள் குறித்துக்கொண்டோம்.

இதையடுத்து, காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவரை தேர்வு செய்வதற்கான முழு அதிகாரத்தையும் காங்கிரஸ் தலைமைக்கு அளிக்கும் ஒருவரி தீர்மானத்தை அனைத்து எம்எல்ஏக்களும் ஒன்றிணைந்து ஒருமனதாக நிறைவேற்றினர். அந்த தீர்மானத்தின் நகல் கட்சித் தலைவர் தலைமையிலான மேலிடத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், எம்எல்ஏக்கள் தெரிவித்த கருத்துகள் தொடர்பான அறிக்கையையும் நாங்கள் மேலிடத்திடம் சமர்ப்பித்துள்ளோம். காங்கிரஸ் மேலிடம் விரைவில் தனது முடிவை அறிவிக்கும்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் கே.முரளிதரன், “முதல்வர் குறித்த ஆலோசனை 24 மணி நேரத்துக்குள் நிறைவடையும் என்ற தகவல் டெல்லியில் இருந்து வந்துள்ளது. முதல்வரை தேர்வு செய்வதில், சீனியாரிட்டி மட்டுமே ஒரே அளவுகோலாக இருக்காது. அமைய இருப்பது கூட்டணி அரசு. எனவே, கூட்டணிக் கட்சிகளின் கருத்துகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

முதல்வர் பதவிக்கு வி.டி.சதீசன், ரமேஷ் சென்னிதாலா, கே.சி.வேணுகோபால், சன்னி ஜோசப் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேநேரத்தில், வி.டி.சதீசனின் ஆதரவாளர்கள், அவரையே முதல்வர் வேட்பாளராக தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கேரளாவின் பல்வேறு பகுதிகளில் பேரணிகளை நடத்தி வருகின்றனர். மேலும், பல்வேறு இடங்களில் பதாகைகளை வைத்து தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article “திருமாவளவன் தவெகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” – ராமதாஸ் கோரிக்கை
Next Article IPL 2026: பிளாஸ்டு.. பிளாஸ்டு.. கொல்கத்தா அபார வெற்றி.. மீண்டும் டெல்லி அணி தோல்வி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஈ20 பெட்ரோல் பயன்பாடு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள் முழு நம்பிக்கையுடன் தொடர்ந்து பயன்படுத்தலாம்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

மெட்டா நிறுவன சட்டப் பாதுகாப்பை நீக்க மத்திய அரசு ஆய்வு

மெட்டா நிறுவனத்தின் சட்டப் பாதுகாப்பை நீக்குவது குறித்து…

ஆகஸ்ட் 9, 2026

சென்னை ஐகோர்ட்டில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நிரந்தர மற்றும்…

ஆகஸ்ட் 9, 2026

இந்தி பேச மறுத்ததால் டெலிவரி ஊழியர் தாக்கப்பட்டார்: 4 பேர் மீது வழக்கு

பெங்களூருவில், இந்தி பேச மறுத்ததாக கூறி ஜெப்டோ…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

தென் கொரியாவில் அரசியல் அதிர்ச்சி: டிரோன் சதிக்கு முன்னாள் அதிபருக்கு 30 ஆண்டு சிறை

வட கொரியாவைத் தூண்டி அவசரநிலையை உருவாக்க முயன்ற டிரோன் சதித்திட்டம் தொடர்பாக தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூனுக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாதுகாப்பு…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

மம்மூட்டிக்கு பத்ம பூஷண், மாதவனுக்கு பத்மஸ்ரீ: மத்திய அரசு அறிவிப்பு

நடிகர் மம்மூட்டிக்கு பத்ம பூஷண் விருதும், மாதவன், சதீஷ் ஷா, கட்டே பாபு ராஜேந்திர பிரசாத் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர்…

1 Min Read
கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெயுடன் ஹேர் ஸ்பா தயாரிக்கும் பெண்
லைஃப் ஸ்டைல்

வீட்டிலேயே கறிவேப்பிலை ஹேர் ஸ்பா: முடி உதிர்வுக்கு சூப்பர் தீர்வு!

முடி உதிர்வு மற்றும் பொடுகுத் தொல்லைக்கு வீட்டிலேயே கறிவேப்பிலை ஹேர் ஸ்பா மூலம் தீர்வு காணலாம். இது முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு, தலைமுடிக்கு பளபளப்பையும் தரும்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

முதல்வர் விஜய்க்கு ராகுல்காந்தி பிறந்தநாள் வாழ்த்து

தமிழக முதல்வர் விஜய்க்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் இன்று தனது 52-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?