MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆபாச செயலி பெயரில் வங்கி பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம கும்பல் – எச்சரிக்கை!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆபாச செயலி பெயரில் வங்கி பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம கும்பல் – எச்சரிக்கை!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஆபாச செயலி பெயரில் வங்கி பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம கும்பல் – எச்சரிக்கை!

தமிழ்நாடு

ஆபாச செயலி பெயரில் வங்கி பணத்தை கொள்ளையடிக்கும் மர்ம கும்பல் – எச்சரிக்கை!

Fernandez
Last updated: செப்டம்பர் 1, 2026 3:35 மணி
Fernandez
Share
மத்திய உள்துறை அமைச்சகம் சைபர் குற்றங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் சைபர் குற்றங்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
SHARE

மொபைல் போன் பயனர்களே உஷார்! உங்கள் வங்கி கணக்குகளை குறிவைத்து செயல்படும் மர்ம கும்பல் ஒன்று, ஆபத்தான ஆபாச செயலிகள் மூலம் பணத்தை கொள்ளையடிக்கும் புதிய மோசடியில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய சைபர் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் மூலம் ஆபத்தான ஆபாச செயலிகள் பரப்பப்படுகின்றன. இந்த செயலிகளை 'கிளிக்' செய்யும் பயனர்கள், சில ஆபாச இணையதளங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு நம்பவைக்கப்பட்டு, கூகுள் பிளே ஸ்டோருக்கு வெளியே இருந்து சில செயலிகளை பதிவிறக்கம் செய்ய தூண்டப்படுகின்றனர்.

குறிப்பாக, 'நைட் பிளே, ரீலுாப், கிஸ், விமோ, ரிவோ, நெக்ஸோ, விக்ஸா' போன்ற பெயர்களில் உலாவும் இந்த ஆபத்தான செயலிகள், மொபைல் போனில் நிறுவப்பட்டவுடன், அதன் முக்கிய கட்டுப்பாடுகளை இயக்குவதற்கான அனுமதிகளை கேட்கின்றன. ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள 'அக்செசிபிலிட்டி' எனப்படும் சிறப்பு அனுமதியைப் பெற்று, பின்புலத்தில் இயங்கத் தொடங்குகின்றன.

இந்த அனுமதியைப் பெற்றவுடன், மர்ம நபர்கள் பயனரின் மொபைல் போனை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகின்றனர். இதன் மூலம், பயனருக்குத் தெரியாமலேயே அவரது வங்கி கணக்குகளில் இருந்து பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு பணத்தை கொள்ளையடிக்கின்றனர். மேலும், இந்த செயலிகள் 'அப்டேட்' என்ற பெயரில் மற்றொரு தீம்பொருளான 'மால்வார்' ஒன்றை பதிவிறக்கம் செய்து, மொபைல் போனில் உள்ள ஒட்டுமொத்த தரவுகளையும் திருடி விடுகின்றன.

எனவே, ஆண்ட்ராய்டு மொபைல் போன் பயனர்கள் செயலிகளை எப்போதும் 'கூகுள் பிளே ஸ்டோர்' அல்லது அங்கீகரிக்கப்பட்ட தளங்களில் இருந்து மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும். விளம்பரங்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் வழியாக வரும் செயலிகளை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். முன்பின் தெரியாத செயலிகளுக்கு 'அக்செசிபிலிட்டி' அனுமதியை ஒருபோதும் வழங்கக் கூடாது.

தங்கள் மொபைல் போன்களில் உள்ள செயலிகளை தொடர்ந்து கண்காணித்து, தேவையில்லாத அல்லது அறிமுகமில்லாத செயலிகளை உடனடியாக நீக்க வேண்டும். மேலும், மொபைல் போனில் 'கூகுள் பிளே புரொடெக்ட்' எனப்படும் பாதுகாப்பு வசதியை இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும். மொபைல் போன் மென்பொருளை உடனுக்குடன் அப்டேட் செய்வதும் அவசியம்.

வங்கி மற்றும் யு.பி.ஐ. எனப்படும் ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை தளத்தின் கணக்குகளை தொடர்ந்து சரிபார்த்து வருவதுடன், ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் நடந்தால் உடனடியாக 1930 என்ற தேசிய உதவி எண்ணிலோ அல்லது www.cybercrime.gov.in என்ற அதிகாரப்பூர்வ சைபர் குற்ற புகார் இணையதளத்திலோ புகார் அளிக்கலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

**செயலிகளை அகற்றுவது எப்படி?**

* பயனர்கள் தங்கள் ஆண்ட்ராய்டு மொபைல் போனை 'சேப் மோடு' எனப்படும் பாதுகாப்பான பயன்முறையில் ரீஸ்டார்ட் செய்யலாம்.
* பின்னர், அமைப்புகள் (Settings) என்ற பிரிவில் உள்ள செயலிகள் (Apps) பகுதிக்குச் சென்று சந்தேகத்திற்கிடமான செயலிகளை நீக்கலாம்.
* சாதனத்தை ரீஸ்டார்ட் செய்த பிறகும் ஒரு செயலியை அகற்றவோ அல்லது மீண்டும் கொண்டு வரவோ முடியாவிட்டால், பயனர்கள் தங்களின் முக்கியமான தரவுகளை எடுத்து வைத்துக் கொண்டு, போனை 'பேக்டரி ரீசெட்' செய்யலாம்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:App ScamCyber CrimeMobile Securityஆபாச செயலிஆன்ட்ராய்டு செயலிசைபர் கிரைம்மொபைல் பாதுகாப்புவங்கி மோசடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமனன் அறிவிப்பு வெளியிடுகிறார் ரேஷன் கடைகளில் ரூ.35க்கு வெங்காயம்: அமைச்சர் அறிவிப்பு!
Next Article ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் சிறப்பு வீடியோ தாய் மாமன் தங்க மோதிரம்: அரசுக்கு நன்றி தெரிவித்த ஜாய் ஆலுக்காஸ்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பஞ்சாப் போதைப்பொருள் சர்ச்சை தொடர்பாக கைது செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் பல்தேவ்

பஞ்சாப் போதைப்பொருள் சர்ச்சை: இன்ஸ்பெக்டர் கைது, 3 கிலோ கொகேன் பறிமுதல்

பஞ்சாபில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக உளவுப்பிரிவு இன்ஸ்பெக்டர் பல்தேவ் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து…

செப்டம்பர் 26, 2026

மத்திய பிரதேச முதல்-மந்திரிக்கு வாட்ஸ்அப் கொலை மிரட்டல்: இளைஞர் கைது

மத்திய பிரதேச முதல்-மந்திரிக்கு வாட்ஸ்அப் மூலம் கொலை…

செப்டம்பர் 26, 2026

குழந்தைகளுக்கு பாம்பு காட்டியவர் சோகம்: கட்டு விரியன் பாம்பால் நேர்ந்த விபரீதம்

கட்டு விரியன் பாம்பை உயிருடன் பிடித்த பாம்பு…

செப்டம்பர் 26, 2026

தேர்தல் ஆணையம்: எஸ்ஐஆர் உத்தரவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டன

இந்திய தேர்தல் ஆணையம், பிஹார் உட்பட 30…

செப்டம்பர் 26, 2026

5 மொழிகளில் புதிய அறிவியல் இதழ்கள் வெளியீடு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தமிழ்,…

செப்டம்பர் 26, 2026

You Might Also Like

மெரினா கடற்கரையில் அமையவுள்ள குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம்
தமிழ்நாடு

மெரினாவில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம்: ரூ.78.40 லட்சம் டெண்டர் வெளியீடு

சென்னையின் மெரினா கடற்கரையில் பயணிகளின் வசதிக்காக ரூ.78.40 லட்சம் மதிப்பில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

2 Min Read
சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் மேம்பாட்டு பணிகள்
தமிழ்நாடு

எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் தற்காலிக மாற்றங்கள்; தெற்கு ரயில்வே வருத்தம்

சென்னை எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் காரணமாக பயணிகள் போக்குவரத்தில் தற்காலிக மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் சிரமத்திற்கு தெற்கு ரயில்வே வருத்தம் தெரிவித்துள்ளது.

4 Min Read
திமுக அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த கவுன்சிலர் பாபு
தமிழ்நாடு

திமுக அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த கவுன்சிலர் பாபு!

கோவை மாநகராட்சி 22-வது வார்டு திமுக கவுன்சிலர் பாபு, இளைஞர்களுக்கும் சாமானியர்களுக்கும் இடமில்லை எனக் கூறி அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

2 Min Read
தமிழ்நாடு

பேருந்து நிற்காத நிழற்குடைக்கு கனிமொழிக்கு பெண்கள் கேள்வி

காயல்பட்டினத்தில் பேருந்துகள் நிற்காத நிழற்குடை திறப்பு விழாவில் பங்கேற்ற திமுக எம்.பி கனிமொழி, பெண்களின் கேள்விக்கு 'நம்ம முதல்வராக இருந்தால் செய்திருப்பேன்' என பதிலளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?