MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: CSK: சிஎஸ்கே ஆடிய பவர்பிளே ஆட்டத்தை பார்த்து மனமுடைந்து போன லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.. என்ன நடந்தது?
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: CSK: சிஎஸ்கே ஆடிய பவர்பிளே ஆட்டத்தை பார்த்து மனமுடைந்து போன லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.. என்ன நடந்தது?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - CSK: சிஎஸ்கே ஆடிய பவர்பிளே ஆட்டத்தை பார்த்து மனமுடைந்து போன லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.. என்ன நடந்தது?

விளையாட்டு

CSK: சிஎஸ்கே ஆடிய பவர்பிளே ஆட்டத்தை பார்த்து மனமுடைந்து போன லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்.. என்ன நடந்தது?

Admin
Last updated: மே 10, 2026 7:56 மணி
Admin
Share
SHARE

சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆடிய பவர்பிளே ஆட்டம் மிரள வைப்பதாக இருந்தது. இளம் புயல் ஊர்வில் படேல் வெறும் 13 பந்துகளில் அரைசதம் அடித்து புதிய வரலாறு படைத்தார். அவரது அதிரடி லக்னோ அணியின் பிளே ஆப் கனவை ஒட்டுமொத்தமாக காலி செய்தது. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இந்த போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி களம் இறங்கியது.

முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் எடுத்தது. 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி சிஎஸ்கே அணி தனது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரராக களம் இறங்கிய சஞ்சு சாம்சன் 14 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அதிரடியான ஆரம்பத்தை கொடுத்தார்.

சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்த பிறகு, கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுடன் ஜோடி சேர்ந்தார் இளம் வீரர் ஊர்வில் படேல். களம் புகுந்த முதல் பந்திலிருந்தே லக்னோ பந்துவீச்சை துவம்சம் செய்யத் தொடங்கிய அவர், மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களை பறக்கவிட்டார். வெறும் 13 பந்துகளில் அரைசதம் கடந்து மிரட்டிய ஊர்வில் படேலின் ஆட்டத்தைப் பார்த்து லக்னோ பந்துவீச்சாளர்கள் நிலை குலைந்து போனார்கள்.

சிஎஸ்கே அணி முதல் 6 ஓவர்கள் கொண்ட பவர் பிளே முடிவிலேயே ஒரு விக்கெட் இழப்பிற்கு 97 ரன்களைக் குவித்து மலைக்க வைத்தது. அதாவது வெற்றிக்குத் தேவையான ரன்களில் பாதியை வெறும் 6 ஓவர்களிலேயே எட்டிப் பிடித்துவிட்டது. இதைப் பார்த்த போதே லக்னோ அணிக்கு தோல்வி உறுதியாகிவிட்டது. அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையிழந்து சோர்ந்து காணப்பட்டனர்.

தொடர்ந்து அதிரடி காட்டிய ஊர்வில் படேல் மொத்தம் 23 பந்துகளில் 65 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 282 ஆக இருந்தது. இதில் 8 சிக்ஸர்கள் மற்றும் 2 ஃபோர் அடங்கும். அவர் ஆட்டமிழக்கும் போது சிஎஸ்கே அணி 9.2 ஓவர்களில் 126 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. இதனால் சிஎஸ்கே அணியின் வெற்றி அப்போதே கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் அணி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மீண்டும் உடைகிறதா அதிமுக? விஜய்யை சந்திக்கும் சி.வி.சண்முகம் தரப்பு!
Next Article தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் கருப்பையா பதவியேற்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது

சிம் கார்டு வாங்க புதிய கட்டுப்பாடு: மத்திய அரசு அறிவிப்பு

மத்திய அரசு சிம் கார்டு வாங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. ஜம்மு - காஷ்மீர்,…

ஆகஸ்ட் 20, 2026

மனைவி, சகோதரியை கொன்றுவிட்டு வங்கி ஊழியர் தற்கொலை

லக்னோவில் வங்கி ஊழியர் ஒருவர், கருத்து வேறுபாடு…

ஆகஸ்ட் 20, 2026

தாய்-தந்தை நினைவுகளுடன் ராகுல் காந்தி உருக்கமான பதிவு

தனது தாயின் சுயசரிதை கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட…

ஆகஸ்ட் 20, 2026

இளைஞர்களை ஈர்க்கும் ஆர்எஸ்எஸ்: விசாகப்பட்டினத்தில் அகில இந்திய ஒருங்கிணைப்பு கூட்டம்

இளைஞர்களை ஒருங்கிணைக்கும் பணியில் ராஷ்டிரிய ஸ்வயம் சேவக்…

ஆகஸ்ட் 20, 2026

ஜார்க்கண்ட் அரசுப் பணி நியமன ரத்து அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை

ஜார்க்கண்ட் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 20, 2026

You Might Also Like

விளையாட்டு

உலகக் கோப்பை: மெஸ்ஸியை முந்திய எம்பாப்பே, கெர்ட் முல்லருடன் சமன்!

உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில், பிரான்ஸ் வீரர் எம்பாப்பே அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி, கெர்ட் முல்லருடன் மூன்றாவது இடத்தை சமன் செய்துள்ளார்.

1 Min Read
விளையாட்டு

உலகக்கோப்பை வென்ற வீரர்களை நீக்க வேண்டாம்: அம்பத்தி ராயுடு அறிவுரை

இந்திய டி20 அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி சேர்க்கப்பட்டிருந்தாலும், அவரை உடனடியாக களமிறக்குவதில் தயக்கம் காட்டப்படுகிறது. உலகக்கோப்பை வென்ற வீரர்களை அவசரமாக நீக்க வேண்டாம் என…

2 Min Read
விளையாட்டு

IPL 2026: கெட்ட வார்த்தை பேசிய RCB பயிற்சியாளர் ஆண்டி பிளவர்.. பிசிசிஐ அதிரடி நடவடிக்கை

ராய்ப்பூர்: மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் ஏற்பட்ட ஒரு பரபரப்பான சூழலில், ஆர்சிபி தலைமை பயிற்சியாளர் ஆண்டி பிளவர் சொன்ன…

2 Min Read
இந்திய கிரிக்கெட் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் பேசுகிறார்
விளையாட்டு

சஞ்சு சாம்சனுக்கு பதில் வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு: சுப்பிரமணியம் பத்ரிநாத் வலியுறுத்தல்

2026 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு சஞ்சு சாம்சன் தடுமாறுகிறார். வைபவ் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என சுப்பிரமணியம் பத்ரிநாத் வலியுறுத்தல்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?