MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சேப்பாக்கத்தில் லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றியை தொடரும் முனைப்பில் சிஎஸ்கே
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சேப்பாக்கத்தில் லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றியை தொடரும் முனைப்பில் சிஎஸ்கே
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - சேப்பாக்கத்தில் லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றியை தொடரும் முனைப்பில் சிஎஸ்கே

விளையாட்டு

சேப்பாக்கத்தில் லக்னோவுடன் இன்று பலப்பரீட்சை: வெற்றியை தொடரும் முனைப்பில் சிஎஸ்கே

Admin
Last updated: மே 10, 2026 9:25 காலை
Admin
Share
SHARE

சென்னை: ஐபிஎல் தொடரில் இன்று பிற்​பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்​பாக்​கம் எம்​.ஏ.சிதம்​பரம் மைதானத்​தில் நடை​பெறும் ஆட்​டத்​தில் சிஎஸ்கே – லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி​கள் மோதுகின்​றன.

ருது​ராஜ் கெய்க்​வாட் தலை​மையி​லான சிஎஸ்கே அணி 10 ஆட்​டங்​களில் விளை​யாடி 5 வெற்​றி, 5 தோல்வி​களு​டன் 10 புள்​ளி​கள் பெற்று பட்​டியலில் 6-வது இடத்​தில் உள்​ளது. பேட்​டிங்​கில் ஏற்​பட்ட சரிவு​கள் மற்​றும் சொந்த மண்​ணிலும் வெளியூர் மைதானங்​களி​லும் சீரற்ற ஆட்​டத்​திறனை வெளிப்​படுத்​திய போதி​லும், சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு முன்​னேறு​வதற்​கான வாய்ப்​பில் இன்​னும் நீடிக்​கிறது.

நடப்பு சீசனில் சிஎஸ்​கே-​வின் பேட்​டிங் பெரும்​பாலும் சஞ்சு சாம்​சனை சார்ந்தே உள்​ளது. தொடக்க வீர​ராக அவர் அதிரடி​யான ஆரம்​பத்​தைக் கொடுக்​கும்​போது மட்​டுமே அந்த அணி​யின் வெற்றி வாய்ப்பு பிர​காச​மாக அமை​கிறது. சஞ்சு சாம்​சன் நங்​கூர​மாக​வும் அணி​யின் முது​கெலும்​பாக​வும் உரு​வெடுத்​துள்ள நிலை​யில், கேப்​டன் ருது​ராஜ் கெய்க்​வாட் பேட்​டிங்​கில் சீரான ஆட்​டத்தை வெளிப்​படுத்த முடி​யாமல் தடு​மாறி வரு​கிறார்.

கடைசி​யாக டெல்லி அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் ருது​ராஜ் கெய்க்​வாட் 6 ரன்​களில் ஆட்​ட​மிழந்த நிலை​யில் சஞ்சு சாம்​சன் 52 பந்​துகளில் 87 ரன்​கள் விளாசி அணி​யின் வெற்​றிக்கு முக்​கிய பங்​களிப்பை வழங்​கி​யிருந்​தார். இன்​றைய ஆட்​டத்​தி​லும் அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த மட்​டைவீச்சு வெளிப்​படக்​கூடும். நடு​வரிசை​யில் கார்​திக் சர்மா நம்​பிக்கை அளிக்​கத் தொடங்கி உள்​ளார். கடந்த இரு ஆட்​டங்​களி​லும் அவர், 54 மற்​றம் 41 ரன்​கள் சேர்த்​திருந்​தார். டெவால்ட் பிரே​விஸ், ஷிவம் துபே ஆகியோ​ரும் மட்​டையை சுழற்​றி​னால் அணி​யின் பலம் அதி​கரிக்​கும்.

சேப்​பாக்​கம் மைதானம் சுழற்​பந்து வீச்​சுக்கு சாதக​மான தன்​மையி​லிருந்து மாறி, தற்​போது பேட்​டிங்​கிற்​கும் பந்​து​வீச்​சிற்​கும் சமமான வாய்ப்​புள்ள ஆடு​கள​மாக மாறி​யுள்​ளது. இருப்​பினும் ஆடு​களம் சுழற்​பந்து வீச்​சாளர்​களுக்கு ஓரளவுக்கு கைகொடுப்​ப​தால், சிஎஸ்கே அணி​யின் அகீல் ஹோசைன், நூர் அகமது ஆகி​யோர் நடு ஓவர்​களில் முக்​கிய பங்கு வகிக்​கக்​கூடும்.

ரிஷப் பந்த் தலை​மையி​லான லக்னோ சூப்​பர் ஜெயண்ட்ஸ் அணி 10 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 7 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று கடைசி இடத்​தில் உள்​ளது. அந்த அணி தொடர்ச்​சி​யாக 6 தோல்வி​களை சந்​தித்து இருந்த நிலை​யில் கடைசி​யாக மழை​யால் பாதிக்​கப்​பட்ட ஆர்​சிபி அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் 9 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டிருந்​தது.

புள்​ளிப்​பட்​டியலில் கடைசி இடத்​தில் போராடி வந்​தா​லும், இந்த வெற்றி லக்னோ அணி​யின் பிளே-ஆஃப் கனவை இன்​னும் உயிர்ப்​புடன் வைத்​துள்​ளது. ஆர்​சிபி அணிக்கு எதி​ரான ஆட்​டத்​தில் மிட்​செல் மார்ஷ் 56 பந்​துகளில், 111 ரன்​களும், ரிஷப் பந்த் 10 பந்​துகளில், 32 ரன்​களும் விளாசி​யிருந்​தனர். மிட்​செல் மார்ஷ் பார்​முக்கு திரும்​பி​யிருப்​பது அணி​யின் பலத்தை அதி​கரித்​துள்​ளது. அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல்​திறன் வெளிப்​படக்​கூடும்.

நிக்​கோலஸ் பூரனும் நம்​பிக்கை அளிக்​கும் வகை​யில் விளை​யாடத் தொடங்கி உள்​ளார். பந்​து​வீச்​சில் 16 விக்​கெட்​களை கைப்​பற்​றி​யுள்ள பிரின்ஸ் யாதவ் சிஎஸ்கே பேட்​டிங் வரிசைக்கு அழுத்​தம் கொடுக்​கக்​கூடும். சுழலில் ஷாபாஸ் அகமது, திக்​வேஷ் ராதி பலம் சேர்க்​கக்​கூடும்.

இதற்​கிடையே சென்​னை​யில் நேற்று பரவலாக மழை பெய்​தது. இன்று காலை​யும் மழை பெய்​வதற்​கான வாய்ப்​பு​கள் இருப்​ப​தாக வானிலை மையம் தெரி​வித்​துள்​ளது. எனினும் பிற்​பகலில் மழை பொழிவு இல்​லாமல் வானம் மேகமூட்​டத்​துடன் இருக்​கும் என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதனால் இன்​றைய போட்டி திட்​ட​மிட்​டபடி தொடங்​கு​வ​தில்​ தாமதம்​ ஏற்​படக்​கூடும்.

ஆர்​சிபி – மும்பை மோதல்: ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ராய்ப்​பூரில் நடை​பெறும் ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பிய​னான ஆர்​சிபி, 5 முறை சாம்​பிய​னான மும்பை இந்​தி​யன்ஸ் அணி​யுடன் மோதுகிறது. ஆர்​சிபி அணி 10 ஆட்​டங்​களில் விளை​யாடி 6 வெற்​றி, 4 தோல்வி​களு​டன் 12 புள்​ளி​கள் பெற்று 3-வது இடத்​தில் உள்​ளது. மும்பை அணி 10 ஆட்​டங்​களில் விளை​யாடி 3 வெற்​றி, 7 தோல்வி​களு​டன் 6 புள்​ளி​கள் பெற்று 9-வது இடத்​தில்​ உள்​ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நீலாங்கரையில் இருந்து கான்வாய் பாதுகாப்பு வாகனங்களுடன் புறப்பட்டார் த.வெ.க. தலைவர் விஜய்
Next Article எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி… 37 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தவெகவுக்கு ஆதரவு..? – பரபரக்கும் அரசியல் களம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

விளையாட்டு

சவுதி புரோ லீக்: 100 கோல்கள் அடித்த ரொனால்டோ

18 அணிகள் இடையிலான சவுதி புரோ லீக் கால்பந்து போட்டி சவுதி அரேபியாவில் நடந்து வருகிறது. இதில் தைப் நகரில் நடந்த லீக் ஆட்டத்தில் அல் நாசர்…

1 Min Read
விளையாட்டு

IPL: “ஐபிஎல் தொடரில் இனி ஆடாதீர்கள்.. 100 கோடி தருகிறோம்”.. செக் வைத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட்

சிட்னி: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதை விட, ஐபிஎல் போன்ற தனியார் டி20 லீக் போட்டிகளில் விளையாடினால் பல மடங்கு அதிக பணம் கிடைக்கும் என்ற நிலை…

2 Min Read
விளையாட்டு

இந்திய டி20 தொடருக்கு சிக்கல்: அயர்லாந்தில் அசாதாரண சூழல்

15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி அறிமுகமாகும் இந்தியா-அயர்லாந்து டி20 தொடர், வட அயர்லாந்தில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக தள்ளிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக…

1 Min Read
விளையாட்டு

23 வயதில் இந்திய அணிக்குள் மானவ் சுதர்: ஜடேஜா இடத்திற்கு போட்டியா?

23 வயதான மானவ் சுதர், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகமாகியுள்ளார். ராஜஸ்தான் அணிக்காக ரஞ்சிக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட இவர், டெஸ்ட் அணியில்…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?