MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிஎஸ்கே பிளேயிங் 11 கசிவு: 3 கோடி பெற்ற முன்னாள் வீரர் அம்பலம்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிஎஸ்கே பிளேயிங் 11 கசிவு: 3 கோடி பெற்ற முன்னாள் வீரர் அம்பலம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - சிஎஸ்கே பிளேயிங் 11 கசிவு: 3 கோடி பெற்ற முன்னாள் வீரர் அம்பலம்

விளையாட்டு

சிஎஸ்கே பிளேயிங் 11 கசிவு: 3 கோடி பெற்ற முன்னாள் வீரர் அம்பலம்

Sri Prem Kumar R
Last updated: செப்டம்பர் 22, 2026 3:53 மணி
Sri Prem Kumar R
Share
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்பான செய்தி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்பான செய்தி
SHARE

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் பெயரை மையப்படுத்தி புதிய மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரபல புலனாய்வு ஊடகமான தெஹல்கா நடத்திய ரகசிய ஸ்டிங் ஆபரேஷனில், சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் விவரங்களை சூதாட்ட புக்கிகளுக்கு முன்கூட்டியே கசியவிட்டு 3 கோடி ரூபாய் பணம் பெற்றதாக முன்னாள் ரஞ்சி வீரர் ஒருவர் அதிர்ச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.

நாகாலாந்து அணிக்காக 6 முதல்தரப் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடிய ரஞ்சி வீரரான ரசித் பாட்டியா என்பவரிடம் இந்த ரகசிய வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. சூதாட்ட புக்கி போல சென்ற செய்தியாளரிடம் பேசிய ரசித் பாட்டியா, 2025 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவன் விவரங்களை டாஸ் போடுவதற்கு பல மணி நேரத்திற்கு முன்பே ஸ்னாப்சாட் செயலி வழியாக லண்டனில் உள்ள புக்கிகளுக்குக் கசியவிட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார். பொதுவாக, போட்டிக்கான பிளேயிங் லெவன் விவரங்கள் டாஸ் போடப்படும் போது போட்டி தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்புதான் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.

ஆனால், சிஎஸ்கே அணியில் உள்ள தனக்குத் தெரிந்த வீரர் மூலமாக இந்தத் தகவல்களை முன்கூட்டியே பெற்று புக்கிகளுக்கு விற்றதாக பாட்டியா தெரிவித்துள்ளார். ஒரு போட்டிக்கு 60 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 5 போட்டிகளுக்கு 3 கோடி ரூபாய் பெற்றதாகவும், இந்தத் தகவல்களை வைத்துத் தானும் நேரடியாகப் பந்தயம் கட்டி கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்ததாகவும் அவர் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், நடப்பு 2026 ஐபிஎல் சீசனிலும் இதே போன்ற தகவல்களைத் தருவதாக பேரம் பேசியுள்ளார். பிளேயிங் லெவன் விவரங்களைத் தர ஒரு போட்டிக்கு 60 லட்சம் ரூபாயும், களத்தில் ஸ்பாட் பிக்சிங் செய்வதற்கு ஒரு போட்டிக்கு 1 கோடி ரூபாயும் கேட்டதாக அந்த வீடியோவில் தெரியவந்துள்ளது. ஸ்பாட் பிக்சிங் செய்வதற்கு 90 சதவீத கேரண்டி தருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார். ஆனால், 2026 ஐபிஎல் ஏலத்தில் அந்த குறிப்பிட்ட சிஎஸ்கே வீரர் காயம் காரணமாக எந்த அணியாலும் எடுக்கப்படாததால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டதாக பாட்டியா கூறியுள்ளார்.

ஐபிஎல் வாய்ப்பு நழுவியதும், டெல்லி பிரீமியர் லீக் தொடரில் தனது கவனத்தைத் திருப்பியுள்ளார். சிஎஸ்கே-வில் பிளேயிங் லெவனை முன் கூட்டியே சொன்ன அந்த வீரர் டெல்லி பிரீமியர் லீக்கில் விளையாடுவதால், அங்கு மேட்ச் பிக்சிங் செய்வது மிகவும் எளிது என்று பாட்டியா கூறியுள்ளார். பேட்டர்களை வேண்டுமென்றே மெதுவாக ஆட வைப்பது, வேண்டுமென்றே ரன் அவுட் ஆவது போன்ற வழிகளில் ஆட்டத்தை மாற்றிக் காட்டுவதாக அவர் புக்கியிடம் பேரம் பேசியுள்ளார். இதனை உறுதிப்படுத்த புலனாய்வுக் குழுவினர் ஆகஸ்ட் 3 அன்று நடைபெற்ற டெல்லி லீக் போட்டியின் பிளேயிங் லெவனை பாட்டியாவிடம் முன்கூட்டியே கேட்டுள்ளனர். அவர் போட்டிக்கு முன் சொன்ன அதே வீரர்கள் பட்டியலே அதிகாரப்பூர்வ டாஸுக்கு பிறகும் வெளியானது ஆய்வில் உறுதியாகியுள்ளது.

இந்த ரகசியத் தகவல்களை சிஎஸ்கே அணியில் இருந்து கசியவிட்ட வீரரின் பெயரை பாட்டியா வெளிப்படையாகக் கூறவில்லை. எனினும், அவர் டெல்லியைச் சேர்ந்த 23 வயது ரஞ்சி வீரர் என்றும், அவர் 18 வயதாக இருக்கும் போதிலிருந்தே தனக்குப் பழக்கம் என்றும் பாட்டியா குறிப்பிட்டுள்ளார். அணியின் உள்விவகாரங்களை சூதாட்ட நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு விதி 2.3.1 மற்றும் 2.3.2-ன் கீழ் மிகக் கடுமையான குற்றமாகும்.

இந்த குற்றச்சாட்டு குறித்து சிஎஸ்கே நிர்வாகமோ அல்லது பிசிசிஐயோ இன்னும் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. முன்னதாக 2013-ல் குருநாத் மெய்யப்பன் மீதான சூதாட்டப் புகாரைத் தொடர்ந்து லோதா கமிட்டி பரிந்துரையின்படி சிஎஸ்கே அணி 2015-ல் 2 ஆண்டுகள் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் சிஎஸ்கே அணியின் பெயரை மையப்படுத்தி வெளியாகியுள்ள இந்த ஸ்டிங் ஆபரேஷன் வீடியோ ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் உலுக்கியுள்ளது.

வெறும் 32 ரன்னுக்கு ஆல்-அவுட்டான இந்திய அணி.. ஜப்பான் பந்துவீச்சில் கதறிய அபிஷேக், சஞ்சு, இஷான் போன்ற செய்திகளும் வெளியாகியுள்ளன.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CricketCSKIPLMatch FixingRashid Pathiaஐபிஎல்கிரிக்கெட்சிஎஸ்கேமேட்ச் பிக்சிங்ரசித் பாட்டியா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வீட்டிற்குள் வளர்க்கப்படும் புதினா செடி வீட்டிலேயே புதினா வளர்க்க 7 எளிய டிப்ஸ்!
Next Article த.வெ.க. நிர்வாகி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்த செய்தி அமைச்சருக்கு எதிராக வீடியோ: த.வெ.க. நிர்வாகி தற்கொலை முயற்சி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
விளையாட்டு

ஆப்கானிஸ்தான் தொடர்: தேர்வுக்குழுவின் பயம் – ஸ்ரீகாந்த் சரமாரி கேள்வி

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் அனுபவம் வாய்ந்த வீரர்களை சேர்த்த தேர்வுக்குழுவின் முடிவை முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்துள்ளார். இது பயத்தின் அடிப்படையில்…

3 Min Read
இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவர் பதவி குறித்த செய்தி
விளையாட்டு

தேர்வுக் குழு தலைவர் ஆக அஸ்வினுக்கு சிக்கல்: பிசிசிஐ விதிமுறைகள் என்ன சொல்கின்றன?

பிசிசிஐ தேர்வுக் குழு தலைவர் பதவிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் நியமிக்கப்பட உள்ளதாக பரவும் தகவல்களுக்கு மத்தியில், விதிமுறைகள் சிக்கலை ஏற்படுத்துகின்றன. அஸ்வின் 5 ஆண்டுகள் ஓய்வு பெற்றிருக்க…

2 Min Read
விளையாட்டு

கிரேக் சாப்பல் மீது சவுரவ் கங்குலி கடும் கோபம்: பகீர் தகவல்

கிரேக் சாப்பல் மீது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இம்ரான் கானுக்கு ஆதரவு கோரி கையெழுத்திட மறுத்ததும், மீண்டும்…

1 Min Read
கிரிக்கெட் விளையாடும் ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாள வீரர்கள்
விளையாட்டு

ஆசிய விளையாட்டில் ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ச்சித் தோல்வி கொடுத்த நேபாளம்!

ஆசிய விளையாட்டு கிரிக்கெட் தொடரில், முன்னணி அணியான ஆப்கானிஸ்தானை நேபாளம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்துள்ளது. இந்த வெற்றியால் ஆப்கானிஸ்தானின் காலிறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?