கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உயர்வு: கிராமுக்கு ரூ.10,000 வரை கடன்?

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெறுவோருக்கு சாதகமான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

தமிழகத்தில் நகைக்கடன் வாங்குவோருக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கிறது. மாநிலம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் தங்க நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவோருக்கு, ஒரு கிராமுக்கு வழங்கப்படும் கடன் தொகை உயர்த்தப்பட உள்ளது. தற்போது, கூட்டுறவு நிறுவனங்களில் ஒரு கிராமுக்கு அதிகபட்சமாக 8,000 ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. இந்த நிலையில், தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது. நேற்று நிலவரப்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் சவரன் விலை 1 லட்சத்து 19,600 ரூபாயாக பதிவாகியுள்ளது. தேசிய மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் தங்கத்தின் அடிப்படையில் ஒரு கிராமுக்கு அதிகபட்சமாக 10,000 ரூபாய் வரை கடன் வழங்கி வருகின்றன. இந்த போட்டியை சமாளித்து, அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும் நோக்கில், கூட்டுறவு நிறுவனங்களிலும் தங்க நகைக்கான கடன் தொகையை உயர்த்த கூட்டுறவுத் துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில், ஒரு கிராமுக்கு வழங்கப்படும் கடன் தொகையை 9,000 ரூபாய் முதல் 10,000 ரூபாய் வரை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான இறுதி ஒப்புதலுக்காக, வரும் வாரத்தில் கூட்டுறவுத் துறை உயரதிகாரிகளின் முக்கிய கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் இந்த கடன் உயர்வுக்கான திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பு நகைக்கடன் பெறுவோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version