உடலில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

ஆரோக்கியமான உணவுகள் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவும்.

நம் உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாகக் காண்போம். அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் உடனடியாகப் பின்பற்ற வேண்டிய பழக்கவழக்கங்கள் இவை.

பொதுவாக உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு கொழுப்பு அதிகமாகச் சேரும். ஆனால், இந்த கொழுப்பு நம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். எனவே, உடலில் உள்ள கொலஸ்ட்ராலை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைப் பார்ப்போம்.

ஆரோக்கியமான செல்களை உருவாக்க கொலஸ்ட்ரால் முக்கியப் பங்கு வகித்தாலும், இதயத்திற்கு கொலஸ்ட்ரால் அளவு குறைவாக இருப்பது நல்லது. முதலில், புகைப்பிடிப்பதை முற்றிலும் தவிர்ப்பது சிறந்தது. ஏனெனில், புகைப்பிடிப்பதால் நம் உடலில் உள்ள இரத்த நாளங்கள் வீக்கம் அடையும்.

அதுமட்டுமின்றி, தமனிகளில் இரத்த உறைவு ஏற்பட்டு பக்கவாதம் வரவும் இது வழிவகுக்கும். எனவே, இந்த சிக்கல்களில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால், புகைப்பிடிப்பதை நிறுத்துவது மிக அவசியம்.

மேலும், நாம் உண்ணும் உணவுகளில் அதிக கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை பெரும்பாலும் தவிர்ப்பதன் மூலம், நம் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதைத் தடுக்கலாம். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த முக்கியமாக நம் உடல் பருமனை குறைப்பது மிகவும் சிறந்தது.

உடல் எடையைக் குறைத்து கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்த, நார்ச்சத்து நிறைந்த உணவுகளான முளைகட்டிய பயிறு வகைகள், ஆப்பிள், ஓட்ஸ் போன்றவற்றை உண்பதால், நம் உடல் ஆரோக்கியமாகவும், கொலஸ்ட்ரால் குறைந்தும் காணப்படும். இந்த வாழ்க்கை முறை மாற்றங்கள் ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version