கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை ஏற்பாடு செய்துள்ளது. இந்த சிறப்பு முகாம் வரும் சனிக்கிழமை, 22.08.2026 அன்று காலை 8 மணியளவில் கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மெயின் ரோடு, ஈச்சனாரியில் அமைந்துள்ள இரத்தினம் குளோபல் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது.
இந்த மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில், உற்பத்தி துறை, ஜவுளித்துறை, இன்ஜினியரிங், கட்டுமானம், ஐ.டி துறை, ஆட்டோமொபைல்ஸ், விற்பனைத்துறை, மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகளில் சிறந்து விளங்கும் 250-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இதன் மூலம், சுமார் 15,000-க்கும் மேற்பட்ட பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த முகாமில் பங்கேற்க கல்வித் தகுதியைப் பொறுத்தவரை எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. 8ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டப் படிப்பு, முதுகலை பட்டப் படிப்பு, தொழில் கல்வி பயின்றவர்கள், செவிலியர்கள், பொறியியல் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் தாராளமாக விண்ணப்பிக்கலாம். இம்முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பதற்கான அனுமதி முற்றிலும் இலவசம்.
வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களுக்குப் பொருத்தமான வேலையைப் பெற்று பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளது. ஆர்வமுள்ள வேலைநாடும் இளைஞர்கள், தங்களின் விவரங்களை www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் 'candidate login' எனும் பிரிவில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, வேலை தேடும் மனுதாரர்கள் 0422-2642388 அல்லது 9499055937 ஆகிய தொலைபேசி எண்களில் காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
