MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை

இந்தியா

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை

Admin
Last updated: மே 27, 2026 9:37 மணி
Admin
Share
SHARE

புதுடெல்லி: மாநில அரசு விழாக்களின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில வாழ்த்துப் பாடல்கள் பாடப்படுவதை உறுதிசெய்ய, மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆணையில் தெளிவுரை வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் விஜய் ஒரு விரிவான கடிதத்தை அளித்துள்ளார். இந்த சந்திப்பின் போது, ​​இது தொடர்பாக முதல்வர் விஜய் தனது கோரிக்கையை பிரதமரிடம் முன்வைத்தார்.

இது தொடர்பாக முதல்வர் விஜய் தனது கடிதத்தில், 'சில அரசு விழாக்களின் போது தேசிய கீதத்தைப் பாடுவது தொடர்பான, மத்திய உள்துறை அமைச்சகத்தின் 28.01.2026 நாளிட்ட ஆணை எண்: 14/2/2025- Public குறித்து தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். தமிழக அரசும், தமிழக மக்களும் தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடலுக்கு மிகுந்த மரியாதை அளித்து வருகின்றனர். இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கு தமிழகம் எப்போதும் அர்ப்பணிப்புடன் உள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'தமிழகத்தில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' அரசு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடப்பட்டு வருவது குறித்து தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். 1891-ஆம் ஆண்டில் மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளையால் இயற்றப்பட்ட இந்தப் பாடல், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் ஒரு வாழ்த்துப் பாடலாகும். கடந்த பல்லாண்டுகளாக தமிழகம் முழுவதும் நடைபெறும் அரசு, கல்வி, பண்பாடு மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் இப்பாடல் பாடப்படுவது மரபாக இருந்து வருகிறது. தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல், தமிழகத்தின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்டு, மாநிலத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடப்பட வேண்டும் என தமிழக அரசு முறையாக அறிவித்துள்ளது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

'மேற்சொன்ன உள்துறை அமைச்சகத்தின் ஆணையைத் தொடர்ந்து, வந்தே மாதரம், நாட்டுப்பண் மற்றும் அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து என்ற வரிசைமுறையை மக்கள் மாளிகை பின்பற்றி வருகிறது. நாட்டுப்பண் பாடப்பட்ட பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தினைப் பாடும் இந்த வரிசைமுறை, மாநிலத்தில் நீண்டகாலமாக அரசால் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைக்கு மாறாக அமைந்துள்ளதால், தமிழகத்தின் பல்வேறு தரப்பிலிருந்தும் பொதுமக்களிடையே பெரும் கவலையையும் எதிர்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழ்மொழிப் பாரம்பரியம், பண்பாட்டு அடையாளம் மற்றும் ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளின் அடையாளமாக விளங்கும் தமிழ்த்தாய் வாழ்த்து, மாநிலத்தின் வாழ்த்துப் பாடலாகத் தமிழகத்தில் ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் மேற்படி ஆணையைத் தொடர்ந்து இந்த நடைமுறை சில குறிப்பிட்ட அரசு விழாக்களில் மாற்றப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் ஆணையில் மாநில வாழ்த்துப் பாடலை நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் பாடுவதற்கு யாதொரு தடையும் விதிக்கப்படவில்லை. எனினும் அண்மைக் காலங்களில் மக்கள் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் நிகழ்ச்சிகளின் இறுதியில் பாடப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட மாநில வாழ்த்துப் பாடல்கள், மாநில அரசு விழாக்களின் தொடக்கத்தில் பாடப்படும் வகையில் உள்துறை அமைச்சகத்தின் ஆணைக்கு உரிய தெளிவுரை வழங்கிட ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அத்தகைய தெளிவுரை, உள்துறை அமைச்சகத்தின் ஆணையைத் தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைக்கு இணக்கமாக மாற்றுவதுடன், நிர்வாக ரீதியிலான குழப்பங்களைத் தவிர்த்து, தமிழ்நாட்டு மக்களின் கலாச்சார உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிப்பதாகவும் அமையும். இவ்விவகாரத்தில் கனிவுடன், விரைந்து ஆவன செய்ய வேண்டும்' என்று கடிதத்தில் முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும், ஓசூர், கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறும் நிர்மலா சீதாராமனிடம் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Union Governmentதமிழ்த்தாய் வாழ்த்துதமிழ்நாடு அரசியல்பிரதமர் மோடிமுதல்வர் விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article திமுக குழப்பம்: தவெக அரசு மீது தாக்குதல் – அமைச்சர் நிர்மல் குமார் குற்றச்சாட்டு
Next Article சென்னையில் 30ம் தேதி மின் தடை: பாதிக்கும் பகுதிகள் அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

லாவா நிறுவனத்தின் லோகோ அல்லது வியட்நாம் படகு விபத்து தொடர்பான செய்திப் படம்

வியட்நாம் படகு விபத்து: லாவா நிறுவனம் ரூ.25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

வியட்நாமில் நடந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு லாவா நிறுவனம் ரூ.25 லட்சம்…

ஜூலை 14, 2026

UMANG செயலி பயனர்களின் தரவு கசிவு: ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி

மத்திய அரசின் UMANG செயலி பயனர்களின் தனிப்பட்ட…

ஜூலை 14, 2026

சிறையிலேயே பதவியேற்கலாம்: பாஜக கவுன்சிலருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

திருவனந்தபுரம் மாநகராட்சி பாஜக கவுன்சிலர் சுகதன், சிறையிலேயே…

ஜூலை 14, 2026

ரயில்வேயில் நூதன திருட்டு: 4 ஆண்டுகளில் 1.27 கோடி பெட்ஷீட், துண்டுகள் மாயம்!

இந்திய ரயில்வேயில் ஏசி பெட்டிகளில் பயணம் செய்யும்…

ஜூலை 14, 2026

மராட்டியத்தில் லாரி மோதி 3 பக்தர்கள் பலி: 4 பேர் காயம்

மராட்டியத்தில் ஆன்மீக யாத்திரை சென்ற பக்தர்கள் மீது…

ஜூலை 14, 2026

You Might Also Like

கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா
இந்தியா

கேரளாவில் போதைப்பொருள் வேட்டை: 6700க்கும் மேல் கைது!

கேரளாவில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் 6,700க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். ரூ.30-40 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தகவல்.

2 Min Read
லைஃப் ஸ்டைல்

டாஸ்மாக் கடைகள்: முதல்வர் விஜய்க்கு நடிகர் பார்த்திபன் அசத்தல் யோசனை!

டாஸ்மாக் கடைகள் செயல்படும் விதம் குறித்து முதல்வர் விஜய்க்கு நடிகர் பார்த்திபன் ஒரு புதுமையான யோசனையை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'நான் முதல்வரிடம் ஒரு…

1 Min Read
இந்தியா

அமர்நாத் யாத்திரை நாளை தொடக்கம்: உச்சகட்ட பாதுகாப்புடன் பக்தர்கள் புறப்பட்டனர்

புனித அமர்நாத் யாத்திரை நாளை தொடங்குகிறது. துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பஹல்காம் வழியாக செல்லும் இந்த யாத்திரை, உச்சகட்ட பாதுகாப்புடன்…

1 Min Read
இந்தியா

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருப்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் சுமார் 30 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. உண்டியல் காணிக்கை ஒரு நாளில் ரூ.3 கோடியே…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?