10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்வர் விஜய் இன்று விருதுகள் வழங்குகிறார்

முதல்-அமைச்சர் விஜய் இன்று 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விருதுகள் வழங்குகிறார்

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய், 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி வருகிறார். இந்த ஆண்டுக்கான சிறப்பு பாராட்டு விழா இன்று (04.11.2026, புதன்கிழமை) சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற உள்ளது.

இவ்விழாவில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொகுதிகள் வாரியாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர் செல்வங்கள் நேரில் அழைக்கப்பட்டு, முதல்-அமைச்சர் விஜய் அவர்களால் விருதுகள் வழங்கிப் பாராட்டப்பட உள்ளனர். அமைச்சர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இன்று பிற்பகல் 2 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்குகிறது.

குறிப்பாக, சென்னை நீலாங்கரையில் நடைபெறும் இந்த பாராட்டு விழாவில், குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் இன்று காலை 11 மணி முதல் விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள். அங்கு அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

மாணவர்களுக்கு மதிய உணவு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எதிர்காலச் சமுதாயம் வளமாகவும் ஆரோக்கியமாகவும் திகழ வேண்டும் என்பதில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அவர்கள் தனிப்பட்ட கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, மாணவர்களின் கல்வித்திறனை அங்கீகரிக்கும் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மதியம் சுமார் 2 மணி அளவில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர், முதல்-அமைச்சர், வெற்றித் தலைவர் விஜய் அவர்கள், மாணவச் செல்வங்களுக்கு அவர்களின் பெற்றோர் முன்னிலையில் சான்றிதழ்களையும் ஊக்கத் தொகையையும் வழங்கி மகிழ்வார். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தி கவுரவிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த விருது வழங்கும் விழா, மாணவர்களின் கல்விப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும், இது அவர்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதல்-அமைச்சர் விஜய்யின் இந்த முன்னெடுப்பு, மாணவர்களிடையே கல்வி குறித்த ஆர்வத்தை மேலும் தூண்டும் என நம்பப்படுகிறது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version