MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - லைஃப் ஸ்டைல் - குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

லைஃப் ஸ்டைல்

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

Admin
Last updated: ஜூன் 15, 2026 4:11 மணி
Admin
Share
SHARE

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் மூன்றரை வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பால் மனம் மாறாத குழந்தையை நான்கு மனித மிருகங்கள் தூக்கிச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. குழந்தையை இழந்த பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாட்டில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடர்வது மிகுந்த கவலையளிக்கிறது.' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், 'பாலியல் வன்கொடுமை செய்த நான்கு பேரும் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்றும், அவர்கள் கஞ்சா போதையில் இந்தக் கொடிய குற்றத்தை நிகழ்த்தியுள்ளனர்' என்றும் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற கொடூரமான குற்றங்களை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுவதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு இதே கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் கிராமத்தில் நான்காம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தையும் அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டினார். அப்போது பாமக நடத்திய தொடர் போராட்டத்திற்குப் பிறகுதான் குற்றவாளி கைது செய்யப்பட்டான் என்றும், விசாரணை 5 மாதங்களில் முடிக்கப்பட்டு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அவர் நினைவுபடுத்தினார். இப்போது மீண்டும் அதே பகுதியில் இன்னொரு கொடுமை நிகழ்ந்திருப்பது காவல்துறையின் தோல்வியையே காட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை ஒழித்து, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குமான பாதுகாப்பை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்றும், இதில் காவல்துறை தோல்வி அடைந்ததன் விளைவுதான் இந்த துயரம் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். அரசும் காவல்துறையும் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காமல், உடனடியாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Crime News Tamilஅன்புமணி ராமதாஸ்தமிழ்நாடு செய்திகள்பாமகபாலியல் வன்கொடுமை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article குழந்தைகளை சீரழிக்கும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை: வானதி சீனிவாசன்
Next Article தமிழ் மாநில காங்கிரஸில் இருந்து யுவராஜா விலகல்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே

அமித் ஷா பதவி விலக சிஜேபி நிறுவனர் வலியுறுத்தல்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜூலை 20 அன்று மாணவர்கள் மீது…

ஜூலை 30, 2026

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு: கர்நாடகாவில் நாளை பந்த்

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து,…

ஜூலை 30, 2026

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: கனிமொழி கண்டனம்

மாநில பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தின் முன்னுரிமையை மூன்றாம்…

ஜூலை 30, 2026

முரளி ஸ்ரீசங்கர் வெள்ளிப் பதக்கம்: பிரதமர் மோடி பாராட்டு

பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் இந்திய வீரர் முரளி…

ஜூலை 30, 2026

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஓராசிரியர் பள்ளிகள்: தமிழகம் எத்தனையாவது இடம்?

இந்தியாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே…

ஜூலை 30, 2026

You Might Also Like

பைக்கை சுத்தம் செய்யும் நபர்
லைஃப் ஸ்டைல்

பைக் பெயிண்ட் டேமேஜ் ஆகாமல் இருக்க டிப்ஸ்!

உங்கள் பைக்கின் இன்ஜின் சூடாக இருக்கும்போது தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும். இது இன்ஜின் பாகங்களுக்கு சேதம் விளைவிக்கும்.

2 Min Read
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர்
தமிழ்நாடு

காங்கிரஸ் பற்றி பேச அன்புமணிக்கு தகுதி இல்லை: மாணிக்கம் தாகூர்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் காங்கிரஸ் விமர்சனங்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பதிலடி. 'நம்மளே 4 எம்.எல்.ஏ ஜெயிக்குறதுக்கு அதிமுக-பாஜக கிட்ட கதை ஓட்டிட்டு…

2 Min Read
லைஃப் ஸ்டைல்

முதல்வர் ரங்கசாமியை புரோக்கர்கள் ஆட்டிப்படைக்கின்றனர் – சிவா குற்றச்சாட்டு

தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் ஆகியும் அரசு ஸ்தம்பித்து நிற்பதாகவும், முதல்வர் ரங்கசாமியை புரோக்கர்கள் ஆட்டிப்படைப்பதாகவும் திமுக அமைப்பாளர் சிவா குற்றம்சாட்டியுள்ளார்.

1 Min Read
லைஃப் ஸ்டைல்

பிரெஞ்சு ஓபன்: ஸ்வரேவ் மீண்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்டர் ஸ்வரேவ் இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முனைப்பில் உள்ளார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?