MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சென்னையில் மதுபானம் விற்ற 2 பெண்கள் கைது: 39 பாட்டில்கள் பறிமுதல்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சென்னையில் மதுபானம் விற்ற 2 பெண்கள் கைது: 39 பாட்டில்கள் பறிமுதல்!

தமிழ்நாடு

சென்னையில் மதுபானம் விற்ற 2 பெண்கள் கைது: 39 பாட்டில்கள் பறிமுதல்!

Admin
Last updated: மே 16, 2026 6:29 மணி
Admin
Share
SHARE

சென்னையில் சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் நபர்களை பிடிக்க காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அண்ணாசாலை மற்றும் அயனாவரம் பகுதிகளில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து மொத்தம் 39 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நேற்று, D-2 அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினர், அண்ணாசாலை, பார்டர் தோட்டம், களிமண்புரம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்டவிரோதமாக மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த அமுலு என்பவரை கையும் களவுமாக பிடித்தனர். அவரிடமிருந்து 180 மி.லி அளவு கொண்ட 34 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல், K-2 அயனாவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான குழுவினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அயனாவரம், பழனி ஆண்டவர் கோயில் தெருவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானங்களை விற்பனை செய்து கொண்டிருந்த ஜோதிபாய் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 180 மி.லி அளவு கொண்ட 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட இரு பெண்களும் விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னையில் இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை தொடர்ந்து கடுமையான நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai PoliceTamil Nadu Newsசென்னைபெண்கள் கைதுமதுவிலக்கு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஈழத்தமிழர் குரல்: விஜய்க்கு இலங்கை எம்.பி கோரிக்கை!
Next Article ரூ.182 கோடி போதைப்பொருள்: ‘ஆபரேஷன் ரேஜ்பில்’ வெற்றி – அமித் ஷா பாராட்டு!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

தமிழக முதல்வர் விஜய் கரூர் வருகை

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று திட்டமிட்டபடி கரூர் மாவட்டத்திற்கு வருகை…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

சிறு, குறு தொழில்கள் நசுக்கப்படுகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் சிறு, குறு தொழில்கள் திட்டமிட்டு நசுக்கப்படுவதாகவும்,…

ஜூலை 7, 2026

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

திருப்பூரில் 7 மூட்டை கடிதங்களை பதுக்கிய தபால்காரர் சஸ்பெண்ட்!

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் தபால்காரர் செந்தில்குமார், பொதுமக்களின் 7 மூட்டை கடிதங்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

தவெக எம்எல்ஏக்களுக்கு ரூ.50 கோடி பேரம்: செந்தில்பாலாஜி மீது நிர்மல்குமார் குற்றச்சாட்டு

தவெக எம்எல்ஏக்களிடம் ரூ.50 கோடி வரை பேரம் பேசியதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கு செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர்கள் காரணமாக இருக்கலாம் என்றும் அவர்…

2 Min Read
தமிழ்நாடு

மின்வாரிய வெள்ளை அறிக்கை நாளை மறுநாள் வெளியீடு – அமைச்சர் நிர்மல்குமார்

நாளை மறுநாள் மின்வாரியத்துறையின் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்றும், புதிதாக நியமிக்கப்பட்ட 300 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்குவார் என்றும் மின்சாரத்துறை அமைச்சர்…

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு: அரசுக்கு ராமதாஸ் கடும் எச்சரிக்கை

தமிழகத்தில் தொடரும் கொலை, தாக்குதல், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமைகள், பழிக்குப் பழி வன்முறைச் சம்பவங்கள் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கவலை தெரிவித்துள்ளார். சட்டம்-ஒழுங்கை…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?