MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னை திரும்புவோருக்கு குட் நியூஸ்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னை திரும்புவோருக்கு குட் நியூஸ்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சென்னை திரும்புவோருக்கு குட் நியூஸ்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழ்நாடு

சென்னை திரும்புவோருக்கு குட் நியூஸ்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Fernandez
Last updated: செப்டம்பர் 14, 2026 7:33 காலை
Fernandez
Share
சென்னை திரும்புவோருக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை திரும்புவோருக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்
SHARE

விநாயகர் சதுர்த்தி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு, சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்த பொதுமக்கள், மீண்டும் சென்னை திரும்புவதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.

கடந்த 11.09.2026 முதல் 12.09.2026 வரை, சென்னையிலிருந்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் மூலம் சுமார் 2,31,450 பேர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். தொடர் விடுமுறை முடிந்து, வரும் 14.09.2026 மற்றும் 15.09.2026 ஆகிய நாட்களில், திருச்சி, மதுரை, திண்டுக்கல், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர், கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் சென்னைக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எதிர்பார்ப்பைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சென்னை திரும்புவதற்காக, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 14.09.2026 அன்று கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு மட்டும் 2,240 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் திருச்சிக்கு 255, மதுரை மற்றும் திண்டுக்கல்லுக்கு 300, சேலத்திற்கு 200, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் வேலூருக்கு 195, கோயம்புத்தூருக்கு 50, திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, தென்காசி ஆகிய ஊர்களுக்கு தலா 50 பேருந்துகள் என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கும்பகோணத்துக்கு 225, திருவண்ணாமலைக்கு 325, விழுப்புரத்துக்கு 185 மற்றும் இதர ஊர்களிலிருந்து 305 பேருந்துகள் இயக்கப்படும்.

அடுத்த நாளான 15.09.2026 அன்று, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு 1,325 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் திருச்சிக்கு 105, மதுரை மற்றும் திண்டுக்கல்லுக்கு 75, சேலத்திற்கு 75, கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் வேலூருக்கு 200, கோயம்புத்தூருக்கு 20, திருநெல்வேலிக்கு 10, நாகர்கோவிலுக்கு 10, தூத்துக்குடிக்கு 15, தென்காசிக்கு 10, கும்பகோணத்துக்கு 125, திருவண்ணாமலைக்கு 175, விழுப்புரத்துக்கு 85 மற்றும் இதர ஊர்களிலிருந்து 420 பேருந்துகள் இயக்கப்படும். ஆக மொத்தம், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு மட்டும் இரண்டு நாட்களில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இது தவிர, மாதவரம் பேருந்து முனையத்திற்கு 160 சிறப்புப் பேருந்துகளும், கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு 370 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், அந்தந்த பேருந்து நிலையங்களில் பணியில் உள்ள அலுவலர்கள் பயணிகளின் வருகை மற்றும் தேவையை நேரடியாகக் கண்காணித்து, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை உடனுக்குடன் இயக்கவும் சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் சிறப்புப் பேருந்துகளின் இயக்கத்தை ஒருங்கிணைத்து கண்காணிப்பதற்காக, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) மற்றும் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) ஆகியவற்றின் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க பொது மேலாளர் நிலையிலான அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை), திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் ஆகியவற்றின் பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க துணை மேலாளர் / உதவி மேலாளர் நிலையிலான அதிகாரிகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பயணிகளின் வருகையை தொடர்ந்து கண்காணித்து, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகளை உடனடியாக இயக்குவதற்காக சம்பந்தப்பட்ட போக்குவரத்துக் கழகங்களின் ஒருங்கிணைப்பு அலுவலர்களும் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட போக்குவரத்து துறை அமைச்சர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை வந்தடையும் பயணிகள் தங்கள் இருப்பிடங்களுக்கு செல்ல ஏதுவாக மாநகர் போக்குவரத்துக் கழகம் (MTC) சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து வழக்கமாக 47 வழித்தடங்களில் 508 பேருந்துகள் மூலம் 2,107 பயண நடைகளும், கிளாம்பாக்கம் வழியாக 9 வழித்தடங்களில் 130 பேருந்துகள் மூலம் 1,362 பயண நடைகளும் இயக்கப்பட்டு வருகின்றன. இதனுடன் கூடுதலாக, 14.09.2026 மாலை மற்றும் இரவு நேரங்களில் 50 சிறப்புப் பேருந்துகள் மூலம் 400 கூடுதல் பயண நடைகளும், 15.09.2026 அதிகாலை முதல் மேலும் 150 கூடுதல் பயண நடைகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகள் கோயம்பேடு, இராயபுரம், தீவுத்திடல், திருவான்மியூர், மாதவரம், செங்குன்றம், ஆவடி, பூந்தமல்லி, தாம்பரம், விமான நிலையம், கிண்டி, வேளச்சேரி, சோழிங்கநல்லூர், தண்டையார்பேட்டை, பாரிமுனை, பட்டாபிராம், கேளம்பாக்கம், திருப்போரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு இயக்கப்பட உள்ளன.

ரயில் மூலம் சென்னை திரும்பும் பயணிகளுக்கும் கூடுதல் பேருந்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ரயில் நிலையங்களிலிருந்தும் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் மாநகரப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அதிகமாகக் கூடும் இடங்களில், அவர்களின் தேவைக்கேற்ப மாற்று வழித்தடங்களிலும் கூடுதல் பேருந்துகள் உடனடியாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பொதுமக்கள், தங்கள் ஊர்களிலிருந்து சென்னை வந்து சேருவது முதல், சென்னையில் தங்களது இருப்பிடங்களுக்குச் சென்று சேருவது வரை தடையற்ற பொதுப் போக்குவரத்து வசதி கிடைக்கும் வகையில் போக்குவரத்துத் துறை சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ChennaiHolidaysKilambakkam Bus TerminusMTCSpecial BusesVinayagar Chaturthiகிளாம்பாக்கம் பேருந்து முனையம்சிறப்பு பேருந்துகள்சென்னைபோக்குவரத்து துறைவிடுமுறைவிநாயகர் சதுர்த்தி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிரிக்ஸ் மாநாடு: ரஷ்யா புறப்பட்டார் அதிபர் புதின்
Next Article குழந்தைகளுக்கு மீன் கொடுப்பதன் நன்மைகள் பற்றிய செய்தி குழந்தைகளுக்கு மீன் கொடுங்கள்: நோய்களைத் தடுக்கும் அற்புத நன்மைகள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண்

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் விவாகரத்து?

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தனது மனைவி அன்னா லெஸ்னவாவிடமிருந்து பிரிந்து…

நவம்பர் 10, 2026

காற்று மாசு மரணங்களை மறைக்கிறதா மோடி அரசு? காங்கிரஸ் கேள்வி

இந்தியாவில் காற்று மாசுபாட்டால் ஏற்படும் உயிரிழப்புகளை மத்திய…

நவம்பர் 9, 2026

பாபர் மசூதி இடிப்பு: சோனியா காந்தியின் கருத்து – பாஜக விமர்சனம்

1992ல் பாபர் மசூதி இடிப்பைக் கண்டு கண்கலங்கியதாக…

நவம்பர் 9, 2026

மாரடைப்பால் இறந்த வேட்பாளர் திவ்யா வெற்றி பெற்றார்

ஆந்திராவில் மண்டல பரிஷத் தேர்தலில் போட்டியிட்ட ஜனசேனா…

நவம்பர் 8, 2026

பஸ்தரில் பாதுகாப்புப் படையினருடன் பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

சத்தீஸ்கரின் பஸ்தர் பகுதிக்கு வருகை தந்துள்ள பிரதமர்…

நவம்பர் 8, 2026

You Might Also Like

பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி
தமிழ்நாடு

உதயநிதியின் பேச்சு அருவருப்பானது: நாராயணன் திருப்பதி கண்டனம்

தஞ்சையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து பேசிய இரட்டை அர்த்தப் பேச்சு அருவருப்பானது என பாஜக நிர்வாகி நாராயணன் திருப்பதி…

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் ரூ.5 லட்சம் வாசனை திரவியங்கள் பறிமுதல்: ஓட்டுநர் கைது

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வாசனை திரவியங்களை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்து, ஆட்டோ ஓட்டுநரை கைது செய்துள்ளனர்.

1 Min Read
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இந்திய வீரர்கள்
தமிழ்நாடு

காமன்வெல்த்: 13 தங்கம்! 39 பதக்கங்களுடன் 4வது இடம் பிடித்தது இந்தியா!

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா 13 தங்கம், 17 வெள்ளி, 9 வெண்கலம் என மொத்தம் 39 பதக்கங்களுடன் 4வது இடத்தைப் பிடித்தது. 2030ல்…

2 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தைக் காக்கும் வலிமை நமக்கே! – ஸ்டாலின் உறுதி

மு.க. ஸ்டாலின், தமிழகத்தின் நலன் மற்றும் உரிமைகளைக் காக்கும் தனது கட்சியின் உறுதியைத் தெரிவித்துள்ளார். தேர்தல் களத்தில் உதவிய அனைத்துக் கட்சிகளுக்கும் நன்றி கூறி, தமிழ்நாட்டைக் காக்கும்…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?