MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னையில் இன்று முதல் மாபெரும் ரேபிஸ் தடுப்பூசி முகாம் தொடக்கம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னையில் இன்று முதல் மாபெரும் ரேபிஸ் தடுப்பூசி முகாம் தொடக்கம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - சென்னையில் இன்று முதல் மாபெரும் ரேபிஸ் தடுப்பூசி முகாம் தொடக்கம்!

தமிழ்நாடு

சென்னையில் இன்று முதல் மாபெரும் ரேபிஸ் தடுப்பூசி முகாம் தொடக்கம்!

Fernandez
Last updated: ஆகஸ்ட் 11, 2026 6:54 காலை
Fernandez
Share
சென்னையில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் கால்நடை மருத்துவர்
சென்னையில் இன்று முதல் தொடங்குகிறது மாபெரும் ரேபிஸ் தடுப்பூசி முகாம்
SHARE

பெருநகர சென்னை மாநகராட்சியில் பொதுமக்களை வெறிநாய்க்கடி நோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கில், 'வெறிநாய்க்கடிநோய் இல்லா சென்னை'யை உருவாக்கும் மாபெரும் சிறப்பு முகாம் இன்று (11.08.2026) முதல் தொடங்குகிறது. பெருநகர சென்னை மாநகராட்சியின் 2026-2027 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, அனைத்து தெரு நாய்களுக்கும் வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தும் இந்த மாபெரும் திட்டம், நாய்கள் வசிக்கும் தெருக்களுக்கே சென்று செயல்படுத்தப்பட உள்ளது.

மண்டல வாரியாக, கோட்டம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள நாய் பிடிக்கும் பணியாளர்கள், வலைகளைப் பயன்படுத்தி தெரு நாய்களைப் பிடித்து, கால்நடை மருத்துவர்கள் மூலம் அவற்றுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்க மருந்து செலுத்துவார்கள். பின்னர், நாய்களுக்கு வண்ண சாயம் தெளித்து அடையாளப்படுத்தி, அவை மீண்டும் அவை வசித்த இடங்களிலேயே விடுவிக்கப்படும். இந்த சிறப்பு முகாம்கள் மூலம் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள தெரு நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படும்.

இந்த மாபெரும் திட்டத்திற்காக, நாள் ஒன்றுக்கு சுமார் 100 தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்குடன் 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், ஒரு நாளைக்கு தோராயமாக 3000 தெரு நாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 3 மண்டலங்களில் தலா 10 குழுக்கள் வீதம் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது.

மேலும், வளர்ப்பு நாய்கள் மற்றும் பூனைகளின் உரிமையாளர்களும் தங்களின் செல்லப்பிராணிகளுக்கு இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்தி, இலவசமாக ரேபிஸ் நோய்த் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது செல்லப்பிராணிகளின் நலனையும் உறுதி செய்யும்.

கடந்த ஆண்டு, பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் 1,47,545 தெரு நாய்களுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த ஆண்டு, மண்டலம் 1ல் 14 நாட்களும், மண்டலம் 2ல் 9 நாட்களும், மண்டலம் 4ல் 14 நாட்களும் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து மண்டலங்களிலும் இம்முகாம் விரிவுபடுத்தப்பட்டு, 75 வேலை நாட்களுக்குள் சுமார் 2,00,000 நாய்களுக்கு ரேபிஸ் நோய்த் தடுப்பூசியும், ஒட்டுண்ணி நீக்கும் ஊசியும் அளிக்கப்பட உள்ளது.

இந்த சிறப்பு முகாம்கள் மூலம் 'வெறிநாய்க்கடிநோய் இல்லா சென்னை' என்ற இலக்கை அடைய, பொது மக்களும், செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களும், விலங்கு நல ஆர்வலர்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. ஆணையர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், இணை ஆணையர் (சுகாதாரம்), தலைமை கால்நடை மருத்துவ அலுவலர் மற்றும் கூடுதல் தலைமை கால்நடை மருத்துவ அலுவலர்கள், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மருத்துவர்கள் மற்றும் Worldwide Veterinary Services (WVS) நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் இம்முகாம் தொய்வின்றி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai CorporationPetsRabies VaccinationStreet Dogsசெல்லப்பிராணிகள்சென்னை மாநகராட்சிதெரு நாய்கள்ரேபிஸ் தடுப்பூசிவெறிநாய்க்கடி நோய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் யு.பி.ஐ. பரிவர்த்தனைக்கு கட்டணம் இல்லை – நிர்மலா சீதாராமன்
Next Article தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வு ரத்து தீர்மானம் குறித்த அறிவிப்பு நீட் தேர்வு ரத்து: இன்று தமிழக அரசு தனித்தீர்மானம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் சாவர்க்கர் குறித்து கேள்வி கேட்ட ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

கேரளாவில் சாவர்க்கர் கேள்வி கேட்ட ஆசிரியர் சஸ்பெண்ட்

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர வினாடி வினா போட்டியில்…

ஆகஸ்ட் 11, 2026

நவோதயா பள்ளிகள்: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும்படி மத்திய அரசுக்கு…

ஆகஸ்ட் 11, 2026

கேரளாவில் தேவாலய தகராறு: பாதிரியார்கள் உட்பட 22 பேர் மீது வழக்கு

கேரளாவின் எர்ணாகுளம் பகுதியில் உள்ள தேவாலயத்தை மையமாக…

ஆகஸ்ட் 11, 2026

மருமகன் வெளிநாடு செல்ல சுப்ரீம் கோர்ட் அனுமதி

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன்…

ஆகஸ்ட் 11, 2026

வயலில் புதைத்த ரூ.5 லட்சம் பணத்தை மறந்த விவசாயி – கரையான் அரித்து நாசம்

ராஜஸ்தானில் ரூ.5 லட்சத்தை வயலில் புதைத்த விவசாயி,…

ஆகஸ்ட் 11, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மின்சார வாரிய தேர்வில் அநீதி – அண்ணாமலை கண்டனம்!

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் உதவி மின் பொறியாளர் பணியிட நியமனங்களில் ஏற்பட்ட நிர்வாகக் குளறுபடிகள் மற்றும் வயது வரம்பு குளறுபடிகள் குறித்து 'வீ த லீடர்ஸ்'…

2 Min Read
தமிழ்நாடு

திருச்சி கிழக்கு தொகுதி- எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார் முதலமைச்சர் விஜய்

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட்டார். இந்த இரு தொகுதிகளிலும் விஜய் அபார வெற்றார். இதையடுத்து இன்று…

0 Min Read
தமிழ்நாடு

உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்கு துணையிருப்போம்: மு.க.ஸ்டாலின்

ஓராண்டில் 22 குடும்பங்களுக்கு உதவித்தொகை வழங்கியபோது நெஞ்சம் நெகிழ்ந்ததாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்கு நாம் துணையாக நிற்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

1 Min Read
பெருவில் நாஸ்கா கோடுகளைப் பார்க்கச் சென்ற விமானம் விபத்துக்குள்ளான காட்சி
தமிழ்நாடு

பெருவில் சோகம்: நாஸ்கா கோடுகளைப் பார்க்கச் சென்ற விமானம் விபத்து – 13 பேர் உயிரிழப்பு

பெருவில் நாஸ்கா கோடுகளைப் பார்க்கச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி, துணை விமானி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அதிபர் கெய்கோ புஜிமோரி இரங்கல் தெரிவித்துள்ளார்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?